தமிழக அரசால் தனி ஓடிடி தளம் உருவாக்கப்பட வேண்டும் – சேரன்!
தமிழக அரசால் தனி ஓடிடி தளம் உருவாக்கப்பட வேண்டும் - சேரன்!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரைத்துறை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை நேரடியாக ஓடிடியில் வெளியாகி வருகின்றன. அவற்றுக்கு ஓடிடி-யில் வரவேற்பு கிடைப்பதை கருத்தில் கொண்டு மலையாள சினிமாவுக்கென பிரத்யேகமாக ஓடிடி தளம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த ஓடிடி தளம் வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.
இந்நிலையில் கேரள அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள இயக்குனர் சேரன், தமிழ் மொழிக்கும் இதுபோன்று தனி ஓடிடி தளம் அவசியம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இதுபோன்ற முயற்சி நமது தமிழ் திரைப்படத்துறைக்கும் தமிழக அரசால் உருவாக்கப்படவேண்டும்.
சிறு முதலீட்டு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு ...









