சென்னைக்கு வந்த மு.க அழகிரி!
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி, சென்னையில் முகாமிட்டு புதுக்கட்சி துவக்கி, நடிகர் ரஜினியுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அழகிரியை, மீண்டும் தி.மு.க.,வில் சேர்க்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். ஆனால், இதனை திமுக தலைவர் ஸ்டாலின் விரும்பவில்லை என தெரிகிறது. சென்னை அறிவாலயத்தில், நேற்று மாவட்ட செயலர்கள் கூட்டம் முடிந்த பின், முதன்மை செயலர் கே.என்.நேரு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ‘அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்ப்பீர்களா?’ என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, ‘கட்சி தலைமை முடிவு செய்யும்’ என்றார் நேரு. இந்நிலையில், அழகிரி நேற்று மதுரையில் இருந்து, சென்னைக்கு காரில் வந்தடைந்தார். ஒரு வாரம் சென்னையில் தங்குகிறார். இதுகுறித்து, அழகிரி ஆதரவாளர்கள் தெரிவிக்கும் போது தி.மு.க.,வில் இ...









