செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

யூ-டியூப், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

யூ-டியூப், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
யூ-டியூப், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் திருநெல்வேலியைச் சேர்ந்த உமா மகேஸ்வரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “சென்னையில் பெண்களிடம் தவறான முறையில் கேள்விகள் கேட்டு யூ-டியூப் சேனலில் வீடியோ வெளியிட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களது யூ-டியூப் சேனல் போலீசாரால் முடக்கப்பட்டு விட்டது. இருப்பினும் அவர்களது வீடியோக்கள் பல்வேறு சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு இல்லாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் 2012 ஆம் ஆண்டு நடந்த சர்வே ஒன்றில் இணையதளம் மூலம் மிரட்டுவதில் இந்தியா 3வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஆன்லைன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாடம் நடத்தப...
ஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை… ஆனால்

ஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை… ஆனால்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
ஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை... ஆனால் சென்னை ஐகோர்ட்டில் தீபா, தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், ஜெயலலிதா இறந்த பின், தங்களை வாரிசுகளாக அறிவித்துள்ள நிலையில் வேதா நிலையத்தையும், அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்க சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அதிகாரமில்லை. வேதா இல்லத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும். நினைவு இல்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், போயஸ் தோட்ட இல்லம் ஜெயலலிதா நினைவில்லமாக பொதுமக்கள் பார்வைக்கு நாளை திறக்கப்பட உள்ளதாக அரசுத்தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது இதற்கிடையே, சென்னை ஐகோர்ட்டில் இன்று தீபா, தீபக் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நாளை வேதா இல்லம் திறக்கப்படவிருப்பதால் இதனை அவசர வழக்க...
‘சில்லுக்கருப்பட்டி’ இயக்குனரின் புதிய படம் ‘ஏலே’ பிப்ரவரி 12 ரிலீஸ்!

‘சில்லுக்கருப்பட்டி’ இயக்குனரின் புதிய படம் ‘ஏலே’ பிப்ரவரி 12 ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
சில்லுக்கருப்பட்டி படத்தின் இயக்குனர் ஹலீதா ஷமீம் அடுத்ததாக இயக்கி உள்ள ஏலே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வா குவாட்டர் கட்டிங் மற்றும் விக்ரம் வேதா போன்ற படங்களை இயக்கிய புஷ்கர் காயத்ரியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர் ஹலீதா ஷமீம். இவர் ‘பூவரசம் பீபீ’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் இவர் இயக்கத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி எனும் ஆந்தாலஜி படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் இயக்கியுள்ள படம் தான் ‘ஏலே’. சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை எஸ்.சசிகாந்துடன் இணைந்து புஷ்கர் காயத்ரியும் தயாரித்துள்ளனர். அவர்கள் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும்.  இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படம் வருகிற பிப்ரவரி 12-ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம்!

நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம்! மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், கடந்த 1995-ம் ஆண்டு இயக்குனரும், நடிகருமான பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், சரண்யாவின் மூத்த மகள் பிரியதர்ஷினுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அண்மையில் உறவினர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்கள் முன்னிலையில் பிரியதர்ஷினுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  ...
தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜக தலைவர்!

தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜக தலைவர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜக தலைவர்! நாட்டின் 72ஆவது குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் எளிமையாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு குடியரசு தினத்தின்போதும் ஒருசில கட்சிகள் தங்களது கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றி ‘மரியாதை’ செய்வது வழக்கம். மேற்கு வங்க மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் குடியரசு தின விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் கலந்துகொண்டு பெருமிதமாக கொடியேற்றினார். அவர் ஏற்றிய பிறகு தான் தெரிந்தது அந்தக் கோடி தலைகீழாக ஏற்றப்பட்டிருந்தது என்று. விழாவில் பங்கேற்ற ‘தேசப் பற்றாளர்’ ஒருவர் இதை சரியாக கண்டுணர்ந்து சொல்ல, உடனே கொடியை கீழிறக்கினார் கோஷ். அதன்பின், கொடியை சரியாக ஏற்றினார். தர்மசங்கடத்துக்கு ஆளாகிப்போன கோஷ், “கொடியை அவமதிக்க வேண்டும் என்பதற்காக தலைகீழாக ஏற்றவில்லை. தவறுதலாக கட்டப்ப...
டெல்லி விவசாய பேரணியில் செங்கோட்டையில் கொடி ஏற்றியவர் பாஜக ஏஜெண்டா?- பிரதமருடன் இருக்கும் புகைப்படம் வெளிட்ட காங்கிரஸ்

டெல்லி விவசாய பேரணியில் செங்கோட்டையில் கொடி ஏற்றியவர் பாஜக ஏஜெண்டா?- பிரதமருடன் இருக்கும் புகைப்படம் வெளிட்ட காங்கிரஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
டெல்லி விவசாய பேரணியில் செங்கோட்டையில் கொடி ஏற்றியவர் பாஜக ஏஜெண்டா?- பிரதமருடன் இருக்கும் புகைப்படம் வெளிட்ட காங்கிரஸ் செங்கோட்டையில் கொடி ஏற்றியவரான நடிகர் தீப் சித்து பிரதமர் மோடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டதும் அம்பலமாகியுள்ளது. அவர் தன்னை விவசாய ஆர்வலர் என்று கூறிக் கொண்டு, போராட்டத்தை சிதைக்க வந்த ஆர்எஸ்எஸ் ஏஜெண்ட் என்று விவசாய அமைப்பினர் விமர்சிக்கின்றனர் டெல்லி விவசாய பேரணியில் பெரிதும் பேசப்பட்டது செங்கோட்டையை விவசாயிகள் முற்றுகையிட்ட சம்பவம் தான். அதிலும் குறிப்பாக செங்கோட்டையில் சிக்கிம் மத கொடியையும் விவசாய கொடியையும் ஏற்றியதே பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. மூவர்ணக் கொடியை கீழிறக்கி விட்டு, இந்தக் கொடிகளை ஏற்றியது கண்டனத்துக்குரியது என்று பலரும் கூறி வருகின்றனர் தற்போது கொடி ஏற...
அமேசான் ப்ரைமில் ஜனவரி 29-ம் தேதி வெளியாகிறது மாஸ்டர்

அமேசான் ப்ரைமில் ஜனவரி 29-ம் தேதி வெளியாகிறது மாஸ்டர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அமேசான் ப்ரைமில் வெளியாகிறது மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உள்ள சிறுவர்களை தவறான செயல்களில் ஈடுபடுத்தும் விஜய் சேதுபதியுடன் விஜய் மோதி, சிறுவர்களை மீட்பது போன்று கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் பொங்கல் படத்தை முன்னிட்டு கடந்த 13 ஆம் தேதி வெளியானது. கடந்த 9 மாதத்திற்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில் விஜய் ரசிகர்கள் தியேட்டரில் குவிந்தனர். இந்த படம் கடந்த 14 நாட்களில் சுமார் 72 கோடி வசூலை வாரி குவித்துள்ளதாக கூறப்படுகிறது இந்நிலையில் ‘மாஸ்டர்’ படம் ஜனவரி 29-ம் தேதி வெளியாகும் என அமேசான் ப்ரைம் நிறுவனம் தெரிவித்துள்ளது.படத்திற்கு முதலீடு செய்த விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் லாபம் பெற்றுள்ள ந...
லைகா புரடக்‌சன்ஸ் சுபாஸ்கரன் அல்லிராஜா வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” !

லைகா புரடக்‌சன்ஸ் சுபாஸ்கரன் அல்லிராஜா வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” !

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  லைகா புரடக்‌சன்ஸ் சுபாஸ்கரன் அல்லிராஜா வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” ! நடிகர் சிவர்கார்த்திகேயனின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள “டாக்டர் மற்றும் அயலான்” திரைப்படங்கள் விநியோக தளத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2021 ஆம் ஆண்டில் வெளிவரவுள்ள உச்சகட்ட எதிர்பார்ப்பு மிக்க படங்களின் பட்டியலில் மிக மேன்மையான இடத்தை இப்படங்கள் பெற்றிருக்கிறது. இந்நிலையில் அடுத்த அதிரடியான அறிவிப்பாக, சிவகார்த்திகேயனின் 19 வது படமாக “டான்” படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் அட்லியிடம் “மெர்சல், பிகில்” படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய, சிபி சக்கரவர்த்தி இப்படத்தினை இயக்குகிறார். லைகா புரடக்‌சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயன் புரடக்‌சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார். லைகா குழும தலை...
ஜெ., உயிருக்கு உரிய நீதி வழங்க முன்வராத எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஜெ.,நினைவிடத்தை திறக்க உரிமை உள்ளதா? – ஸ்டாலின் கேள்வி

ஜெ., உயிருக்கு உரிய நீதி வழங்க முன்வராத எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஜெ.,நினைவிடத்தை திறக்க உரிமை உள்ளதா? – ஸ்டாலின் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜெ., உயிருக்கு உரிய நீதி வழங்க முன்வராத எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நினைவிடத்தை திறக்க உரிமை உள்ளதா? - ஸ்டாலின் கேள்வி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த மர்மத்தை வெளியிட இயலாத அ.தி.மு.க ஆட்சியாளர்கள், அவரது நினைவிடத்தை திறந்துவைக்க இருக்கிறார்கள். இந்தநிலையில்  திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, ஜெயலலிதா நினைவிடத்தை திறப்பது தேர்தலுக்காக அரங்கேற்றப்படும் அரசியல் நாடகம். 4 ஆண்டுகள் முடிந்தும் ஜெயலலிதாவின் மரணத்தில் புதைந்திருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கவில்லை. ஜெயலலிதாவின் உயிருக்கு உரிய நீதி வழங்க முன்வராத எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் நினைவிடத்தை திறக்க உரிமை உள்ளதா? ஜெயலலிதா மரணத்தின் உண்மை வெளிச்சத்திற்கு வருவதை தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்கிறது அரசு. துணை முதல்வரான பிறகும் ஜெயலலிதா மரணத்துக்கான உண்மையை அறிய முற்பட்டார...
4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்ததால் சசிகலா இன்று சசிகலா விடுதலை!

4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்ததால் சசிகலா இன்று சசிகலா விடுதலை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைகிறது - சசிகலா இன்று விடுதலை சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கிவிட்டது. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு டாக்டர்கள் மாற்றியுள்ளனர். சசிகலாவின் உடல்நிலை குறித்து விக்டோரியா அரசு மருத்துவமனை நேற்று மாலை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 66 வயதாகும் சசிகலாவுக்கு கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துவிட்டன. கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை. சுயநினைவுடன் நன்றாக பேசுகிறார். கொரோனா வழிகாட்டுதல்படி அவருக்கு...