தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு குறைவு – சுகாதார செயலாளர்
தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு குறைவு - சுகாதார செயலாளர்
உருமாறிய கொரோனா வைரஸ் முதன்முதலில் பிரிட்டனில் பரவியது. இந்த உருமாறிய வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை இந்தியா உள்பட பல நாடுகள் தடை செய்தன.
இதற்கிடையில், பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் 116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. அவர்களுக்கு உருமாறிய கொரோனா தான் பரவியுள்ளதா? என்பதை கண்டறிய அவர்களது பரிசோதனை மாதிரிகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ஐசிஎம்ஆர்) ஆய்வுகளை மேற்கொண்டது.
இந்நிலையில், இந்தியாவில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் இன்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் ஒருவருக்கு உருமாற...







