பறிபோன மாநில உரிமைகளை தமிழக முதல்வராக மீட்டெடுக்கும் பணிகளை தொடங்குங்கள் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி வாகை சூடியதற்கு சி.என்.இராமமூர்த்தி வாழ்த்து!
பறிபோன மாநில உரிமைகளை தமிழக முதல்வராக மீட்டெடுக்கும் பணிகளை தொடங்குங்கள் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி வாகை சூடியதற்கு சி.என்.இராமமூர்த்தி வாழ்த்து!
பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் கட்டிக்காத்த திராவிட இயக்கத்தின் மாண்பையும் மரியாதையையும் அழிந்து போகாமல் உங்கள் வெற்றியின் மூலம் மீண்டும் நிலை நிறுத்திய திமுக தலைவர் தமிழக முதல்வர் மாண்புமிகு முக.ஸ்டாலின் அவர்களுக்கு அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி மற்றும் வன்னியர் கூட்டமைப்பின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
பல ஆண்டுகளாக பறிபோய் உள்ள மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் மகத்தான பணிகள் உங்களுக்காக காத்திருக்கிறது.
அதே நேரம், பல கோடி மக்களை கொண்ட வன்னிய சமூகத்தின் வாழ்க்கைத் தரம் உயர முறையான இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என நான் போட்ட வழக்கின் (WP No - 14025/2010) அடிப்படையிலும், பல அறவழி போராட்டங்களின் காரணம...









