செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் கைவசம் டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக், துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கில் ரிபப்ளிக், பீம்லா நாயக் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் உடன் கூட்டணி அமைக்க உள்ளார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார...
‘பார்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘பார்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘பார்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! ‘குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர் அறிவழகனும் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ள படம் ‘பார்டர்’. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள். விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை சாபு ஜோசப் மேற்கொண்டுள்ளார். பார்டர் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பார்டர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் மாதம் 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது....
சென்னையில் 1 லட்சத்து 57 ஆயிரம் போஸ்டர்கள் அகற்றம்- மாநகராட்சி நடவடிக்கை!

சென்னையில் 1 லட்சத்து 57 ஆயிரம் போஸ்டர்கள் அகற்றம்- மாநகராட்சி நடவடிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
சென்னையில் 1 லட்சத்து 57 ஆயிரம் போஸ்டர்கள் அகற்றம்- மாநகராட்சி நடவடிக்கை! ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தை செயல்படுத்தும் வகையில் சென்னையில் அரசு சுவர்கள் மற்றும் பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதற்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது. இதை மீறி போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றி விட்டு அங்கு வண்ண வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. மாநகராட்சி ஊழியர்கள் ஒவ்வொரு பகுதியிலும் எங்கெங்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன? என்பதை கண்காணித்து அவற்றை அகற்றி வருகின்றனர். சென்னையில் மொத்தம் 57 ஆயிரத்து 374 இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் இதுவரை 1 லட்சத்து 57 ஆயிரத்து 527 போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன. இன்று மட்டும் 210 இடங்களில் ஒட்டப்பட்டிருந்த 1,159 போஸ்டர்கள் அகற்றப்ப...
மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டம்!

மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டம்! காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தி தலைமையில் 19 கட்சிகள் பங்கேற்ற கூட்டணி கட்சிகள் கூட்டம் கடந்த ஆகஸ்டு 20-ந்தேதி காணொலி காட்சி மூலம் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிதாக கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் உள்ளிட்ட மத்திய பா.ஜனதா அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து செப்டம்பர் 20-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து தமிழகத்தில் செப்டம்பர் 20-ந்தேதி (இன்று) மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்...
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் ஊரக தொழில்துறை அமைச்சருமான தா.மோ. அன்பரசன் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி குழு, ஊராட்சி ஒன்றிய குழு, வார்டுகளில் வார்டு உறுப்பினர்கள் பொறுப்புக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம் வருமாறு: வார்டு எண். 3-ப.ராமமூர்த்தி, குன்னம் வார்டு எண்.4-எஸ்.பாலா (எ) பால்ராஜ், மொளச்சூர் வார்டு எண்.5-வி.அரி, நந்தம்பாக்கம் வார்டு எண்.6-படப்பை ஆ.மனோகரன் வார்டு எண்.7-கூட்டணி கட்சி ம.தி.மு.க.விற்கு ஒதுக்கீடு. செங்கல்பட்டு மாவட்டம் வார்டு எண்.1-ச.மனோகர், கவுல்பஜார் வார்டு எண்.4-கூட்டணி கட்சி காங்கிரசுக்கு ஒதுக்கீடு. வார்டு எண்.5-பூங்கோதை ராஜன், சிங்கப்பெருமாள் கோவில் வார்டு எண்.6-காயத்திரி அன்ப...
உயிரை விட பரீட்சை பெரிதல்ல… சூர்யா!

உயிரை விட பரீட்சை பெரிதல்ல… சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
உயிரை விட பரீட்சை பெரிதல்ல... சூர்யா! எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீட் தேர்வு பயத்தால் தனுஷ் என்ற மாணவரும், கனிமொழி, சௌந்தர்யா ஆகிய மாணவிகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்கள் தற்கொலை செய்வது குறித்து நடிகர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‘மாணவர்கள் அனைவரும் அச்சம் இல்லாமல், நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று ஒரு அண்ணனாக வேண்டி கேட்டுக் கொள்கிறேன். ஒரு பரீட்சை உங்க உயிரைவிட பெருசு இல்ல.. மனசு கஷ்டமா இருந்தா, உங்களுக்கு பிடித்தவங்க... நண்பர்கள், ஆசிரியர்கள் யார்கிட்டையாவது மனசை விட்டு பேசுங்க... பயம், விரக்தி எல்லாம் கொஞ்ச நேரத்துல மறைந்துவிடும். தற்கொலை செய்வது, உங்களை பிடித்தவர்களுக்கு மற்றும் அப்பா, அம்மாவுக்கு வாழ்நாள் தண்டனை. நான் நிறை...
டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில தினங்களுக்கு முன்பு தியேட்டரில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். இந்நிலையில், இப்படம் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்....
பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட்!

பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட்! மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படம் 2 பாகங்களாக உருவாகி வருகிறது. கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, ஐதராபாத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இறுதியாக இதன் படப்பிடிப்பு பொள்ளியில் நடைபெற்று வந்தது. இதன் படத்தில் நடித்த நடிகர்களும் சமீபத்தில் தங்களுடைய நடிப்பை முடித்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்து வந்தனர். இந்நிலையில், முதல் பாகத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் புதிய போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படம் ...