செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை!

பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை! வரி ஏய்ப்பு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளில் முறைகேடு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு முதலில் 20 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். அதன்பின்னர், அதன் கிளைகளாக செயல்படும் பாரிமுனை, வானகரத்தில் இருக்கும் ஜெபகோபுரம் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இது தவிர சென்னை அடையாறு ஜீவரத்தினம் நகரில் உள்ள பால் தினகரனின் இல்லத்திலும் சுமார் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்பட்டது. மேலும் கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகம், பள்ளிகளில் ஏராளமான அதிகா...
சசிகலா நலமாக இருக்கிறார்… அச்சம் கொள்ள தேவை இல்லை – டிடிவி தினகரன் பேட்டி

சசிகலா நலமாக இருக்கிறார்… அச்சம் கொள்ள தேவை இல்லை – டிடிவி தினகரன் பேட்டி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சசிகலா நலமாக இருக்கிறார். அச்சம் கொள்ள தேவை இல்லை - டிடிவி தினகரன் பேட்டி சசிகலா சிகிச்சை பெறும் பெங்களூரு சிவாஜி நகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது சசிகலா உடல்நிலை சீராக உள்ளது. ஆக்சிஜன் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. * சசிகலா நலமாக இருக்கிறார். அச்சம் கொள்ள தேவை இல்லை. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் சசிகலாவுக்கு ஸ்கேன் சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். * சசிகலா நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது....
டிரம்ப்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்!

டிரம்ப்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
டிரம்ப்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கினார். அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே, முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த சில கொள்கை முடிவுகளை மாற்றியமைத்துள்ளார். கொரோனா நெருக்கடி, குடியேற்றம், இனவாத பிரச்சனை உள்ளிட்ட 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார் பைடன். கொரோனா நோய்த்தடுப்பு விஷயத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை அதிகரிப்பது தொடர்பான உத்தரவில் முதலில் கையெழுத்திட்டார். அதன்பின்னர், அமெரிக்க-மெக்சிகோ எல்லைச் சுவர் கட்டுமானம் நிறுத்தம், அமெரிக்கா-கனடா இடையிலான எரிவாயு இணைப்பு திட்டமான, கீஸ்டோன் எக்ஸ்.எல். பைப்லைன் திட்டம் ரத்து உள்ளிட்ட உத்தரவுகளில் கையெழுத்திட்டார். பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது தொடர்ப்ன டிரம்ப் ...
2021 ஐ.பி.எல். அணிகளுக்கான வீரர்கள் முழு பட்டியல்!

2021 ஐ.பி.எல். அணிகளுக்கான வீரர்கள் முழு பட்டியல்!

HOME SLIDER, sports
  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன், பியுஷ் சாவ்லா ஆகியோர் விடுவிப்பு, ராஜஸ்தான் அணியில் ஸ்டீவ் ஸ்மித் விடுவிக்கப்பட்டு சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். லசித் மலிங்காவை கைகழுவியது மும்பை இந்தியன்ஸ் அணி. அணி, தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்கள் விவரம் :   ராஜஸ்தான் ராயல்ஸ் : தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர், ரியான் பராக், ஸ்ரேயாஸ் கோபால், ராகுல் தெவதியா, மஹிபால் லோமர், கார்த்திக் தியாகி, ஆண்ட்ரூ டை, ஜெய்தேவ் உனட்கட், மாயங்க் மார்க்கண்டே, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அனுஜ் மன்ரா வாவ், டேவிட் மில்லர் , ராபின் உத்தப்பா. விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஸ்டீவ் ஸ்மித், அங்கித் ராஜ்பூட், ஓஷேன் தாமஸ், ஆகாஷ் சிங், வருண் ஆரோன், டாம் குர்ரன், அனிருதா ஜோஷி, சஷாங்க்...
வேளாண் சட்டங்களை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டம்

வேளாண் சட்டங்களை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வேளாண் சட்டங்களை ஒன்றரை முதல் 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் இன்னமும் நீடிக்கிறது. வேளாண் சட்டங்களுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், அந்த சட்டங்களை பகுதி வாரியாக ஆய்வு செய்து அறிக்கை தர குழுவையும்  அமைத்துள்ளது. இந் நிலையில் இன்று மத்திய அரசுடன் விவசாயி சங்கங்களின் பிரதிநிதிகள் 10வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த கூட்டத்தில் விவசாயிகளிடம், தங்களுக்குள் குழு ஒன்றை அமைத்து, கோரிக்கைகள் பற்றிய வரைவை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர். அவற்றை திறந்த மனதுடன் அரசு விவாதிக்கும் என்று கூட்டத்தில் அமைச்சர் தோமர் தெரிவித்தார். மேலும் வேளாண் சட்டங்களை ஒன்றரை முதல் 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்கும...
1000 வாகனங்களில் தொண்டர்கள்… விடுதலையாகும் சசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு!

1000 வாகனங்களில் தொண்டர்கள்… விடுதலையாகும் சசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  1000 வாகனங்களில் தொண்டர்கள்... விடுதலையாகும் சசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு! சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி முதல் பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது தண்டனை காலம் முடிவடைவதை தொடர்ந்து வருகிற 27-ந்தேதி சசிகலா விடுதலையாவார் என்று சிறைத்துறை அறிவித்துள்ளது. இளவரசி அடுத்த மாதம் 5-ந்தேதியும், சுதாகரன் அபராத தொகை செலுத்தியதும் விடுதலை செய்யப்படுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா விடுதலை ஆவதையொட்டி அ.ம.மு.க.வினர் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து சசிகலாவை வரவேற்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை அவர்கள் செய்து வருகிறார்கள். சிறைத்துறை தகவல...
வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய டொனால்டு டிரம்ப்!

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய டொனால்டு டிரம்ப்!

HOME SLIDER, politics, உலக செய்திகள், உலகம்
வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய டொனால்டு டிரம்ப்! அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார். தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபரான மைக் பென்ஸ் தோல்வியடைந்தனர். அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், துணை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கமலா ஹாரிஸ் இன்று பதவியேற்க உள்ளனர். அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்திய நேரப்படி இரவு 10 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. பதவியேற்பு விழாவை தொடர்ந்து ஜோ பைடன் அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளைமாளிகையில் நாளை குடியேற உள்ளார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் அலுவலகம் மற்றும் வீடாக செயல்பட்டு வந்த வெள்ளைமாளிகையில் இருந்து தற்போதைய அத...
அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்

அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார் ஜோபைடன் அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார். தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபரான மைக் பென்ஸ் தோல்வியடைந்தனர். அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், துணை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கமலா ஹாரிஸ் ஆகியோர் பதவியேற்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது. அமெரிக்க பாராளுமன்றத்தில் பதவியேற்பு விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக்கொண்டார்.  அவருக்கு பதவிப்பிரமானமும், ரகசியகாப்பு பிரமானமும் செய்துவைக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பதவிப்பிரமானமும், ரகசியகாப்பு பிரமானமும் செய்துவைக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்க வரலா...
பைக் ஆம்புலன்ஸ் ‘ரக்ஷிதா’ டெல்லியில் அறிமுகம்!

பைக் ஆம்புலன்ஸ் ‘ரக்ஷிதா’ டெல்லியில் அறிமுகம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பைக் ஆம்புலன்ஸ் ‘ரக்ஷிதா’ டெல்லியில் அறிமுகம் வனப்பகுதிகள் மிக்க குறுகிய பாதைகளில் சென்று காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்ளுக்கு கொண்டுசெல்ல பைக் ஆம்புலன்ஸ் ‘ரக்ஷிதா’ இன்று டெல்லியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.  மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) இணைந்து உருவாக்கிய இந்த பைக் ஆம்புலன்ஸ் பாதுகாப்பு அவசரகால தேவைகளில் பயன்படும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சிஆர்பிஎப் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பதட்டமான பகுதிகளில் குறிப்பாக மாவோயிஸ்டு நடமாட்டம் மிக்க பகுதிகளில் துப்பாக்கிச் சண்டைகளின்போது மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் குறுகிய பாதைகளில் வேகமாக செல்ல வேண்டிய அவசியத்தை பலமுறை சிஆர்பிஎப் உணர்ந்துள்ளது. மருத்துவ வசதிகள் சரியான நேரத்தில் அடைய முடியாத நிகழ்வுகளும், மருத்துவ உத...
கேரள தங்க கடத்தல் வழக்கு நீதிமன்ற காவல் பிப்ரவரி 2-ம் தேதி வரை நீடிப்பு!

கேரள தங்க கடத்தல் வழக்கு நீதிமன்ற காவல் பிப்ரவரி 2-ம் தேதி வரை நீடிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கேரள தங்க கடத்தல் வழக்கு நீதிமன்ற காவல் பிப்ரவரி 2-ம் தேதி வரை நீடிப்பு கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின்  கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகளை சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது. கடத்தல் தங்கத்தின் அன்றைய மதிப்பு 14.82 கோடி ரூபாய் ஆகும். இந்த சம்பவத்தை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், வழக்குடன் தொடர்புடைய தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதேபோல் வழக்கில் தொடர்புடைய முன்னாள் தூதரக ஊழியர் சந்தீப் நாயர் உள்பட பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்குகள் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்க துறை மற்றும் சுங்க துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அரசின் முதன்மை ச...