சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

இணையத்தில் வைரல் ஆன சூர்யா-ஜோதிகா பொங்கல் கொண்டாட்ட படம்!

இணையத்தில் வைரல் ஆன சூர்யா-ஜோதிகா பொங்கல் கொண்டாட்ட படம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  சூர்யா ஜோதிகாவின் பொங்கல் கொண்டாட்ட படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஜெய் பீம் சர்ச்சைகளுக்கு பின் எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்திருக்கும் சூர்யா தனது வீட்டில் காதல் மனைவி ஜோதிகாவுடன் பொங்கல் வைத்து கொண்டாடினார். அந்த படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
24 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை தட்டிச் சென்ற கார்த்திக்!

24 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை தட்டிச் சென்ற கார்த்திக்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
24 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை தட்டிச் சென்ற கார்த்திக்! மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி வழக்கமான உற்சாகத்துடன் நடத்தப்பட்டது. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை மீடுபிடி வீரர்கள் பிடித்து விதவிதமான பரிசுகளை வென்றனர். இதேபோல் வீரர்களின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டிய காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மொத்தம் 7 சுற்றுகளாக வீரர்கள் களமிறக்கப்பட்டு, காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக செயல்படும் வீரர்கள் அடுத்தடுத்த  சுற்றுக்கு முன்னேறினர். இதில் மதுரை வலையங்குளத்தைச் சேர்ந்த முருகன் என்ற மாடுபிடி வீரர் களத்தில் நீண்டநேரம் களத்தில் நின்று காளைகளை அடக்கி முதலிடத்தல் இருந்தார். அவரைத் தொடர்ந்து அவனியாபுரம் கார்த்திக் இரண்டாவது இடத்தில் பின்தொடர்ந்தார் பிற்பகலுக்குப் பிறகு முதலிடத்தை ...
தனி ஹெலிகாபடரில் பறந்து வந்து ஐய்யப்பனை தரிசித்த பாலிவுட் ஹீரோ!

தனி ஹெலிகாபடரில் பறந்து வந்து ஐய்யப்பனை தரிசித்த பாலிவுட் ஹீரோ!

HOME SLIDER, செய்திகள், நடிகர்கள்
தனி ஹெலிகாபடரில் பறந்து வந்து ஐய்யப்பனை தரிசித்த பாலிவுட் ஹீரோ! பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் சபரிமலை வந்தார். தனி ஹெலிகாப்டர் மூலம் கொச்சி வந்த அவர், 11.30 மணிக்கு சபரிமலை ஐயப்பனை தரிசிக்க மலைப்பயணம் மேற்கொண்டார். பின்னர் தந்திரி மற்றும் மேல்சாந்தியை சந்தித்து ஆசி பெற்றார். மாளிகைபுரம் நடையில் தரிசனம் மற்றும் பிரசாதங்களை முடித்துக் கொண்டு திரும்பினார். அஜய் தேவ்கன் தற்போது 4வது முறையான சபரிமலை யாத்திரை மேற்கொண்டுள்ளார். ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் கத்யாவதி ஆகிய படங்கள் அஜய் நடிப்பில் வெளியாக உள்ளன. பொங்கல் கொண்டாட்டமாக ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய படங்கள் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப் போனது. அமிதாப் பச்சனை வைத்து ரன்வே 34 படத்தையும் அஜய் தேவ்கன் இயக்கி வருகிறார். இவர் இயக்கும் மூன்றாவது படம் இதுவாகும்....
காதலரை கோவாவில் கரம் பிடிக்கப் போகும் ”நாகினி” நடிகை!

காதலரை கோவாவில் கரம் பிடிக்கப் போகும் ”நாகினி” நடிகை!

CINI NEWS, HOME SLIDER, நடிகைகள்
காதலரை கோவாவில் கரம் பிடிக்கப் போகும் ”நாகினி” நடிகை! பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நாகினி தொடர்கள் மூலம் பிரபலமானவர் மௌனி ராய். இவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். பிரபல தொலைக்காட்சியில் இருந்து திரைப்பட நடிகையாக மாறியவர் மௌனி ராய். சமூக ஊடகங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை சேர்த்திருக்கிறார். வரும் ஜனவரி 27 அன்று மௌனி ராய் தனது காதலன் சூரஜ் நம்பியாருடன் கோவாவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளார். பிரபல சமூக ஊடகப் பக்கமும் இதை ஆன்லைனில் பகிர்ந்துள்ளது மற்றும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட இன்ஸ்டாகிராமில் குவிந்தனர். மௌனி ராய் மற்றும் சூரஜ் நம்பியார் கோவாவின் டபிள்யூ ஹோட்டலில் ஆடம்பரமான திருமணத்தை நடத்துவார்கள் என்றும், பின்னர் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது....
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5வது சுற்று நிறைவு!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5வது சுற்று நிறைவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5வது சுற்று நிறைவு! தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் பொங்கல் பண்டிகை அன்று தொடங்கி பல்வேறு ஊர்களில் தொடர்ந்து நடைபெறும் இதில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்று நடைபெறும். இந்நிலையில், மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை 7.30 மணிக்கு ஜல்லிகட்டு போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியை அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் மற்றும் அனைவரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ஆன் லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 300 மாடுபிடி வீரர்களும், 700 காளைகளும் பங்கேற்றன. போட்டி முழுவதும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் நடைபெறுக...
கருணாஸ் நடிக்கும் ‘ஆதார்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

கருணாஸ் நடிக்கும் ‘ஆதார்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஆதார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தமிழர் திருநாளான பொங்கலன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஆதார்'. இதில் நடிகர்கள் கருணாஸ், அருண்பாண்டியன், 'காலா' புகழ் திலீபன், 'பாகுபலி' புகழ் பிரபாகர், நடிகைகள் ரித்விகா, இனியா. உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார். பாடல்களை கவிஞர் யுரேகா எழுத, 'அசுரன்' புகழ் ராமர் படத்தை தொகுத்திருக்கிறார். தேசிய விருது பெற்ற கலை இயக்குநரான சீனு படத்தின் கலை இயக்கத்தை கவனித்திருக...
கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களுக்கு இன்று பொங்கல் விடுமுறை

கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களுக்கு இன்று பொங்கல் விடுமுறை

HOME SLIDER, NEWS, செய்திகள்
  கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களுக்கு இன்று பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் கொல்லம், இடுக்கி, வயநாடு, பத்தனம்திட்டா, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். அந்தப் பகுதிகளில் கேரள அரசு வழக்கமாக ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் விடுமுறை விடுவது வழக்கம். இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் விடுமுறை என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை சுட்டிக்காட்டி கேரள அரசுக்கு கடிதம் எழுதிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்றைய தினம் பொங்கல் விடுமுறை விடுமாறு கேட்டிருந்தார். இதனையடுத்து கேரள அரசு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்றைய தினம் பொங்கல் விடுமுறை என அறிவித்துள்ளது....
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி. ஆகிறாரா சிரஞ்சீவி..?

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி. ஆகிறாரா சிரஞ்சீவி..?

CINI NEWS, HOME SLIDER, politics, செய்திகள், நடிகர்கள்
  ஆந்திர முதலமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கு நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிரஞ்சீவிக்கு ராஜ்யசபா சீட் வழங்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. வியாழன் அன்று நடந்த சந்திப்பின் போது ஜெகனும் சிரஞ்சீவியும் திரையுலக பிரச்சனைகளை விட அரசியல் பற்றி அதிகம் விவாதித்ததாக முதல்வர் அலுவலகத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. ஜெகன் சிரஞ்சீவிக்கு மதிய விருந்து அளித்தார். அதிகாரப்பூர்வமாக இந்த சந்திப்பின்போது, ஆந்திராவில் சினிமா டிக்கெட் விலை குறித்த சர்ச்சையை விவாதிக்க இருந்தது. இருப்பினும், சிரஞ்சீவியோ அல்லது முதல்வரோ ராஜ்யசபா சீட் குறித்து பேசியதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இந்த ஆண்டு ஜூன் மாதம் ஆந்திராவில் நான்கு ராஜ்யசபா இடங்கள் காலியாகிவிடும். இந்த காலியிடங்கள் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நிரப்ப திட்டமிடப்பட்டுள்...
நடிகைக்கு பாலியல் தொல்லை நடிகர் திலீப் வீட்டில் போலீஸ் சோதனை!

நடிகைக்கு பாலியல் தொல்லை நடிகர் திலீப் வீட்டில் போலீஸ் சோதனை!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள், நடிகர்கள்
நடிகைக்கு பாலியல் தொல்லை நடிகர் திலீப் வீட்டில் போலீஸ் சோதனை! கேரளாவில் கடந்த 2017ம் ஆண்டு பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வழக்கில் நடிகர் திலீப் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் திலீப் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். திலீப்பின் நெருங்கிய நண்பராக இருந்த சினிமா இயக்குநர் பாலசந்திரகுமார் அளித்த பேட்டியை தொடர்ந்து தற்போது இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. பாலச்சந்திர குமார் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், திலீப்புக்கு எதிராக திடுக்கிடும் தகவல்களை கூறியிருக்கிறார். நடிகையை மானபங்கம் செய்தபோது எடுத்த  வீடியோவை நடிகர் திலீப் தனது வீட்டில் இருந்து பார்த்ததாக அவர் கூறி உள்ளார் இந்நிலையில் நடிகர் திலீப், அவரது சகோதரர் அனூப் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்தில் கேரள...