திமுக-வுக்கு செல்லுமிடமெங்கும் பெருகிவரும் ஆதரவைப் பார்த்து பதற்றத்தில் அதிமுக தடைபோடுகிறது -ஸ்டாலின்
திமுக-வுக்கு செல்லுமிடமெங்கும் பெருகிவரும் ஆதரவைப் பார்த்து, பதற்றத்தில் தடைபோடுகிறது
@CMOTamilNadu
அரசு! அதிகாரப் பூச்சாண்டிக்கு அஞ்சுவோரல்ல நாங்கள்! திமுக-வின் #WeRejectADMK மக்கள் கிராமசபை கூட்டங்கள் திட்டமிட்டபடி, ஜனவரி 10 வரை தொடரும்; இது உறுதி!
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி திமுக நிர்வாகிகள், தாங்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில் அனல் பறக்கப் பேசி வருகிறார்கள். இதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசியுள்ளார்.
திமுக சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கூட்டங்களில் ஸ்டாலினும் பங்கேற்று மக்களுடன் கலந்துரையாடி வருகிறார். இந்தக் கூட்டங்களுக்குத் தடை விதிக்கும் நோக்கில் தமிழக அரசு நடவடிக்கை ...









