புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

தமிழக அரசால் தனி ஓடிடி தளம் உருவாக்கப்பட வேண்டும் – சேரன்!

தமிழக அரசால் தனி ஓடிடி தளம் உருவாக்கப்பட வேண்டும் – சேரன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தமிழக அரசால் தனி ஓடிடி தளம் உருவாக்கப்பட வேண்டும் - சேரன்! கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரைத்துறை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை நேரடியாக ஓடிடியில் வெளியாகி வருகின்றன. அவற்றுக்கு ஓடிடி-யில் வரவேற்பு கிடைப்பதை கருத்தில் கொண்டு மலையாள சினிமாவுக்கென பிரத்யேகமாக ஓடிடி தளம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த ஓடிடி தளம் வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்நிலையில் கேரள அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள இயக்குனர் சேரன், தமிழ் மொழிக்கும் இதுபோன்று தனி ஓடிடி தளம் அவசியம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இதுபோன்ற முயற்சி நமது தமிழ் திரைப்படத்துறைக்கும் தமிழக அரசால் உருவாக்கப்படவேண்டும். சிறு முதலீட்டு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு ...
கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காகத்தான் சட்டம்.. சூர்யா கோபம்!

கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காகத்தான் சட்டம்.. சூர்யா கோபம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காகத்தான் சட்டம்.. சூர்யா கோபம்! இந்தியாவில் திரைத்துறையை நெறிப்படுத்தும் ஒளிப்பதிவு சட்டத்தில் மத்திய அரசு, நான்கு திருத்தங்களை செய்துள்ளது. இந்த திருத்தத்தால் திரைத்துறையில் படைப்புச் சுதந்திரம் பறிபோகும் என்று குற்றம் சுமத்தப்படுகிறது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்னர் தன் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சூர்யாவும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காகத்தான். அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல' என்று அழுத்தமாக பதிவிட்டுள்ளார்....
விமான நிலையத்தின் நிலை… ராஜமவுலி வேதனை!

விமான நிலையத்தின் நிலை… ராஜமவுலி வேதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
விமான நிலையத்தின் நிலை... ராஜமவுலி வேதனை! பாகுபலி படம் மூலம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ராஜமவுலி. இவர் தற்போது இரத்தம் ரணம் ரெளத்திரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் டெல்லி விமான நிலையத்துக்குச் சென்ற இயக்குனர் ராஜமவுலி, அங்குள்ள நிலையைப் பார்த்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் வேதனையாக பதிவு செய்திருக்கிறார். அதில், "அன்புள்ள டெல்லி விமானநிலையம், நான் லுஃப்தான்ஸா விமானம் மூலம் நள்ளிரவு 1 மணிக்கு வந்தேன். கொரோனா பிசிஆர் பரிசோதனைக்கான விண்ணப்ப படிவங்கள் எனக்கு வழங்கப்பட்டன. அனைத்து பயணிகளும் தரையில் அமர்ந்து கொண்டும், சுவற்றில் வைத்தும் படிவங்களைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தனர். அது பார்ப்பதற்கு நன்றாக இல்லை. அவர்களுக்கு மேஜைகள் வழங்குவது என்பது ஒரு சாதாரண சேவை. அதுமட்டுமின்றி ஏராளமான தெரு நாய்கள் வெளியேறும் வாயிலுக்கு அருகில் இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தேன். நி...
சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு! சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் திரைப்படம் இந்தியன் 2. லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இதனிடையே, இயக்குனர் சங்கர், தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடிக்கும் ஒரு படத்தையும், 'அந்நியன்' படத்தின் இந்தி ரீமேக்கையும் இயக்க ஒப்பந்தம் ஆனார். இதனால் 'இந்தியன் 2' படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் பிற படங்களை இயக்க, இயக்குனர் சங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதி எடுக்கும் முடிவை அறிக்கையாக தாக்கல் செய்த பிறகு, வழக்க...
கர்ப்பிணிகள் இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்!

கர்ப்பிணிகள் இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கர்ப்பிணிகள் இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்! நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்கப்படாமல் இருந்தது. கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கொரோனா தடுப்பூசி கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானது என நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, மத்திய சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய சுகாதாரத்துறை, கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என இன்று ஒப்புதல் அளித்துள்ளது. கர்ப்பிணிப்...
சௌராஷ்ட்ரா வணிக மேம்பாட்டு குழுமம், BVK தொழில் குழுமம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்

சௌராஷ்ட்ரா வணிக மேம்பாட்டு குழுமம், BVK தொழில் குழுமம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களை 25.6.2021 அன்று தலைமைச்செயலகத்தில் BVK தொழில் குழுமத்தின் தலைவர்  கே. வி.பாலா அவர்கள் சந்தித்து, கொரோனா  நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் உடன் நிறுவனத்தின் துணைத் தலைவர்  கே.கே கோவிந்த மூர்த்தி, முதுநிலை மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் உள்ளனர்.   மேலும் அவர்கள் அளித்த அறிக்கையில் கூறியதாவது :  மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கட்கு, கடந்த சட்ட மன்ற தேர்தலிலே, ஆகப்பெரும் வெற்றியை அடைந்து, நம் தாய்த் தமிழகத்தின் முதல்வராக  தாங்கள் அரியணை ஏறியமை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். வாழ்த்தி வணங்குகிறோம். தங்கள் சீர்மிகு தலைமையிலே தமிழகம் தொழில் துறையிலும், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிலும் தன்னிகரிலா வளர்ச்சி கண்டு, தரணியிலே தலைநிமிரும் என்பதி...
ஜெராக்ஸ் பத்திரத்தை வைத்துக்கொண்டு ராஜ் டிவி இயக்குனர் ரவீந்திரன் கோடிக்கணக்கில் மோசடி?

ஜெராக்ஸ் பத்திரத்தை வைத்துக்கொண்டு ராஜ் டிவி இயக்குனர் ரவீந்திரன் கோடிக்கணக்கில் மோசடி?

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஜெராக்ஸ் பத்திரத்தை வைத்துக்கொண்டு ராஜ் டிவி இயக்குனர் ரவீந்திரன் கோடிக்கணக்கில் மோசடி? தமிழகச் சின்னத்திரை வட்டாரத்தில் சகலருக்கும் தெரிந்த சேனல் ராஜ் டிவி நெட்வொர்க் . இது மொத்தம் 12 சேனல்கள் உள்ளடங்கியது. தமிழில் 4 சேனல்கள், தெலுங்கில் 3 சேனல்கள், மலையாளம், கன்னடத்தில் 2 சேனல்கள், ஹிந்தியில் ஒரு சேனல். சன் டிவிக்கு இணையாக இவர்களும் மீடியா துறையில் வளர்ச்சி கண்டனர். சேனல்கள் மட்டுமின்றி பட தயாரிப்புகளிலும் ஈடுபட்டனர். காதல்னா சும்மா இல்ல, மரியாதை, மகனே என் மருமகனே போன்ற திரைப்படங்களை தயாரித்து உள்ளனர். இதன் நிர்வாகிகளில் ஒருவரான ரவீந்தரனால் ரூ 10 கோடி ரூபாய் ஏமாற்றப்பட்ட பிரபல சின்னத்திரை நிறுவனத்தின் புகார் காவல் துறைக்கும் மற்றும் பல அரசு துறைகளுக்கும்  போக தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் சின்னத்திரை வட்டார ஹாட் நியூஸ்.   அதாவது பிஏ என்ற பாரதி அசோசியேட் நிறுவனத்தின் சேர்மன் ட...
சிம்பு பட டீசரை வெளியிடும் சிவகார்த்திகேயன்!

சிம்பு பட டீசரை வெளியிடும் சிவகார்த்திகேயன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிம்பு பட டீசரை வெளியிடும் சிவகார்த்திகேயன்! நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்திலும், ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் டீசரை ஜூலை 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்தனர். இந்நிலையில், இந்த டீசரை சிவகார்த்திகேயன் வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது....
மீண்டும் இணையும் கலகலப்பு கூட்டணி!

மீண்டும் இணையும் கலகலப்பு கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மீண்டும் இணையும் கலகலப்பு கூட்டணி! ஜெயம் கொண்டான் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.கண்ணன். இதையடுத்து சேட்டை, கண்டேன் காதலை, இவன் தந்திரன், பூமரேங் போன்ற படங்களை இயக்கிய இவர், அடுத்ததாக அதர்வாவின் தள்ளிப்போகாதே, நகுலின் எரியும் கண்ணாடி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில், அவர் இயக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்தில் மிர்ச்சி சிவா மற்றும் யோகிபாபு இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. யோகிபாபுவும், சிவாவும் ஏற்கனவே கலகலப்பு, கலகலப்பு 2, சுமோ ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது....
அஜித்துடன் நடித்தத்தை 27 ஆண்டுகள் கழித்து நினைவுகூர்ந்த பிரபல நடிகை!

அஜித்துடன் நடித்தத்தை 27 ஆண்டுகள் கழித்து நினைவுகூர்ந்த பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அஜித்துடன் நடித்தத்தை 27 ஆண்டுகள் கழித்து நினைவுகூர்ந்த பிரபல நடிகை! கடந்த 1994ஆம் ஆண்டு சுரேஷ் மேனன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரேவதி நடிப்பில் உருவான திரைப்படம் ’பாசமலர்கள்’. இந்த படத்தில் அஜித் மற்றும் காயத்ரி முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். நடிகை காயத்ரி அதன் பின் ’மெட்டி ஒலி’ சீரியல் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய புகழ் பெற்றார். இந்த நிலையில் நடிகை காயத்ரி தனது சமூக வலைத்தள பக்கத்தில், ’பாசமலர்கள்’ படத்தில் நடித்தபோது அஜித் மற்றும் படக்குழுவினர்களுடன் இருந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். 27 வருடங்கள் கழித்து அஜித்துடன் நடித்ததை நடிகை காயத்ரி நினைவுகூர்ந்து இருக்கும் நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது....