ஒரு லட்சம் பேர் நிரந்தரமாக வாழுகின்ற இடமாக கைலாசா கட்டமைக்கப்படும் -நித்யானந்தா
ஒரு லட்சம் பேர் நிரந்தரமாக வாழுகின்ற இடமாக அடுத்த 5 ஆண்டுகளில் கைலாசா கட்டமைக்கப்படும் -நித்யானந்தா
கர்நாடகா மாநிலம் பிடதியை தலைமையிடமாக கொண்டு ஆசிரமங்கள் நடத்தி வந்த சாமியார் நித்யானந்தா மீது கடத்தல், பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
இதைத்தொடர்ந்து அவர் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். பாஸ்போர்ட் காலாவதியான நிலையில் அவர் கடல் மார்க்கமாக நேபாளம் வழியாக தப்பி சென்றதாக தகவல்கள் வெளியானது.
இதையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில் அவரை பிடிக்க சர்வதேச போலீசார் (இன்டர்போல்) உதவியுடன் ‘ரெட்கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உலகம் முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இதற்கிடையே நித்யானந்தா சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டார். அதில் கைலாசா என்ற பெயரில் புதிய நாட்டை உருவாக்கி உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய அவர் அந்நா...









