செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

சூர்யாக்கு  எனது நன்றி – ரம்யா பாண்டியன்

சூர்யாக்கு  எனது நன்றி – ரம்யா பாண்டியன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சூர்யாக்கு  எனது நன்றி - ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். ஜோக்கர் என்ற படத்தின் மூலம் பலரும் அறியும் நடிகையானார். எனினும், இந்தப் படங்களுக்குப் பிறகு நம்யா பாண்டியனுக்கு போதுமான வாய்ப்பு அமையவில்லை. எனினும், தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தனது கிளாமரான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டு வந்தார். தனது வீட்டு மொட்டை மாடியில் ரம்யா பாண்டியன் எடுத்த கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசன...
கொரோனா தொற்று இல்லாத நிலை தொடர்ந்தால் வரும் 31ஆம் தேதி சசிகலா டிஸ்சார்ஜ்!

கொரோனா தொற்று இல்லாத நிலை தொடர்ந்தால் வரும் 31ஆம் தேதி சசிகலா டிஸ்சார்ஜ்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கொரோனா தொற்று இல்லாத நிலை தொடர்ந்தால் வரும் 31ஆம் தேதி சசிகலா டிஸ்சார்ஜ் சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு- பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் இருந்த சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து சசிகலா சிகிச்சை பெற்று வரும் விக்டோரியா மருத்துவமனைக்கு சென்ற சிறைத்துறை அதிகாரிகள் சசிகலாவிடம் கையெழுத்து பெற்று விடுதலையை அறிவித்தனர். மேலும் இதுதொடர்பான எழுத்துபூர்வ அறிக்கையும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லாத நிலை தொடர்ந்தால் வரும் 31ஆம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் புதிய தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சசிகலா இன்று (ஜன. 27) காலை 11 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார். கடந்த 20-ம் தேதி பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 21 ஆம...
ரூ.57.8 கோடி மதிப்பில் ஜெ., நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்!

ரூ.57.8 கோடி மதிப்பில் ஜெ., நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  ரூ.57.8 கோடி மதிப்பில் சென்னை மெரினா கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான நிதியை ஒதுக்கி கட்டுமானப்பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே 8ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கிவைத்தனர். இந்தநிலையில் தற்போது நினைவிடப் பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்று காலை 11 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். . அதனை தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி செலுத்தினர...
யூ-டியூப், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

யூ-டியூப், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
யூ-டியூப், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் திருநெல்வேலியைச் சேர்ந்த உமா மகேஸ்வரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “சென்னையில் பெண்களிடம் தவறான முறையில் கேள்விகள் கேட்டு யூ-டியூப் சேனலில் வீடியோ வெளியிட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களது யூ-டியூப் சேனல் போலீசாரால் முடக்கப்பட்டு விட்டது. இருப்பினும் அவர்களது வீடியோக்கள் பல்வேறு சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு இல்லாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் 2012 ஆம் ஆண்டு நடந்த சர்வே ஒன்றில் இணையதளம் மூலம் மிரட்டுவதில் இந்தியா 3வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஆன்லைன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாடம் நடத்தப...
ஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை… ஆனால்

ஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை… ஆனால்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
ஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை... ஆனால் சென்னை ஐகோர்ட்டில் தீபா, தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், ஜெயலலிதா இறந்த பின், தங்களை வாரிசுகளாக அறிவித்துள்ள நிலையில் வேதா நிலையத்தையும், அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்க சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அதிகாரமில்லை. வேதா இல்லத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும். நினைவு இல்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், போயஸ் தோட்ட இல்லம் ஜெயலலிதா நினைவில்லமாக பொதுமக்கள் பார்வைக்கு நாளை திறக்கப்பட உள்ளதாக அரசுத்தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது இதற்கிடையே, சென்னை ஐகோர்ட்டில் இன்று தீபா, தீபக் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நாளை வேதா இல்லம் திறக்கப்படவிருப்பதால் இதனை அவசர வழக்க...
‘சில்லுக்கருப்பட்டி’ இயக்குனரின் புதிய படம் ‘ஏலே’ பிப்ரவரி 12 ரிலீஸ்!

‘சில்லுக்கருப்பட்டி’ இயக்குனரின் புதிய படம் ‘ஏலே’ பிப்ரவரி 12 ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
சில்லுக்கருப்பட்டி படத்தின் இயக்குனர் ஹலீதா ஷமீம் அடுத்ததாக இயக்கி உள்ள ஏலே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வா குவாட்டர் கட்டிங் மற்றும் விக்ரம் வேதா போன்ற படங்களை இயக்கிய புஷ்கர் காயத்ரியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர் ஹலீதா ஷமீம். இவர் ‘பூவரசம் பீபீ’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் இவர் இயக்கத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி எனும் ஆந்தாலஜி படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் இயக்கியுள்ள படம் தான் ‘ஏலே’. சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை எஸ்.சசிகாந்துடன் இணைந்து புஷ்கர் காயத்ரியும் தயாரித்துள்ளனர். அவர்கள் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும்.  இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படம் வருகிற பிப்ரவரி 12-ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம்!

நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம்! மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், கடந்த 1995-ம் ஆண்டு இயக்குனரும், நடிகருமான பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், சரண்யாவின் மூத்த மகள் பிரியதர்ஷினுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அண்மையில் உறவினர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்கள் முன்னிலையில் பிரியதர்ஷினுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  ...
தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜக தலைவர்!

தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜக தலைவர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜக தலைவர்! நாட்டின் 72ஆவது குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் எளிமையாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு குடியரசு தினத்தின்போதும் ஒருசில கட்சிகள் தங்களது கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றி ‘மரியாதை’ செய்வது வழக்கம். மேற்கு வங்க மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் குடியரசு தின விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் கலந்துகொண்டு பெருமிதமாக கொடியேற்றினார். அவர் ஏற்றிய பிறகு தான் தெரிந்தது அந்தக் கோடி தலைகீழாக ஏற்றப்பட்டிருந்தது என்று. விழாவில் பங்கேற்ற ‘தேசப் பற்றாளர்’ ஒருவர் இதை சரியாக கண்டுணர்ந்து சொல்ல, உடனே கொடியை கீழிறக்கினார் கோஷ். அதன்பின், கொடியை சரியாக ஏற்றினார். தர்மசங்கடத்துக்கு ஆளாகிப்போன கோஷ், “கொடியை அவமதிக்க வேண்டும் என்பதற்காக தலைகீழாக ஏற்றவில்லை. தவறுதலாக கட்டப்ப...
டெல்லி விவசாய பேரணியில் செங்கோட்டையில் கொடி ஏற்றியவர் பாஜக ஏஜெண்டா?- பிரதமருடன் இருக்கும் புகைப்படம் வெளிட்ட காங்கிரஸ்

டெல்லி விவசாய பேரணியில் செங்கோட்டையில் கொடி ஏற்றியவர் பாஜக ஏஜெண்டா?- பிரதமருடன் இருக்கும் புகைப்படம் வெளிட்ட காங்கிரஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
டெல்லி விவசாய பேரணியில் செங்கோட்டையில் கொடி ஏற்றியவர் பாஜக ஏஜெண்டா?- பிரதமருடன் இருக்கும் புகைப்படம் வெளிட்ட காங்கிரஸ் செங்கோட்டையில் கொடி ஏற்றியவரான நடிகர் தீப் சித்து பிரதமர் மோடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டதும் அம்பலமாகியுள்ளது. அவர் தன்னை விவசாய ஆர்வலர் என்று கூறிக் கொண்டு, போராட்டத்தை சிதைக்க வந்த ஆர்எஸ்எஸ் ஏஜெண்ட் என்று விவசாய அமைப்பினர் விமர்சிக்கின்றனர் டெல்லி விவசாய பேரணியில் பெரிதும் பேசப்பட்டது செங்கோட்டையை விவசாயிகள் முற்றுகையிட்ட சம்பவம் தான். அதிலும் குறிப்பாக செங்கோட்டையில் சிக்கிம் மத கொடியையும் விவசாய கொடியையும் ஏற்றியதே பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. மூவர்ணக் கொடியை கீழிறக்கி விட்டு, இந்தக் கொடிகளை ஏற்றியது கண்டனத்துக்குரியது என்று பலரும் கூறி வருகின்றனர் தற்போது கொடி ஏற...
அமேசான் ப்ரைமில் ஜனவரி 29-ம் தேதி வெளியாகிறது மாஸ்டர்

அமேசான் ப்ரைமில் ஜனவரி 29-ம் தேதி வெளியாகிறது மாஸ்டர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அமேசான் ப்ரைமில் வெளியாகிறது மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உள்ள சிறுவர்களை தவறான செயல்களில் ஈடுபடுத்தும் விஜய் சேதுபதியுடன் விஜய் மோதி, சிறுவர்களை மீட்பது போன்று கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் பொங்கல் படத்தை முன்னிட்டு கடந்த 13 ஆம் தேதி வெளியானது. கடந்த 9 மாதத்திற்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில் விஜய் ரசிகர்கள் தியேட்டரில் குவிந்தனர். இந்த படம் கடந்த 14 நாட்களில் சுமார் 72 கோடி வசூலை வாரி குவித்துள்ளதாக கூறப்படுகிறது இந்நிலையில் ‘மாஸ்டர்’ படம் ஜனவரி 29-ம் தேதி வெளியாகும் என அமேசான் ப்ரைம் நிறுவனம் தெரிவித்துள்ளது.படத்திற்கு முதலீடு செய்த விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் லாபம் பெற்றுள்ள ந...