சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

மூட்டை, முடிச்சுகளுடன் கால்நடைகள் போல நடந்து செல்லும் ஆப்கானிஸ்தான் அகதிகள்!

மூட்டை, முடிச்சுகளுடன் கால்நடைகள் போல நடந்து செல்லும் ஆப்கானிஸ்தான் அகதிகள்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
மூட்டை, முடிச்சுகளுடன் கால்நடைகள் போல நடந்து செல்லும் ஆப்கானிஸ்தான் அகதிகள்! 20 ஆண்டுகளாய் நடந்து வந்த ஆப்கானிஸ் தான் போர் கடந்த செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்து இருக்கிறது. அன்றைய தினம் நள்ளிரவில் காபூலில் இருந்து கடைசி விமானம் புறப்பட்டபோது, அமெரிக்காவின் வெளியேற்ற நடவடிக்கை முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானிய மக்கள், சொந்த நாட்டில் அகதிகளாய் ஆன பரிதாபம் நேர்ந்திருக்கிறது. துப்பாக்கிகளை கைகளில் ஏந்திக்கொண்டு திரிகிற தலிபான் ஆளுகையில் நமது உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாதம் இல்லை என்று ஆப்கானிஸ்தானியர்கள் முடிவுக்கு வந்து விட்டார்கள். அதனால்தான் அவர்கள் மூட்டை, முடிச்சுகளோடு, பிள்ளை குட்டிகளோடு கூட்டம் கூட்டமாக ஆப்கானிஸ்தானிய மக்கள் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். எங்கே போவது, எப்படி போவது, எதில் போவது என எதிலும் திட்டமிடப்படாத கண்ணீர் வாழ்க்கை, அவர்க...
பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது குறித்து மாணவ-மாணவிகள் கருத்து!

பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது குறித்து மாணவ-மாணவிகள் கருத்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது குறித்து மாணவ-மாணவிகள் கருத்து! பள்ளி-கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் திறக்கப்பட்டது குறித்து மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர். இதன் விவரம் வருமாறு, பள்ளி மாணவி சரண்ஸ்ரீ:- பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது நண்பர்கள், ஆசிரியர்களை மீண்டும் சந்திப்பதில் மனம் சந்தோஷம் அடைகிறது. நேரடி வகுப்புகள் மீண்டும் முன்னெடுக்கப்படுவதால் மாணவர்களின் கல்வி நிலை இனி உயரும். நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு திரும்பியிருப்பது உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. பள்ளி மாணவர்களான சகோதரர்கள் ஏ.ஹரி, ஏ.சிவா:- தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கூடத்தை மீண்டும் அடைந்திருப்பது புது அனுபவத்தை ஏற்படுத்துகிறது. ஆன்-லைன் வகுப்புக்கு விடை கொடுத்து, முன்புபோலவே நேரடி வகுப்பில் அமருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நேரடி வகுப்புகள் மட்டுமே பாட...
‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பாண்டிராஜ்!

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பாண்டிராஜ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பாண்டிராஜ்! நடிகர் சூர்யாவின் 40-வது படம் ‘எதற்கும் துணிந்தவன்’. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் காரைக்குடியில் தொடங்கியது. தொடர்ந்து 51 நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு நேற்று முடிவடைந்தது. மழை, வெயில் பார்க்காமல் கடினமாக உழைத்ததால் இது சாத்தியமானது என தெரிவித்துள்ள இயக்குனர் பாண்டிராஜ், சூர்யா உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்....
கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய ஷங்கர் படம்!

கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய ஷங்கர் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய ஷங்கர் படம்! தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரணுடன் கூட்டணி அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராக உள்ள இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளார். இப்படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதி உள்ளார். இது முழுக்க முழுக்க அரசியல் கதையம்சம் கொண்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ள கதை தன்னுடையது என செல்லமுத்து என்ற உதவி இயக்குனர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார். இவர் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் விரைவில் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறத...
விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கைவசம் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், கோடியில் ஒருவன், பிச்சைக்காரன் 2 ஆகிய படங்கள் உள்ளன. இவற்றுள் ‘கோடியில் ஒருவன்’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கி உள்ளார். இந்நிலையில், கோடியில் ஒருவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற செப் 17-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசியல் திரில்லர் கதையம்சத்தில் உருவாகி உள்ள, இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தை டிடி ராஜா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்....
கணவர் ராஜ் குந்த்ராவை பிரிய நடிகை ஷில்பா ஷெட்டி முடிவு!

கணவர் ராஜ் குந்த்ராவை பிரிய நடிகை ஷில்பா ஷெட்டி முடிவு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
கணவர் ராஜ் குந்த்ராவை பிரிய நடிகை ஷில்பா ஷெட்டி முடிவு! பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் அவருக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்று கூறப்பட்டு வருகிறது. ராஜ் குந்த்ரா, ஷில்பா ஷெட்டி இந்நிலையில், ராஜ்குந்த்ராவுடன் தான் சேர்ந்து வசித்து வரும் வீட்டில் இருந்து வெளியேற, நடிகை ஷில்பா ஷெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ராஜ் குந்த்ராவை பிரிந்து, அவர் தொடர்பான பிரச்சனைகள் எதுவும் இல்லாமல், புது வாழ்க்கையை துவங்க நடிகை ஷில்பா ஷெட்டி விரும்புவதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது குறித்து நடிகை ஷில்பா ஷெட்டியிடம் இருந்து ...
‘பிசாசு 2’ படத்தின் முக்கிய அப்டேட்!

‘பிசாசு 2’ படத்தின் முக்கிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
‘பிசாசு 2’ படத்தின் முக்கிய அப்டேட்! மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். மேலும் சந்தோஷ் பிரதாப், பூர்ணா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில், ‘பிசாசு 2’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக திண்டுக்கல்லில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘பிசாசு 2’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் பின்னணி பணிகளை...
முடிவுக்கு வந்த  ‘இந்தியன்-2’ சர்ச்சை!

முடிவுக்கு வந்த ‘இந்தியன்-2’ சர்ச்சை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
முடிவுக்கு வந்த ‘இந்தியன்-2’ சர்ச்சை! கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படம் தொடர்ந்து தடங்கல்களை சந்தித்து முடங்கி உள்ளது. ஆரம்பத்தில் கமல்ஹாசனின் வயதான தோற்றம் பொருத்தமாக இல்லை என்று படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். பின்னர் படப்பிடிப்பு அரங்கில் நிகழ்ந்த விபத்தும், உயிர்ப்பலியும் பட வேலைகளை முடக்கியது. கமல்ஹாசன் தேர்தல் பணிகளை முடித்த பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து புதிய படத்தை இயக்கவும், கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடிக்கவும் சென்றுவிட்டனர். இந்தியன்-2 படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்குமாறு தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டுக்கு சென்றும் தடை கிடைக்கவில்லை. இந்த பிரச்சினைகளால் இந்தியன்-2 படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படும்? படம் கைவிடப்படுமா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்து வந்தன. இந்நிலையில் ...
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ. 25 உயர்வு!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ. 25 உயர்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ. 25 உயர்வு! மூன்று மாத காலத்திற்கு பின் கடந்த ஜூலை மாதம் சமையல் எரிவாயு விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதமும் எரிவாயு விலை திடீரென 25 ரூபாய் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், 14 கிலோ வீட்டு உபயோக சிலிண்டருக்கு இன்று மீண்டும் ரூ.25 விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.875.50 ஆக இருந்தது. இன்று மேலும் ரூ.25 உயர்த்தப்பட்டு இருப்பதால் ரூ.900.50 ஆக உயர்ந்துள்ளது. வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 75 அதிகரித்து 1831.50க்கு விற்கப்படுகிறது.  இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது....
அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! சென்னை அண்ணா சாலையில்  மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார். சட்ட வல்லுநர்களை ஆலோசித்து சென்னை அண்ணா சாலையில்  ஏதாவது ஒரு இடத்தில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கூறினார். தி.க. தலைவர் வீரமணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் சட்டசபையில் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்....