செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

‘வருமுன் காப்போம்’ திட்டம் மீண்டும் தொடக்கம்- மு.க.ஸ்டாலின் வாழப்பாடியில் தொடங்கி வைத்தார்!

‘வருமுன் காப்போம்’ திட்டம் மீண்டும் தொடக்கம்- மு.க.ஸ்டாலின் வாழப்பாடியில் தொடங்கி வைத்தார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
‘வருமுன் காப்போம்’ திட்டம் மீண்டும் தொடக்கம்- மு.க.ஸ்டாலின் வாழப்பாடியில் தொடங்கி வைத்தார்! மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது 2006-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி வருமுன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் பூந்தமல்லி அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக எந்த செயல்பாடுகளும் இல்லாமல் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தி.மு.க. ஆட்சி மீண்டும் வந்ததும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். அதன்படி நடந்து முடிந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மருத்துவத்துறை சார்பில் 110 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்...
முதுகெலும்பை வலுப்படுத்தும் தண்டாசனம்!

முதுகெலும்பை வலுப்படுத்தும் தண்டாசனம்!

CINI NEWS, helth tips, HOME SLIDER, NEWS
முதுகெலும்பை வலுப்படுத்தும் தண்டாசனம்! உட்கார்ந்து செய்யும் ஆசனங்களின் அடிப்படை தண்டாசனம் எனப்படும் நிலை. நிமிர்ந்து உட்கார்ந்து கால்களை நீட்டுவதுதான் இந்த ஆசனம். உடல் நேராக இருக்க வேண்டும். இரண்டு கைகளும் இடுப்புக்குப் பின்னால் இருக்க வேண்டும். கைகளும் வளையாமல் நேராக இருக்க வேண்டும். நீட்டியிருக்கும் கால்களின் அடிப்பகுதி, கீழே அழுத்தியிருக்க வேண்டும். இடுப்பு எலும்புகள் கீழே அழுத்தியிருக்க வேண்டும். கைகளை அழுத்தி மார்பை நன்கு விரிவடையச் செய்யுங்கள். முதுகெலும்பை நேராக வைத்திருங்கள். தோள்பட்டைகளும் விரிந்திருக்க வேண்டும். தொடைகள், முழங்கால்கள் தளர்வாக இருக்கக் கூடாது. குதிகால்களை முடிந்தவரை வெளிப்புறமாகத் தள்ளுங்கள். நுனிக் கால்களை முன்னோக்கி இழுங்கள். கால் விரல்கள் உங்களை நோக்கியபடி இருக்கட்டும். மூச்சை ஆழமாக இழுத்து விடுங்கள். மூன்று அல்லது ஐந்து மூச்சு வரை இதே நிலையில் இருக்கல...
மாரடைப்பு வராமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன!

மாரடைப்பு வராமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மாரடைப்பு வராமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன! கடலூர் கல்யாண் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இருதய நோய் நிபுணர் டாக்டர் கல்யாணராமன் கூறியதாவது:- இருதய நோய் (மாரடைப்பு) உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாகும். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், புகைபிடித்தல், காற்று மாசு ஆகியவற்றால் இருதய நோய் வர வாய்ப்பு உள்ளது. இருதய நோயுடன் வாழும் 520 மில்லியன் மக்களுக்கு கோவிட்-19 கடுமையான இதய பாதிப்பை ஏற்படுத்துகிறது.. இதனால் இருதய நோய் உள்ளவர்கள் வழக்கமான இருதய பரிசோதனை செய்துகொள்ளாமல் அச்சப்பட்டு வீட்டில் தனிமையாக இருக்கின்றனர். சர்க்கரை பானங்கள், பழச்சாறுகளை தவிர்த்து அதற்கு பதிலாக தண்ணீர் அல்லது இனிப்பு சேர்க்கப்படாத பழச்சாறுகளை தேர்வு செய்து ஒரு ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும். நாள்தோறும் நாம் தேர்வு செய்த சைவ உணவுகள் மொத்த அளவை, 5 பாகங்களாக பிரித்து, அதில்...
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் பகத் பாசில்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் பகத் பாசில்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் பகத் பாசில்! தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர், அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதன்மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்த மாரி செல்வராஜ், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வரும் பகத் பாசில், அப்படத்தை முடித்த பின் மாரி செல்வராஜ...
சென்னையில் அரசு பேருந்தில் தீவிபத்து- அலறியடித்து ஓடிய பயணிகள்!

சென்னையில் அரசு பேருந்தில் தீவிபத்து- அலறியடித்து ஓடிய பயணிகள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னையில் அரசு பேருந்தில் தீவிபத்து- அலறியடித்து ஓடிய பயணிகள்! கோயம்பேடு அருகே இன்று காலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்தின் என்ஜினியிலிருந்து புகை கிளம்பியது. இதைக்கண்ட டிரைவர் உடனே பயணிகளை அரசு பேருந்தில் இருந்து இறங்க சொன்னார். அடுத்த ஒரு சில நிமிடங்களில் தீ மளமளவென பற்றி எரிந்தது. டிரைவர் பயணிகளை உடனடியாக பேருந்தில் இருந்து இறங்க சொன்னதால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். அரசு பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
  மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு  போராட்டத்துக்கு (பாரத் பந்த்) விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. விவசாய சங்கங்கள் இணைந்த 'சம்யுக்தா கிசான் மோர்ச்சா' கூட்டமைப்பு இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கி நடைபெறுகிறது. முழு அடைப்பு  போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பஞ்சாப் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆதரவு கொடுத்துள்ளார். இது தவிர பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள், ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலமும் ஆதரவு தெரிவித்துள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி மற்றும் பிற நிறுவனங்கள், கடைகள், மற்றும் வணிக நி...
விமர்சகர்களுக்கு அறிவில்லை எனச்சொல்லும் வெற்றிமாறனுக்கு அறிவு இருக்கா? கோடங்கி கேள்வி

விமர்சகர்களுக்கு அறிவில்லை எனச்சொல்லும் வெற்றிமாறனுக்கு அறிவு இருக்கா? கோடங்கி கேள்வி

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், வீடியோ
  விமர்சகர்களுக்கு அறிவில்லை எனச்சொல்லும் வெற்றிமாறனுக்கு அறிவு இருக்கா? கோடங்கி கேள்வி   https://youtu.be/r3VSbi1tJ0s
விஜய்யின் ஜாலி வாக்… வைரலாகும் வீடியோ!

விஜய்யின் ஜாலி வாக்… வைரலாகும் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
விஜய்யின் ஜாலி வாக்... வைரலாகும் வீடியோ! விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பீஸ்ட். இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க, செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அடுத்த கட்டமாக டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் விஜய் சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றார். விமான நிலையத்திற்குள் விஜய் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் விஜய், டெல்லியில் உள்ள ஷாப்பிங் மாலில் கூலாக நடந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் அமைதியாக விஜய் வலம் வரும் காட்சிகள் சமூ...
அது ஒரு இம்சை… தனிமையே பேரின்பம் – செல்வராகவன்!

அது ஒரு இம்சை… தனிமையே பேரின்பம் – செல்வராகவன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
அது ஒரு இம்சை... தனிமையே பேரின்பம் - செல்வராகவன்! காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே ஆகிய படங்களை இயக்கினார். தற்போது மீண்டும் தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி சில கருத்துக்களை பதிவு செய்து வருவார். தற்போது, ‘இன்னொருவர் இருந்தால்தான் நிம்மதி என்று ஒரு பொழுதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதைப் போல் ஒரு இம்சை எதுவும் இல்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி.’ என்று பதிவு செய்திருக்கிறார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்....