வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

HOME SLIDER

ராதிகா சரத்குமாரின் “அண்ணாதுரை”

ராதிகா சரத்குமாரின் “அண்ணாதுரை”

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  எந்த பணியிலும் தன்னுடைய பங்களிப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும், தொழில் பக்தியும் ஒருங்கே பெற்றவர் எந்த துறையிலும் இருந்தாலும் அவர்களின் வெற்றி    ஊர்ஜிதமாக இருக்கும்.திரை துறையில் கூட தன்னுடைய பிரத்யேக, கூடுதல் உழைப்பையும்  கவனத்தையும்  செலுத்தி அப்படத்தை மேலும் சிறப்பிப்பதில்  முக்கியமானவர் விஜய் ஆன்டனி. தனது அர்பணிப்பாலும், நடிப்பு திறனாலும் , இசையமைப்பாலும்  ரசிகர்களுக்கு புதிதாக ஏதாவது தரவேண்டும் என்ற முனைப்போடு என்றுமே உழைப்பவர் அவர். தனது ஒவ்வொரு படத்திலும் வித்யாசமான கதையையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து ரசிகர்களை ஆச்சிரியபடுத்தி மகிழ்விக்கும் விஜய் ஆன்டனி, புது முக இயக்குனர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் 'அண்ணாதுரை" என்ற  படத்தில் நடித்து வருகிறார். இப்படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடந்தது. ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் ஆண்டனி படங்களென்றாலே வித்தியாசமாக இ...
வித்தியாசமான முயற்சி  ‘ஆறாம் வேற்றுமை’ விமர்சனம்

வித்தியாசமான முயற்சி ‘ஆறாம் வேற்றுமை’ விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
  வித்தியாசமான முயற்சி ‘ஆறாம் வேற்றுமை’ - கோடங்கி   ‘ஆறாம் வேற்றுமை’ கதை தொடங்குவதற்கு முன்பு மலை கிராமங்களின் விவரங்கள், அதன் மக்கள்... அதில் இருந்து விலகி நிற்கும் மர்மம் நிறைந்த ‘கூனிக்காடு’ மலை கிராமம்... என பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியபடியே தொடங்குகிறது படம்..!   கூனிக்காடு, கோட்டைக்காடு என்ற இரு மலைக் கிராமங்கள். இதில் கோட்டைக்காடு மலை கிராமத்தில் திடீர் திடீரென ஆட்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலைகளை யார் செய்வது என்பது தெரியாமல் கிராமத்து ஆட்கள் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். போலீஸ் அதிகாரிகள் தனி குழு வைத்து கொலையாளியை பிடிக்க வருகிறார்கள். கொலைகள் ஏன் நடக்கிறது. கொலையாளியை போலீஸ் பிடித்ததா கூனிக்காடு, கோட்டைக்காடு இரண்டுக்கும் ஏற்பட்ட பகை என்ன, காட்டுவாசி கூட்டம் என்ன ஆனது என்பதை விளக்குகிறது ‘ஆறாம் வேற்றுமை’ படம். கோட...
நெருப்புடா விமர்சனம்

நெருப்புடா விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
  நெருப்புடா விமர்சனம் கோடங்கி     வேலை என்று செய்தால் அது `தீயணைப்பு வீரர்’ பணிதான் என்ற லட்சியத்தை கொண்ட இளைஞன்தான் விக்ரம்பிரபு இவரது நண்பர்கள் 4 பேரும் இவரோடு கைகோர்க்கிறார்கள். இந்த ஐவர் குழு சொந்தமாக தீயணைப்பு வாகனம் ஒன்றை வைத்துக் கொண்டு தீ பிடிக்கும் இடங்களுக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியை செய்கிறார்கள். தீயணைப்பு துறையில் சேருவதற்கு முயற்சிக்கிறார்கள். இதற்காக தேர்வு எழுத காத்திருக்கிறார்கள். தேர்வுக்கு முதல் நாள் இரவு ஒரு எதிர்பாராத சம்பவம் இந்த 5 பேரில் ஒருவருக்கு நடக்கிறது. அதன் மூலம் ஏற்படும் திருப்பங்களால் இவர்கள் தேர்வு எழுதினார்களா, இவர்கள் லட்சியம் வெற்றி பெற்றதா... அந்த சம்பவத்தால் ஹீரோவுக்கு என்ன பாதிப்பு என்பதை எல்லாம் சொல்கிறது நெருப்புடா படம்.   சென்னை சிலேட்டர்புரத்தைச் சேர்ந்தவர்கள் விக்ரம்பிரபுவும் அவரின் நான்கு நண்பர்கள...
மாடல் தீக்‌ஷிதாவை கரம் பிடிக்கிறார் இசையமைப்பாளர் தரண்… செப்.15ல் திருமணம்..!

மாடல் தீக்‌ஷிதாவை கரம் பிடிக்கிறார் இசையமைப்பாளர் தரண்… செப்.15ல் திருமணம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான இசையால், நல்ல ஒரு இடத்தை பிடித்திருக்கும் இசையமைப்பாளர் தரண். பாரிஜாதம், போடா போடி, நாய்கள் ஜாக்கிரதை, ஆஹா கல்யாணம் என நல்ல தரமான இசையை வழங்கிய தரண் இதுவரை 25 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஆஹா கல்யாணம் படத்துக்கு இசையமைத்த தரண், கூடிய விரைவில் திருமண பந்தத்தில் இணையவிருக்கிறார். சென்னையை சேர்ந்த  மாடல் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் தீக்‌ஷிதாவை வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி மணக்கிறார். திருமண வரவேற்பு செப்டம்பர் 16ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. அவரும், மணப்பெண் தீக்‌ஷிதாவும் தங்களது திருமணம் குறித்து மனம் திறந்து பேசினர். தரண் கூறும்போது, "நான் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை 25 படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். சமீபத்தில் தான் என் 25வது படமான பிஸ்தா படத்தின் இசைக் கோர்ப்பை முடித்தேன். என் எல்லா தருணங்களிலும் என்...
மகேஷ்பாபுவுக்கு வரவேற்பு முருகதாசுக்கு வேண்டுகோள் ஸ்பைடர் பாடல் விழாவில் விஷால் பேச்சு

மகேஷ்பாபுவுக்கு வரவேற்பு முருகதாசுக்கு வேண்டுகோள் ஸ்பைடர் பாடல் விழாவில் விஷால் பேச்சு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, ரகுல் பிரீத் சிங், எஸ் ஜே சூர்யா நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 'ஸ்பைடர்'. என்விஆர் சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ் உரிமையை லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ் பெற்றுள்ளது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழா அரங்கம் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தார்கள் மகேஷ்பாபுவின் ரசிகர்கள். நான் ரஜினி, அஜித், விஜய் போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் நடித்ததில்லை. முதல் முறையாக ஒரு மாஸ் சூப்பர் ஸ்டாருடன் நடித்திருக்கிறேன். முதல் நாள் தான் ஒரு ஹாலிவுட் நடிகரை பார்த்த மாதிரி இருந்தது. இரண்டாவது நாளில் இருந்தே சகஜமாக தமிழில் என்னுடன் பேச தொடங்கி விட்டார். சமூக அக்கறை உடைய படங்களை எப்போதும் கொடுத்து வரும் முருகதாஸ் சார் நீங்க...
அரசியல் கள பாடலால் விஷால் உற்சாகம்..!

அரசியல் கள பாடலால் விஷால் உற்சாகம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
விஷாலை உற்சாகப்படுத்திய "தலைவன் வருகிறான்"-“விஷால் ஆன்தம்”! விஷால் ஆன்தம் குழுவினரை சந்தித்து பாராட்டினார் விஷால். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமாகிய நடிகர் விஷாலின் பிறந்தநாள் கடந்த ஆகஸ்டு மாதம் 29ம் தேதி கொண்டாடப்பட்டது. விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு "தலைவன் வருகிறான்" என்ற “விஷால் ஆன்தம்“ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. விஷாலின் அரசியல் வருகைக்கான முன்னறிவிப்பு தான் இந்த விஷால் ஆன்தம் என்றும் பேசப்பட்டது. “நேசம் கொண்ட தலைவன் வந்தான், நெஞ்சே நிமிர்ந்து நில்லு, நெருப்பைப் போல தீமை எரிக்கும் நேர்மை இவன்தான் சொல்லு வீரம் பாதி ஈரம் பாதி வெல்லும் எங்கள் விஷால் நீதி…” என்ற வரிகளுடன் அமைந்த இந்த பாடலை “கொலை விளையும் நிலம்” ஆவணப்படத்தை இயக்கிய க.ராஜிவ்காந்தி இயக்கி விஷாலுக்கு பிறந்த நாள் பரிசாக அளித்தார். இஷான் தே...
ஒரிஜினல் கத்தி.. நிஜ காயம்… சினிமா சண்டை “துப்பறிவாளன்” ஆக்‌ஷன் கலாட்டா..!

ஒரிஜினல் கத்தி.. நிஜ காயம்… சினிமா சண்டை “துப்பறிவாளன்” ஆக்‌ஷன் கலாட்டா..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
ஹாலிவுட் தர ஆக்‌ஷனுடன் களம் இறங்கும் துப்பறிவாளன் ஆக்‌ஷன் வெளியீட்டு விழா ஏன்? துப்பறிவாளன் ஆக்‌ஷன் சீக்ரெட்ஸ் ஒரிஜினல் கத்தியோடு விளையாடிய விஷால் மிஷ்கின். பொதுவாக ஒரு படத்துக்கு அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களை வெளியிடும் விழா தான் நடத்துவார்கள். ஆனால் துப்பறிவாளன் படத்துக்கு முதன்முறையாக ஆக்‌ஷன் வெளியீட்டு விழா என்று சண்டைக்காட்சியை திரையிடும் நிகழ்ச்சி நடத்த முதலில் திட்டமிட்டிருந்தார்கள். இப்போதுகூட ரிலீஸுக்கு முன்பே ஒரு நிகழ்ச்சி வைத்து ஆக்‌ஷன் காட்சியை பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக காண்பிக்க ஒரு ஐடியா இருக்கிறது. விஷால் என்றாலே ஆக்‌ஷன் ஹீரோ தான்... பின்னர் துப்பறிவாளனில் மட்டும் என்ன ஸ்பெஷல்? படக்குழுவிடம் கேட்டோம். ‘விஷால் இதற்கு முன்னர் பல சண்டைக்காட்சிகளில் நடித்து ஆக்‌ஷன் ஹீரோவாக பெயர் எடுத்திருந்தாலும் கூட இந்த படத்தின் சண்டைக்காட்சிகளில் செம ஸ்டைலிஷாக இருப்பார். படத்...
மிஷ்கின் – விஷால் கூட்டணி துப்பறிவாளன்  ரகசியம்… !

மிஷ்கின் – விஷால் கூட்டணி துப்பறிவாளன் ரகசியம்… !

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  தமிழக அரசியல் போலத் தான் தமிழ் சினிமாவும். எப்போது யார் யார் கூட்டு சேர்வார்கள் என்பதை கணிக்க முடியாது. அப்படி ஒரு கணிக்க முடியாத கூட்டணி தான் விஷாலும் மிஷ்கினும் இணைந்திருக்கும் துப்பறிவாளன் படம். விஷாலும் மிஷ்கினும் முகமூடி படத்திலேயே இணைந்திருக்க வேண்டியவர்களாம். முகமூடி கதை முதலில் விஷாலுக்கு தான் வந்திருக்கிறது. அப்போது விஷால் சில கமிட்மெண்ட்களில் இருந்ததால் இணைய முடியாமல் போயிருக்கிறது. ஆனால் இருவருக்குள்ளான நட்பு அப்படியே இருந்திருக்கிறது. விஷால் என்ன சொல்கிறார்? ‘இருவரும் சேர்ந்து படம் பண்ணுவோம்’னு எட்டு வருஷங்களுக்கு முன்னாடிப் பேச ஆரம்பிச்சோம். இந்த எட்டு வருஷங்கள்ல நாங்க சேர்ந்து படம் பண்ண, மூணு முறை வாய்ப்பு வந்துச்சு. ஆனால், ஒவ்வொரு முறையும் அவரோட வாய்க்கொழுப்புனால அது மிஸ் ஆகிட்டே இருந்துச்சு. அவர் என் முக்கியமான நண்பர். அதனால என்கிட்ட எப்படிப் பேசினா...
கோடிகள் முக்கியமல்ல திரையுலகை காப்பதே முதல் பணி – துப்பறிவாளன் விஷால்..!

கோடிகள் முக்கியமல்ல திரையுலகை காப்பதே முதல் பணி – துப்பறிவாளன் விஷால்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
நான் கோடிகளை அடுத்த வருடம் கூட சம்பாதித்து கொள்வேன்... திரையுலகத்தை காப்பாற்றுவது தான் இப்போது எனது ஒரே குறிக்கோள் – "துப்பறிவாளன்"- விஷால்   "துப்பறிவாளன்" இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவரும் விஷால் படமாக இருக்கும். விஷால் நடக்கும் போது இப்படி தான் இருக்க வேண்டும் , சிரிக்கும் போது , ரொமனஸ் செய்யும் போது இப்படி தான் இருக்கும் வேண்டும் என்று அவருடைய பாணியில் தான் இத்திரைப்படம் உருவாகியுள்ளது...வழக்கமாக நான் என்னுடைய படங்களில் கை , கால்களை ஆட்டி வசனம் பேசி தான் பழக்கம். ஆனால் துப்பறிவாளனில் நான் ஏற்று நடித்திருக்கும் கணியன்பூங்குன்றன் கதாபாத்திரம் எப்போதும் அமைதியாக தான் இருக்கும். அதிபுத்திசாலிகள் அதிகம் பேசமாட்டார்கள் அதை போல் தான் இந்த கதாபாத்திரம் இருக்கும். துப்பறிவாளன் டிடெக்டிவ் ஜானர் படம். துப்பறிவாளன் Sherlock Holmes மாதிரியான ஒரு படம். பழம்பெரும் நடிகர் ஜெயசங்கர் ந...