நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து போட்டியிட திட்டம்
நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து போட்டியிட திட்டம்
2021 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளுமே தீவிரமாகி வருகின்றன. அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் காண தயாராகி வருகின்றன.
இப்படி கூட்டணி கட்சிகளின் துணையோடு களம் காண்பதற்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து போட்டியிட திட்டம் வகுத்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் நிர்வாகிகளோடு தொடர்ந்து ஆலோசித்து வருகிறார். மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டங்களையும் நடத்தி வருகிறார்.
2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி, 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும், 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிடவில்லை.
இந்த 2 தேர்தல்களிலும் சீமான், காங்கிரஸ் ...









