செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

அவர்களால் (பாஜக) என்னை சுட முடியும். ஆனால் என்னை தொட முடியாது – ராகுல்காந்தி காட்டம்!

அவர்களால் (பாஜக) என்னை சுட முடியும். ஆனால் என்னை தொட முடியாது – ராகுல்காந்தி காட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அவர்களால் (பாஜக) என்னை சுட முடியும். ஆனால் என்னை தொட முடியாது - ராகுல்காந்தி காட்டம்! மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய பதிப்பு பிரதியை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. இந்த பிரதியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டார். அதன் பின் ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- * புதிய வேளாண் சட்டங்கள் விவசாயத்தை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. போராடும் விவசாயிகளுக்கு நான் 100 சதவிகிதம் ஆதரவு தருகிறேன். நமக்காக போராடும் விவசாயிகளுக்கு நாம் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். * விவசாயிகளுக்கு உண்மை நிலை தெரியும். ராகுல்காந்தி என்ன செய்வார் என்பது விவசாயிகளுக்கு தெரியும். எனக்கு ஒரு குணம் உள்ளது. நரேந்திரமோடி மட்டுமல்ல யாரைப்பார்த்தும் எனக்கு பயமில்லை. * அவர்களால் என்...
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய அணி

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய அணி

HOME SLIDER, NEWS, sports
பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றதையடுத்து, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம், முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி, மூன்றாமிடத்திற்கு சென்றுவிட்டது. இந்திய அணி மொத்தம் 430 புள்ளிகள் பெற்று, 71.7% வெற்றியுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை இந்திய அணி 5 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. போட்டிகள் கணக்கில் 9 வெற்றிகளும், 3 தோல்விகளும், ஒரு போட்டியை டிரா செய்துள்ளது.   நியூசிலாந்து அணி 420 புள்ளிகளுடன், 70% வெற்றிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 332 புள்ளிகளுடன், 69.2% வெற்றிகளுடன் 3வது இடத்துக்குச் சரிந்துள்ளது. இங்கிலாந்து அணி 352 புள்ளிகளுடன், 65.2% வெற்றிகளுடன்...
ஜப்பானில் வீசிய கடும் பனிப்புயல் நெடுஞ்சாலையில் சென்ற 130 வாகனங்கள் ஒன்றொடென்று மோதல்!

ஜப்பானில் வீசிய கடும் பனிப்புயல் நெடுஞ்சாலையில் சென்ற 130 வாகனங்கள் ஒன்றொடென்று மோதல்!

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
ஜப்பானில் வீசிய கடும் பனிப்புயல் நெடுஞ்சாலையில் சென்ற 130 வாகனங்கள் ஒன்றொடென்று மோதல்! ஜப்பானில் வீசிய கடும் பனிப்புயல் காரணமாக, நெடுஞ்சாலையில் சென்ற கார்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளான. சுமார்  130 கார்கள் ஒன்றொடென்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 10 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது வடக்கு ஜப்பான் மியாகி (Miyagi district) மாகாணத்தில் உள்ள தோஹோகு பகுதியில் ( Tohoku Expressway)  இன்று மதிய வேளையில் பனிப்புயல் தாக்கியது. அதிக பட்சமாக 100 கிமீ / மணி (62 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக உள்ளூர் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பனிப்புயலானது அந்த மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையை கடுமையாக தாக்கியது.  இதன் காரணமாக, சாலை முழுவதும் பனியால் மூடப்பட்டது. அப்போது, அந்த வழியாக சென்றுகொண்டிருந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள், ஒன்றொடொன்று மோதி விபத்துக்குள்ளனாது. ஒரே இடத்தி...
அமெரிக்க அதிபராக நாளை பதவி ஏற்க உள்ள ஜோ பைடன்

அமெரிக்க அதிபராக நாளை பதவி ஏற்க உள்ள ஜோ பைடன்

HOME SLIDER, politics, உலக செய்திகள், உலகம்
  நாளை அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் அதிக வயதான அதிபர் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார். நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டொனால்ட் டிரம்ப் தோல்வி அடைந்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.  நாளை ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார்.  இதற்காக மிகத் தீவிரமாக ஏற்பாடுகள் நடந்து  வருகின்றன.  அவர் தேர்தலில் வெற்றி பெற்றும் டொனால்ட் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் மிகவும் இழுத்தடித்து தற்போது வேறு வழியில்லாமல் ஒதுங்கி உள்ளார். தற்போது பதவி ஏற்க உள்ள ஜோ பைடனுக்கு நவம்பர் மாதம் 78 வயதை எட்டி உள்ளார்.  இதனால் அவர் மிகவும் வயதான அதிபர் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார்.  இதற்கு முன்பு டொனால்ட் டிரம்ப் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரியில் டிரம்ப் பதவி ஏற்ற போது அவருக்கு 70 வயதாகி இருந்தது.   இதற்கு முன்பு ரொனால்ட...
கன்யாகுமரியில்  திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய கனிமொழி எம்பி. 

கன்யாகுமரியில்  திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய கனிமொழி எம்பி. 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கன்யாகுமரியில்  திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய கனிமொழி எம்பி. திருக்குறளை எழுதிய திருவள்ளுவரைத் தமிழர்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவரும்  போற்றி வருகின்றனர்.  திருக்குறளை உலகப் பொதுமறை என்ஃஅ போற்றி வருகின்றனர்.  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது ஆட்சி காலத்தில் கன்யாகுமரியில் திருவள்ளுவருக்குப் பிரம்மாண்டமான சிலை ஒன்றை அமைத்து அவர் புகழை மேலும் பரப்பினார். திமுக மக்களவை உறுப்பினரான கனிமொழி இன்று கன்யாகுமரி சென்று திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.   இது குறித்து அவர் தனது டிவிட்டரில், “இன்று கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினேன். அவரது அறிவார்ந்த கருத்துக்கள் இன்றும் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஊக்க சக்தியாக இருப்பவை. தலைவர் கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான வள்ளுவர் சிலை சரியான பராமரிப்பில்லாமல் உள...
சசிகலா விடுதலையாகும் ஜனவரி 27ந்தேதி ஜெ., நினைவிடத்தை திறக்கும் முதல்வர் எடப்பாடி!

சசிகலா விடுதலையாகும் ஜனவரி 27ந்தேதி ஜெ., நினைவிடத்தை திறக்கும் முதல்வர் எடப்பாடி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சசிகலா விடுதலையாகும் ஜனவரி 27ந்தேதி ஜெ., நினைவிடத்தை திறக்கும் முதல்வர் எடப்பாடி! சென்னை மெரினா கடற்கரை வளாகத்தில், எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடம் வரும் 27ந்தேதி  திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. அன்றைய தினம் சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்து வெளியே வருகிறார்.  அன்றைய நாளில் ஜெ.நினைவிடம் திறக்கப்பட இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான  ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவாலயம் அமைக்கப்பட்டு வருகிறது. பீனிக்ஸ் பறவைப்போல   அமைக்கப்பட்டு வரும் நினைவாலயம் மற்றும் அருங்காட்சியகம்  அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, ஜெ.நினைவிடம்  தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, வரும் 27ந்தேதி அன்று ஜெயலலிதா மெரினா நினைவிடம் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித...
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கியவர்களுக்கு ‘போலி’ தங்கக்காசு – புதிய சர்ச்சையில் முதல்வர் எடப்பாடி

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கியவர்களுக்கு ‘போலி’ தங்கக்காசு – புதிய சர்ச்சையில் முதல்வர் எடப்பாடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில், 710 காளைகள், 700க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றிருந்தனர். மேலும் காளைகளை அடக்கிய மாடு பிடி வீரர்களுக்கு தங்கக்காசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. அதில், மதுரை மாவட்டம், குறவன்குலத்தைச் சேர்ந்த 24 வயதாகும் விஜயன் என்பவர் 8 மாடுகளை பிடித்துள்ளார். அதனால் அவருக்கு நான்கு தங்கக்காசுகள் பரிசாக வழங்கப்பட்டன. இந்நிலையில் பரிசாகப் பெற்ற தங்கக்காசுகளை விஜயனின் தந்தை கணேசமூர்த்தி பரிசோதனை செய்வதற்காக அருகில் உள்ள நகைக்கடைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவர் தங்கக்காசுக பரிசோதனை செய்யக்கொடுத்ததில், அந்த தங்கக்காசுகள் தரமற்றவையாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இதுதொடர்பாக கணேசமூர்த்தி கூறுகையில், “எனது மகன் காளைகளை அடக்கியதால், ஒரு கி...
சசிகலா வெளியே வந்தவுடன் எடப்பாடி ஆட்சி இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியப் போகிறது – மு.க.ஸ்டாலின்

சசிகலா வெளியே வந்தவுடன் எடப்பாடி ஆட்சி இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியப் போகிறது – மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாமக்கல் மாவட்டம் – குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட பாதரை ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். “அமைச்சர் வேலுமணி கொள்ளை அடிப்பது வெளியில் தெரிந்து விடும். அமைச்சர் தங்கமணி எதையும் வெளியில் தெரியாமல் செய்துவிடுவார்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இன்று (19-01-2021) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், நாமக்கல் மாவட்டம் – குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட பாதரை ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மக்கள் கிராம சபைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: “குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாதரையில் இப்போது மக்கள் கிராம...
முதல்வர் பழனிசாமி பயணித்த விமானத்தில் விடாமல் அழுத குழந்தையும் , தாயும்  இறக்கிவிடப்பட்ட சம்பவம்!

முதல்வர் பழனிசாமி பயணித்த விமானத்தில் விடாமல் அழுத குழந்தையும் , தாயும்  இறக்கிவிடப்பட்ட சம்பவம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முதல்வர் பழனிசாமி பயணித்த விமானத்தில் விடாமல் அழுத குழந்தையும் , தாயும்  இறக்கிவிடப்பட்ட சம்பவம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணம் செய்த விமானத்தில் இருந்த குழந்தை தொடர்ந்து அழுததால், அக்குழந்தையும், தாயும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோர் நேற்று பகல் 12 மணிக்கு, 'விஸ்தாரா ஏர்லைன்ஸ்' விமானத்தில், டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்துள்ளனர். அந்த விமானத்தில், ராகுல் என்பவர், அவரது மனைவி லட்சுமிதேவி (30), மற்றும் அவர்களது நான்கு மாத கைக் குழந்தையுடன் பயணித்துள்ளார். விமானத்தில் ஏறியதில் இருந்து, நான்கு மாத கைக்குழந்தை இடைவிடாமல் அழுது கொண்டிருந்துள்ளது. எவ்வளவு முயன்றும் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை. இதனால், முதல்வர் உள்ளிட்ட மற்ற பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படும் எனக் க...
பெற்றோர்களின் சம்மதத்துடன் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன!

பெற்றோர்களின் சம்மதத்துடன் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பெற்றோர்களின் சம்மதத்துடன் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன 10, 12ம் வகுப்புகள் தொடக்கம்! மாணவர்கள் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வழியாக வீடுகளில் இருந்து படித்து வந்தனர். பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் நேரடி வகுப்பு இல்லாதால் மன அழுத்தத்துடன் காணப்பட்டனர். இந்தநிலையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்தது. கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் பெற்றோர்களின் சம்மதத்துடன் பள்ளிகளை திறக்க கருத்து கேட்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டதில் பெரும்பாலானோர் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 13 ஆயிரம் பள்ளிகளில் 10, 12-ம் வகுப...