செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

கொரோனா பாதிப்பு…. நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

கொரோனா பாதிப்பு…. நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்! கொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை நடிகர் பாண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி குமுதா, தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். பாண்டு - குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய 3 மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த நடிகர் பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார். அதிமுக கட்சியின் கொடியை வடிவமைத்ததும் பாண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டுவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்....
திரிஷாவின் திருமணம் பற்றி பிரபல நடிகை வெளியிட்ட தகவல்!

திரிஷாவின் திருமணம் பற்றி பிரபல நடிகை வெளியிட்ட தகவல்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
திரிஷாவின் திருமணம் பற்றி பிரபல நடிகை வெளியிட்ட தகவல்! சினிமாவில் 18 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் மே 4-ந்தேதியான நேற்று தனது 38ஆவது பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடியிருக்கிறார். அவருக்கு அவரது சினிமா நண்பர்கள் பலரும் வாழ்த்து கூறினார்கள். இந்நிலையில் திரிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ள நடிகை சார்மி, திரிஷாவின் திருமணம் குறித்தும் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில், திரிஷா பேச்சுலராக கொண்டாடும் கடைசி பிறந்தநாள் இதுவாகத்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் திரிஷா விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்பதை அவர் மறைமுகமாக இப்படி தெரிவித்துள்ளார். நடிகை சார்மியும் திரிஷாவும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது....
முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி!

முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி! தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். குறிப்பாக திரையுலகிலிருந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலரும் அவருக்கு நேரிலும் சமூக வலைதளம் மூலமும், தொலைபேசியிலும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்கள். இந்த நிலையில் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்பட 67 பேர் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் அவர்கள் 14 கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை, கூடங்குளம் உள்பட 14 கோரிக்கைகள் அவர்களுடைய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாகவும், அந்த கோரிக்கைகளை கூடிய விரைவில் நிறைவேற்றும்படியும் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்பட 67 பேர் கையெழுத்து போட்டு கொடுத்திருப்பதாக தகவல்கள்...
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டத்தால் பரபரப்பு!

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டத்தால் பரபரப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டத்தால் பரபரப்பு! கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளிலும் இதேநிலை நீடிக்கிறது. தமிழகத்திலும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 23 ஆயிரத்து 310 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 167 பேர் இறந்துள்ளனர். இதற்கிடையே டெல்லி, கர்நாடகா மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வந்த நிலையில், வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடந்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 4 ...
ஆக்சிஜன் இல்லா மரணம்.. இனப்படுகொலைகளுக்கு சமமானது – அலகாபாத் உயர் நீதிமன்றம் காட்டம்

ஆக்சிஜன் இல்லா மரணம்.. இனப்படுகொலைகளுக்கு சமமானது – அலகாபாத் உயர் நீதிமன்றம் காட்டம்

HOME SLIDER, NEWS
  ஆக்சிஜன் சப்ளை இல்லாமல் தட்டுப்பாடுகளினால் கொரோனா நோயாளிகள் மரணமடைவது இனப்படுகொலைகளுக்கு குறைவானதல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது கொரோனா பரவல் மற்றும் கொரோனா தனிமைப்படுத்துதல் மையங்கள் நிலவரம் குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சித்தார்த் வர்மா, அஜித் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது, ஆக்சிஜன் சப்ளை தட்டுப்பாடுகளினால் மருத்துவமனைகளில் நோயாளிகள் இறப்பது எங்களுக்கு வலியை தருகின்றது, இது குற்றச்செயல், இனப்படுகொலைக்கு சற்றும் குறைந்ததல்ல நாம் எப்படி நம் மக்களை இப்படி சாக விடலாம். அதுவும் விஞ்ஞானம் இவ்வளவு முன்னேற்றம் அடைந்த நிலையில் இருதய மாற்று அறுவை சிகிச்சை, மூளை அறுவை சிகிச்சையெல்லாம் வெற்றிகரமாக நடைபெறும் போது இதில் நாம் இப்படி அசட்டையாக இருக்கலாமா? என உத்தரபிரதேச அரசுக்கு நீ...
மதுரை கீழடி மூடியுடன் கூடிய மண்பானை கண்டெடுப்பு!

மதுரை கீழடி மூடியுடன் கூடிய மண்பானை கண்டெடுப்பு!

HOME SLIDER, NEWS, politics
  மதுரை கீழடியில் நடந்து வரும் ஏழாம் கட்ட அகழாய்வின்போது மூடியுடன் கூடிய மண்பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 13ஆம் தேதியில் இருந்து கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதுவரை ஐந்து குழிகள் தோண்டப்பட்டுள்ளதாகவும் இருவண்ணப் பானைகள், பானை ஓடுகள், பகடை, கல்லால் ஆன உழவுக் கருவி உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், மூன்றாவதாகத் தோண்டப்பட்ட குழியில் இருந்து ஒன்றரை அடி உயரத்திலான மண்பானை கிடைத்துள்ளது. இப்பானை உடையாமல், மூடியுடன் இருப்பது ஆய்வாளர்களிடம் வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை சேதமடைந்த நிலையிலேயே பானைகள் கிடைத்து வந்த நிலையில், முழுவதும் மூடப்பட்ட நிலையில் இந்தப் பானை கிடைத்துள்ளது. இறுக்கமாக மூடப்பட்டுள்ள நிலையில் பானை கிடைத்துள்ளதால் அதனுள்ளே வேறு பொருள்கள் இருக்கக்கூடும் எனத் த...
தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்!

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்!

HOME SLIDER, NEWS, politics
  தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக விதிக்கப்பட்டு வருகிறது கடந்த மாதம் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு தினமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து கடைகளையும் இரவு 9 மணிக்குள் மூடிவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு பிறகு அவசர தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி வெளியில் யாராவது வாகனங்களில் வந்தால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தமிழகத்தில் தேர்தல் முடிந்து புதிய அரசு நாளை மறுநாள் பொறுப்பேற்க உள்ளது. அதே நேரத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது. அது நாளை அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி நா...
‘அடங்காதே’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

‘அடங்காதே’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
‘அடங்காதே’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்! காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவரையும் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும், கா/பெ ரணசிங்கம் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் இவர், துருவ நட்சத்திரம், திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக், மோகன் தாஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்தும் கொண்ட படமாக உருவாகும் இதில் சமுத்திரகனி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தை இயக்குனர் சண்முகம் முத்துசா...
குவியும் பட வாய்ப்பு…. கால்ஷீட் கொடுக்க மறுக்கும் பூஜா ஹெக்டே !

குவியும் பட வாய்ப்பு…. கால்ஷீட் கொடுக்க மறுக்கும் பூஜா ஹெக்டே !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
குவியும் பட வாய்ப்பு.... கால்ஷீட் கொடுக்க மறுக்கும் பூஜா ஹெக்டே ! தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். தற்போது தமிழ், தெலுங்கும், இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் ஆச்சார்யா, ராதே ஷியாம், மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர், சர்க்கஸ், தளபதி 65 போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் உள்ளன. இந்நிலையில் மகேஷ்பாபு, திரிவிக்ரம் இணையும் படத்தில் பூஜா ஹெக்டே நடிப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள பூஜா ஹெக்டே, இப்போதைக்கு தனது முழுக் கவனமும் கைவசமுள்ள படங்களில் தான் உள்ளதாக தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் குறைந்த பிறகு கைவசம் உள்ள படங்களில் நடித்து முடித்த பிறகுதான் மற்ற நடிகர்களின் படங்களில் நடிப்பத...
காதல் விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன்? – நடிகை ரகுல் பிரீத் சிங் விளக்கம்!

காதல் விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன்? – நடிகை ரகுல் பிரீத் சிங் விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
காதல் விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன்? - நடிகை ரகுல் பிரீத் சிங் விளக்கம்! தமிழில் கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், சூர்யாவுடன் என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் பிரீத் சிங். இவர் தற்போது கமலுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுடன் அயலான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் அடிக்கடி காதல் கிசுகிசுக்களில் சிக்குவதும் உண்டு. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில், தன்னைப்பற்றி காதல் கிசுகிசுக்கள் தற்போது வராததால் நிம்மதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: “கடந்த சில ஆண்டுகளாக இந்தி மற்றும் தெலுங்கு நடிகர்களுடன் இணைத்து என்னைப்பற்றி பலதரப்பட்ட காதல் கிசுகிசுக்கள் வெளியாகின. அவை அனைத்துமே பொய்யான செய்திகள் என்பதால் அவற்றுக்கு நான் பதில் கொடுக்கவில்லை. அந்த சமயத்தில் நான் அமைதியாக இருந்ததால், ஒரு கட்டத்தில் அந்த வதந்திகள் மாயமாகி விட்டன. இப்போது...