தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு பாதுகாப்பானது – உச்சநீதிமன்றம் கருத்து
தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு சரியானதுதான்; அரசியல் சாசனத்தின் பாதுகாப்பைப் பெற்றுள்ளது; தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மாநிலங்கள் 50% இடஒதுக்கீட்டு வரம்பை தாண்டி செல்லலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் மராத்தி ஜாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கலாம் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
மேலும் தமிழகத்தின் 69% இடஒதுக்கீடுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால் மராத்தா இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்புக்குப் பின்னர் இந்த வழக்கு விசாரிக்கபட உள்ளது.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, நாகேஸ்வர ராவ், அசோக் பூஷண், அப்துல் நசீர், ரவீந்தர பட் ஆகியோர் அடங்கிய அரசியல் பெஞ்ச் மு...









