இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர் கேள்வி எழுப்பி பதில் பெற்றுள்ளார்.
அந்த பதிலில் ரெயில்வே தெரிவித்துள்ள தகவல்கள் வருமாறு:-
* 2021-22 நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து மாட்டிக்கொண்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 78 லட்சம் ஆகும். இவர்கள் முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ்களுடன் பயணித்ததும் தெரிய வந்தது.
* உரிய டிக்கெட் இன்றி பயணம் செய்த இவர்களிடம் ரூ.1,017 கோடியே 48 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
* கொரோனா காலத்தில் பயணிகள் போக்குவரத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டிருந்தபோது இத்தகைய பயணிகளின் எண்ணிக்கை 27 லட்சம்.
* இப்பொழுதும் ரெயில்களில் டிக்கெட் இன்றி பயணிப்பதற்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுவது, கொரோனா கால கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும், விரைவு மற...
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டுக்கு இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு மொத்தம் 108 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் நகராட்சியில் மொத்தமுள்ள 28,042 வாக்காளர்களில் 21,435 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது 76.44 சதவீதமாகும்.
இந்தநிலையில், ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 16-வது வார்டுக்கு மறு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.
ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் பிரதான கட்சிகளில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக இதயராணி கை சின்னத்திலும்,
அ.தி.மு.க. வேட்பாளராக மலர்விழி இரட்டை இலை சின்னத்திலும், பா.ம.க. வேட்பாளராக இந்திராகாந்தி மாம்பழம் சின்னத்திலும் போட்டி...
நந்தி ஹில்ஸ்:
கர்நாடகாவின் நந்தி மலையில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிஷாங்க் என்ற மாணவன், எதிர்பாராத விதமாக 300 அடிக்கு கீழே விழுந்து பிரம்மகிரி பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த சிக்பல்லப்பூர் மாவட்ட ஆட்சியர், மீட்பு நடவடிக்கை தொடர்பாக யெலஹங்கா பகுதி விமானப்படையினருக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அந்த மாணவரை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிக்கபள்ளாபூர் பகுதி போலீசாரும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு பாறை இடுக்கில் அசைய முடியாமல் சிக்கியிருந்த நிஷாங்கை கண்டு பிடித்த விமான படையினர் அவரை பத்திரமாக மீட்டனர். விமானப்படைய சேரந்த மருத்துவ உதவியாளர் அந்த மாணவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்....
உக்ரைன் - ரஷியா இடையேயான பதற்றம் குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசி மூலம் தனித்தனியாக விவாதித்தார். ரஷியா படையெடுப்பை தடுக்கும் நடவடிக்கை குறித்து இரு தலைவர்களுடன் அவர் பேசினார்
உக்ரைன் சூழலால் ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து அமெரிக்கா, ரஷியா அதிபர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் அப்போது கேட்டுக் கொண்டார். இதை ஜே பைடனும், விளாடிமிர் புதினும் ஏற்றுக் கொண்டதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்புத்துறை செயலாளர் ஜென்சாகி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அமெரிக்கா, ரஷியா அதிபர்கள் சந்திக்கும் உச்சி மாநாடு குறித்தும், அதில் விவாதிக்கப்படும் பொருள் குறித்த அறிக்கைகைளை தயாரிப்பது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் ரஷ்ய வெளியுறவு மந்...
நீ எடுத்த படம் எல்லாம் நல்லா ஓடிச்சுன்னு சொன்னாங்க அது எல்லாம் நீதான் எடுத்தியா என்ற சந்தேகம் எனக்கு வந்து விட்டது என ஆர்.கே.செல்வமணியை, இயக்குநர் கே.பாக்யராஜ் விமர்சித்துள்ளார்.
தற்போது உள்ள இயக்குனர் சங்க நிர்வாகிகளை சந்திப்பதே மிக சவாலான ஒன்றாக இருக்கிறது.
தொலைபேசியில் கூட அணுக முடியவில்லை ஆனால் நான் நீண்ட ஆண்டுகளாக ஒரே தொலைபேசி எண்ணை தான் வைத்துள்ளேன் நான் வெற்றிபெற்றால் இயக்குனர்கள் எந்த பிரச்சனை என்றாலும் என்னை அழைக்கலாம் என இமயம் அணி தலைவர் வேட்பாளர் கே.பாக்யராஜ் பேசினார்.
வரும் 27ம் தேதி நடைபெறும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணி போட்டியிட உள்ளது .
தலைவர் பதவிக்கு பாக்யராஜ், செயலாளர் பதவிக்கு பார்த்திபன், பொருளாளர் பதவிக்கு வெங்கட் பிரபு என மொத்தம் 30 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் இயக்குன...
இந்தியில் மிகப் பெரிய ஹிட் அடித்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் அறிமுகப்படுத்தியது ஸ்டார் விஜய்.
இந்தியில் ஒருமுறை கூட பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்களுக்கு 100 நாட்கள் ஒரே வீட்டில் போட்டியாளர்கள் என்ற கான்செப்ட் கண்களை விரிவடைய செய்தது.
மிகப் பெரிய எதிர்பார்ப்பில் 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் முதல் சீசனை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். தமிழில் பிக் பாஸ் முதல் அறிமுகம் என்பதால் மிகப் பெரிய ஹிட் அடித்தது.
இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது கூடுதல் பலமானது.
அவரின் கண்டிப்பு கலந்த மரியாதை, போட்டியாளர்களை பதில் பேச விடாமலே தப்பை புரிய வைப்பது,
தமிழிலே பேசி நிகழ்ச்சியை கொண்டு போவது என வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே கிடைக்கும் கமலின் தரிசனம் பிக் பாஸ் ஷோவுக்கு மிகப் பெரிய பலம் சேர்த்தது
இவரைத் தவிர வேர யாரும் இந்த நிகழ்ச்சியை இவ...
இசைக்கு எல்லை என்பதே இல்லை என்று சொல்வார்கள்.
அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது.
இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 1400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இளையாராஜா அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் சூப்பர்மேன், பேட்மேன் படங்களின் பாகங்களை உதாரணம் காட்டி அவர் உருவாக்கி வரும் “ஹவ் டூ நேம் இட்” என்ற இசை சீரிஸின் இரண்டாம் பாகத்தை பற்றி பேசி பதிவிட்டுள்ளார்.
இந்த இசை சீரிஸ் விரைவில் வெளிவரும் என பதிவிட்டு ஒரு வீடியோ பதிவின் வாயிலாக அந்த இசை சீரிஸ் பாகம் 2 பற்றி அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த பதிவு அனைவரின் இசை ஆர்வத்தை இழு...
பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திர புன்னகை போன்ற பல படங்களை இயக்கியவர் கரு.பழனியப்பன்.
இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பயணித்து வருகிறார். கரு.பழனியப்பன் அடுத்து கதாநாயகனாக ”கள்ளன்” படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான சந்திரா தங்கராஜ் இயக்கியுள்ளார்.
இதில் நிகிதா, வேலா ராமமூர்த்தி, நமோ நாரயணன், செளந்தர்ராஜா, தினேஷ் சுப்பராயன், ரெஜின், பருத்திவீரன் முருகன் போன்ற பலர் நடித்துள்ளனர்.
கள்ளன் படத்தின் டைட்டிலுக்கு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதன்பின் ‘கள்ளன்’ படத்தின் தலைப்பை மாற்றாமல் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இதனை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி வழக்...
தமிழில் இயக்குனர் செல்வராகன் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமசுடன் இணைந்து 'வாசி' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் விஷ்ணு ஜி.ராகவ் இயக்கியுள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் இருவரும் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
'வாசி' திரைப்படத்தை கீர்த்தி சுரேசின் அக்கா தன்னுடைய ரேவதி கலாமந்திர் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் போலவுள்ளது என ரசிகர்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர்....