செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

எனக்கு கவலையில்லை.. கவர்ச்சி புகைப்பட எதிர்ப்புக்கு ரைசா பதிலடி!

எனக்கு கவலையில்லை.. கவர்ச்சி புகைப்பட எதிர்ப்புக்கு ரைசா பதிலடி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
எனக்கு கவலையில்லை.. கவர்ச்சி புகைப்பட எதிர்ப்புக்கு ரைசா பதிலடி! பிக்பாஸ் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ரைசா. ‘வேலை இல்லாத பட்டதாரி’, ‘பியார் பிரேமா காதல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளார். சமீபத்தில் முகப்பொலிவு சிகிச்சை எடுக்க சென்றிருந்தார் ரைசா. அப்போது மருத்துவர் பைரவி என்பவர் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி முகம் வீங்கிய நிலையில் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதையடுத்து நீண்ட நாட்கள் சமூக வலைத்தள பக்கம் வராத ரைசா கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்ளாடை அணியாமல் சட்டை பட்டன்களை திறந்துவிட்டபடி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதை பார்த்த ரசிகர்கள் கலாச்சாரத்துக்கு எதிரான இந்த மாதிரியான புகைப்படங்கள் சமூகத்திற்கே அழுக்கு என கண்டப்படி கமெண்ட் செய்திருந்தனர். இதனால் கோபமான ரைசா...
படக்குழுவினருடன் இணைந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட மாளவிகா மோகனன்!

படக்குழுவினருடன் இணைந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட மாளவிகா மோகனன்!

CINI NEWS, helth tips, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
படக்குழுவினருடன் இணைந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட மாளவிகா மோகனன்! நடிகை மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படம் மூலம் அறிமுகமான அவர், இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இதையடுத்து ‘யுத்ரா’ எனும் பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் மாளவிகா மோகனன், இப்படத்தின் படப்பிடிப்பை ஜூலை மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். அதற்குமுன் படக்குழுவினர் அனைவருக்கும் தடுப்பூசி போட திட்டமிட்ட படக்குழு, இன்று மும்பையில் படக்குழுவினருக்காக தடுப்பூசி முகாம் நடத்தியது. இதில் மாளவிகா மோகனன் உள்ளிட்ட படக்குழுவினர் க...
முதன்முறையாக யுவன் இன்றி வேறு இசையமைப்பாளருடன் பணியாற்றும் விஷ்ணுவர்தன்!

முதன்முறையாக யுவன் இன்றி வேறு இசையமைப்பாளருடன் பணியாற்றும் விஷ்ணுவர்தன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
முதன்முறையாக யுவன் இன்றி வேறு இசையமைப்பாளருடன் பணியாற்றும் விஷ்ணுவர்தன்! விஜய் நடிப்பில் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற ‘மாஸ்டர்’ படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ, அடுத்ததாக நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளார். இப்படத்தின் மூலம் நடிகர் ஆகாஷ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அஜித்தை வைத்து ‘பில்லா’, ‘ஆரம்பம்’ போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இப்படத்தை இயக்க உள்ளார். இயக்குனர் விஷ்ணுவர்தன் இதுவரை இயக்கிய தமிழ் படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து உள்ளார். அதனால் இப்படத்திற்கும் அவர்தான் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதர்வாவின் தம்பி ஆகாஷ், தயாரிப்பாளர் சேவியர் பி...
13 வகை மளிகைப் பொருள், 2ஆம் தவணை நிவாரண நிதி -முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்!

13 வகை மளிகைப் பொருள், 2ஆம் தவணை நிவாரண நிதி -முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
13 வகை மளிகைப் பொருள், 2ஆம் தவணை நிவாரண நிதி -முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்! தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் கொரோனா நிவாரணமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2ம் கட்டமாக மேலும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், மக்களின் சிரமங்களை குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் 13 வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். கோதுமை, ரவை, சர்க்கரை, உப்பு, புளி, மஞ்சள் தூள், கடுகு, பருப்பு, சீரகம், குளியல் சோப், சலவை சோப் உள்ளிட்ட 13 பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 13 வகையான பொருட்களை கொள்முதல் செய்வதற்காக டெண்டர் கோரப்பட்டது. நிவாரணப் பொருட்கள...
ஓடிடி ரிலீசுக்காக காத்திருக்கும் நயன்தாராவின் 3 படங்கள்!

ஓடிடி ரிலீசுக்காக காத்திருக்கும் நயன்தாராவின் 3 படங்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
ஓடிடி ரிலீசுக்காக காத்திருக்கும் நயன்தாராவின் 3 படங்கள்! கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால் புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட தயாரிப்பாளர்கள் முனைப்பு காட்டி வருகிறார்கள். ஏற்கனவே சூரரைப் போற்று, பூமி, பொன்மகள் வந்தாள், பென்குயின், க.பெ.ரணசிங்கம், லாக்கப், டேனி, பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி.யில் வந்துள்ளன. தற்போது நரகாசுரன், வாழ், எப்.ஐ.ஆர் ஆகிய படங்களையும் ஓ.டி.டிக்கு கொடுக்க முயற்சி நடக்கிறது. இந்நிலையில் நயன்தாராவின் 3 படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் ஓ.டி.டியில் வந்தது. தற்போது அவரது நெற்றிக்கண், ராக்கி, கூழாங்கல் ஆகிய படங்களை வாங்கி வெளியிட ஓ.டி.டி. தளங்கள் அணுகி இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இதில் நெற்றிக்கண் படத்தில் நயன்தாராவே நடித்து இருக்கிறார். ராக்கி படத்தின் வ...
சினிமா தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் யாஷ் – ரூ.1.5 கோடி வழங்கினார்!

சினிமா தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் யாஷ் – ரூ.1.5 கோடி வழங்கினார்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
சினிமா தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் யாஷ் - ரூ.1.5 கோடி வழங்கினார்! கே.ஜி.எப் படம் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் நடிகர் யாஷ். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தை வருகிற ஜூலை 16-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி தவித்து வரும் கன்னட சினிமா தொழிலாளர்களுக்கு நடிகர் யாஷ் உதவிக்கரம் நீட்டி உள்ளார். இதற்காக அவர் ரூ.1.5 கோடி நிதியுதவி வழங்கி உள்ளார். இந்தத் தொகை சுமார் 3 ஆயிரம் சினிமா தொழிலாளர்களுக்கு தலா ரூ.5000 வீதம் பிரித்து வழங்கப்பட உள்ளதாம். நடிகர் யாஷின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது....
நடிகையை அடித்து சித்ரவதை செய்த நடிகர் கைது!

நடிகையை அடித்து சித்ரவதை செய்த நடிகர் கைது!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகையை அடித்து சித்ரவதை செய்த நடிகர் கைது! இந்தியில் ரபூ சக்கார், ஹாஸ்டி ஹாஸ்டி, ஜாக் இன் ஜோஹி, டாம் டிக் ஹாரி ராக் அகைன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிஷா ராவல். இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இவருக்கும், டி.வி. நடிகர் கரண் மேஹ்ராவுக்கும் 2017-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நிஷா ராவலுக்கும், கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். விவாகரத்து செய்து கொள்ளவும் முடிவு செய்து இருந்தனர். இந்நிலையில், கணவர் தன்னை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்ததாகவும், சுவரில் தள்ளியதாகவும், இதில் தனது தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது என்றும் மனுவில் கூறியுள்ளார். இதையடுத்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி கரண் மேஹ்ராவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்தார். இந்த விவகாரம் பாலிவுட் திரையுலகில்...
கொரோனா தடுப்பு பணிகள்- மருத்துவ குழுவினருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

கொரோனா தடுப்பு பணிகள்- மருத்துவ குழுவினருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா தடுப்பு பணிகள்- மருத்துவ குழுவினருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை! கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவியதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். தினமும் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் முழு ஊரடங்கு கடந்த மாதம் 24-ந்தேதியில் இருந்து பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 1-ந்தேதியில் இருந்து மேலும் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவுவது குறைந்துள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட குறிப்பிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தொற்று எதிர் பார்த்த அளவுக்கு குறையவில்லை. இதனால் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். இதையொட்டி இந்த மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரண...
பிளஸ்-2 தேர்வு குறித்து 2 நாட்களில் தெரிவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

பிளஸ்-2 தேர்வு குறித்து 2 நாட்களில் தெரிவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பிளஸ்-2 தேர்வு குறித்து 2 நாட்களில் தெரிவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி! தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகளை நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். ஆலோசனைக்குப் பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. மத்திய அரசு நடத்திய ஆலோசனையின் போது பெரும்பாலான மாநிலங்கள் பிளஸ்-2 தேர்வை நடத்தக்கோரியிருந்தன. ஆனால், சிபிஎஸ்இ தேர்வை மத்திய அரசு நேற்று ரத்து செய்துள்ளது. தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நிபுணர்கள், கல்வியாளர்களின் கருத்தை கேட்டு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும். 14417 என்ற தொலைபேசி எண்ணில் கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்...