செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

ஆஸ்கர் 2021 – விருது வென்றவர்கள் முழு விவரம்!

ஆஸ்கர் 2021 – விருது வென்றவர்கள் முழு விவரம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
ஆஸ்கர் 2021 - விருது வென்றவர்கள் முழு விவரம்! உலகளவில் திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் எனும் அகாடமி விருது. இவ்விருது விழா, வழக்கமாக பிப்ரவரி மாதம் நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக, 93 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2 மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டது. உலகமே உற்று நோக்கிய 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடந்தது. இதில் கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 23 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருதை வென்ற படங்கள், கலைஞர்கள் குறித்த முழுவிவரம் வருமாறு: சிறந்த படம் -  நோ மேட்லாண்ட் சிறந்த இயக்குனர் -  க்ளோயி சாவ் (நோ மேட்லாண்ட்) சிறந்த நடிகர் -  அந்தோணி ஹாப்கின்ஸ் (தி பாதர்) சிறந்த நடிகை -  பிரான்சஸ் மெக்டார்மண்ட் (நோ மேட்லாண்ட்) ...
கொல்கத்தா அணி 4-வது தோல்வி!

கொல்கத்தா அணி 4-வது தோல்வி!

HOME SLIDER, sports, செய்திகள்
கொல்கத்தா அணி 4-வது தோல்வி ! ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பையில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தது. அதிகபட்சமாக திரிபாதி 36 ரன் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் கிறிஸ்மோரிஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து விளையாடிய ராஜஸ்தான் 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்து வென்றது. கேப்டன் சஞ்சு சாம்சன் 42 ரன்னும், டேவிட் மில்லர் 24 ரன்னும், ஷிலம் துபே, ஜெய்ஸ்லால் தலா 22 ரன்னும் எடுத்தனர். ராஜஸ்தான் பெற்ற 2-வது வெற்றி (5 ஆட்டம்) இதுவாகும். கொல்கத்தா 4-வது தோல்வியை (5 ஆட்டம்) சந்தித்தது. இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:- இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பந்துவீச்சாளர்கள...
கொரோனா ஊரடங்கு எதிரொலி… எளிய முறையில் நடந்த ‘பிகில்’ பட ஒளிப்பதிவாளர் திருமணம்!

கொரோனா ஊரடங்கு எதிரொலி… எளிய முறையில் நடந்த ‘பிகில்’ பட ஒளிப்பதிவாளர் திருமணம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
கொரோனா ஊரடங்கு எதிரொலி... எளிய முறையில் நடந்த ‘பிகில்’ பட ஒளிப்பதிவாளர் திருமணம்! விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான மெர்சல், பிகில் மற்றும் தெலுங்கில் ரவிதேஜா, சுருதிஹாசன் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற கிராக் போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஜி.கே.விஷ்ணு. இவருக்கும் மஹாலட்சுமி என்பவருக்கும் இன்று காலை சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோயிலில் திருமணம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக, பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி மிக எளிய முறையில் நடைபெற்ற இத்திருமணத்தில், மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர், மிக முக்கிய சொந்தங்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகைகள் வரலட்சுமி சரத்குமார், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர். மேலும் ரசிகர்களும், பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்....
‘தளபதி 65’ முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு – ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பினார் விஜய்!

‘தளபதி 65’ முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு – ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பினார் விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘தளபதி 65’ முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு - ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பினார் விஜய்! நடிகர் விஜய் தற்போது ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதற்காக விஜய் உள்பட சில நடிகர்-நடிகைகள் மற்றும் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டும் ஜார்ஜியாவுக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார்கள். அங்கு 3 நாட்கள் அடைமழை பெய்ததால், அந்த மூன்று நாட்களும் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. மழை நின்றபின், படப்பிடிப்பை தொடங்கி, தொடர்ந்து நடத்தினார்கள். ஏற்கனவே திட்டமிட்டபடி, 2 வாரத்தில் ஜார்ஜியா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டன. இதையடுத்து விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் இன்று சென்னை திரும்பினார்கள். தளபதி 65 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் ...
தமிழகத்தில் முழு ஊரடங்கு – எந்தெந்த பணிகளுக்கு அனுமதி?

தமிழகத்தில் முழு ஊரடங்கு – எந்தெந்த பணிகளுக்கு அனுமதி?

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் முழு ஊரடங்கு - எந்தெந்த பணிகளுக்கு அனுமதி? தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இன்று அமலில் இருக்கும் முழு ஊரடங்கில் அரசு விலக்கு அளித்துள்ள பணிகள் விவரம் வருமாறு: பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம் வழக்கம்போல் நடைபெறலாம். ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் வழக்கம்போல் பணியாற்றலாம். மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருத்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் நடைபெறலாம். அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளைப்பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்கள், பெட்ரோல்-டீசல், எல்.பி.ஜி. கியாஸ் போன்ற எரிபொருளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் இயங்கலாம். தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படலாம். ஓட்டல்...
காதலை எதிர்த்த அண்ணனை கூலிப்படையை வைத்து கொலை செய்த நடிகை!

காதலை எதிர்த்த அண்ணனை கூலிப்படையை வைத்து கொலை செய்த நடிகை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
காதலை எதிர்த்த அண்ணனை கூலிப்படையை வைத்து கொலை செய்த நடிகை! கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே கேஷ்வாப்பூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலையில்லாமல் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆணின் உடல் கிடந்தது. இதுபற்றி கேஷ்வாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபரை யாரோ மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி காரில் கொண்டு வந்து சாலையோரம் வீசிவிட்டு சென்றிப்பது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது படுகொலை செய்யப்பட்டது ‘மிஸ் கர்நாடகா’ அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், நடிகையுமான ஷான்யா காடவேயின் அண்ணன் ராகேஷ் என்பது தெரியவந்தது. அதாவது மும்பைய...
ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதுல்யா ரவி!

ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதுல்யா ரவி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதுல்யா ரவி! சமூகவலைதளங்களில் போலிக்கணக்கு உருவாக்குவது என்பது மிகச் சாதாரணம் ஆகிவிட்டது. கையில் இன்டர்நெட் இருந்தாலே போதும். பிரபலங்களின் பெயரில் போலிக்கணக்கு துவங்கி அந்தக் கணக்குகளைத் தவறான வழிகளில் பயன்படுத்துகின்றனர். இது தொடர்பாக அந்த பிரபலத்தின் பெயருக்குத் தான் கலங்கம் ஏற்படுகிறது. இதனாலேயே பிரபலங்கள் தங்கள் பெயரில் போலிக்கணக்குகள் இருப்பது தெரிய வந்தால், உடனே ரசிகர்களை எச்சரித்து விடுகின்றனர். தற்போது நடிகை அதுல்யாவும் இந்த பிரச்சனைக்கு ஆளாகியுள்ளார். அதுல்யா பெயரில் பேஸ்புக்கில் போலிக்கணக்கு துவங்கப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதுகுறித்து தெரிய வந்த அதுல்யா, உடனே அந்தப் போலிக்கணக்கு குறித்து தன்னுடைய ரசிகர்களை எச்சரித்துள்ளார். “பேஸ்புக்கில் யாரோ ஒரு போலி ஐடியை உருவாக்கி, திரைப்படத் துறையில் எனக்குத் தெரிந்தவர்களுக்கு தனிப்பட...
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது – விதிகளை மீறினால் வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல்!

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது – விதிகளை மீறினால் வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது - விதிகளை மீறினால் வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல்! வேகமாக பரவும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்வதுடன் அவர்கள் பயணித்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிதீவிரமாக பரவி வருவதைத் தொடர்ந்து, கடந்த 20-ந் தேதி (செவ்வாய்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை அமலில் இருக்கும் இந்த ஊரடங்கின்போது, தனியார் மற்றும் பொது போக்குவரத்து, வாடகை ஆட்டோ, வாடகை கார் மற்றும் தனியார் வாகன போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது. இதன் காரணமாக, தொலைதூரம் செல்லும் பஸ்கள் தற்போது பகல் நேரத்திலேயே இயக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும்...
கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய தமிழக அரசு!

கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய தமிழக அரசு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய தமிழக அரசு! தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, *தனியார், அரசு பேருந்துகளில் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் மட்டுமே பயணிக்கலாம். *ஐடி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50% பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது கட்டாயம். *கோல்ஃப், டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு சங்கங்கள் செயல்பட அனுமதி இல்லை. *சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளுக்கு மட்டும் அனுமதி.  *திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது இறுதி ஊர்வலம், சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை. *அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. *உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு மட்டும் நடத்த அனுமதி. *உணவகங்கள், டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி. ...
விஜய் சேதுபதி பாடல் படைத்த சாதனை!

விஜய் சேதுபதி பாடல் படைத்த சாதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
விஜய் சேதுபதி பாடல் படைத்த சாதனை! விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘லாபம்’. எஸ்.பி.ஜனநாதன் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், யாழா யாழா என்ற முதல் சிங்கில் பாடலும் டிரெண்டிங்கில் இடம்பெற்றது. இதையடுத்து யாமிலி யாமிலியா என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இப்பாடல் வெளியான 24 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது....