ராதிகா சரத்குமாரின் “அண்ணாதுரை”
எந்த பணியிலும் தன்னுடைய பங்களிப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும், தொழில் பக்தியும் ஒருங்கே பெற்றவர் எந்த துறையிலும் இருந்தாலும் அவர்களின் வெற்றி ஊர்ஜிதமாக இருக்கும்.திரை துறையில் கூட தன்னுடைய பிரத்யேக, கூடுதல் உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அப்படத்தை மேலும் சிறப்பிப்பதில் முக்கியமானவர் விஜய் ஆன்டனி. தனது அர்பணிப்பாலும், நடிப்பு திறனாலும் , இசையமைப்பாலும் ரசிகர்களுக்கு புதிதாக ஏதாவது தரவேண்டும் என்ற முனைப்போடு என்றுமே உழைப்பவர் அவர்.
தனது ஒவ்வொரு படத்திலும் வித்யாசமான கதையையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து ரசிகர்களை ஆச்சிரியபடுத்தி மகிழ்விக்கும் விஜய் ஆன்டனி, புது முக இயக்குனர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் 'அண்ணாதுரை" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடந்தது.
ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் ஆண்டனி படங்களென்றாலே வித்தியாசமாக இ...









