ரஜினிகாந்த் பாராட்டியதை மறக்க முடியாது மனம் திறந்த ஜிவி ஹீரோ வெற்றி!
ரஜினிகாந்த் மற்றும் விவேக்கின் பாராட்டுக்கள் மறக்க முடியாதவை - நடிகர் வெற்றி
'8 தோட்டாக்கள்' மூலம் நாயகனாக அறிமுகமாகி அனைவரின் பாராட்டைப் பெற்று, 'ஜீவி' படத்தில் சிறந்த நடிகன் என்ற அந்தஸ்த்தைப் பெற்றவர் நடிகர் வெற்றி. தற்போது 5 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் விவரங்களை பகிர்ந்து கொண்டதாவது :-
'கேர் ஆஃப் காதல்', இப்படம் 'கேர் ஆப் கச்சிராப்பலம்' என்ற
தெலுங்கு படத்தின் மறு உருவாக்கம். இப்படத்தை ஹேமம் பார் இயக்குகிறார். காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. 'இறுதிச்சுற்று' படத்தில் நாயகிக்கு அக்காவாக நடித்த மும்தாஜ் எனக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் 'தாடி'. பிப்ரவரி மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
இந்த படத்திற்கு பிறகு 'வனம்' படம் வெளியாகும்.
'தடம்' படத்தின் நாயகியாக நடித்த ஸ்ம்ருதி இந்த படத்திலும் நாயகியாக நடிக்கிறார். கலை ...









