வேலுநாச்சியார் கேரக்டரில் நடிகை நயன்தாரா?
தமிழ் சினிமாவில் காதல், ஆக்ஷன், த்ரில்லர் திரைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பை விட வரலாற்று திரைப்படங்களுக்கே அதிக வரவேற்பு உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1, பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றிப்பெற்று உலக சினிமாவை திரும்ப பார்க்க வைத்தது.
வரலாற்றுக் கதைகளின் பக்கமும் சினிமா இயக்குனர்களின் ஆர்வம் திரும்பி இருக்கிறது. இயக்குனர் ராஜமவுலி பாகுபலி கதையை உருவாக்கிய பின் இந்த ஆர்வம் அதிகரித்து இருக்கிறது. இந்தியில் நடிகை கங்கனாவின் மணிகர்னிகா உட்பட சில படங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியாயின.
இதனைத் தொடர்ந்து யாருமே இதுவரை தொடாத பொன்னியின் செல்வன் கதையை இயக்குனர் மணிரத்னம் இயக்குவதாக அறிவித்தார். படத்தில் நடிப்பவர்கள் பட்டியலையும் வெளியிட்டார். அதில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் என நட...









