செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

கபில் தேவின் உடல்நிலை சீராக உள்ளது!

கபில் தேவின் உடல்நிலை சீராக உள்ளது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கபில் தேவின் உடல்நிலை சீராக உள்ளது! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான கபில் தேவுக்கு , நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்னர் அவரது உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கபில் தேவின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.     கபில் தேவ் விரைவில் நலம் பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.   இந்நிலையில், கபில் தேவ் தனது உடல்நிலை சீரடைந்து வருவது தொடர்பான தகவலை வெளியிட்டு, தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ‘என்மீது கொண்டுள்ள அளவுகடந்த அன்பு மற்றும் அக்கறைக்கு அனைவருக்...
திருமாவளவன் மீது போடப்பட்ட பொய்வழக்கை திரும்ப பெறுக – ஸ்டாலின் அறிக்கை

திருமாவளவன் மீது போடப்பட்ட பொய்வழக்கை திரும்ப பெறுக – ஸ்டாலின் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  "விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்கள் பேசியதைத் திரித்து, சமூகவலைதளங்களில் பரப்பி வன்முறையைத் தூண்டும் மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, திருமாவளவன் மீதே வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது; உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள் மீது, எடப்பாடி அ.தி.மு.க. அரசின் சைபர் கிரைம் போலீசார், ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்திருப்பது முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் பாரபட்சமான - வன்மம் நிறைந்த அணுகுமுறையையே காட்டுகிறது. தொல்.திருமாவளவன் அவர்கள், ஐரோப்பிய பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் நடைபெற்ற இணையக் கருத்தரங்கில் பங்கேற்று, தந்...
ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம்

ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை முன்பு திமுக ஆர்ப்பாட்டம். ஸ்டாலின் தலைமையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம். பாதுகாப்பு பணியில் இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் தலைமையில் 1000 போலீசார் குவிப்பு....
மாஸ்க் அணிந்து பிரார்த்தனையில் கலந்து கொண்ட போப்!

மாஸ்க் அணிந்து பிரார்த்தனையில் கலந்து கொண்ட போப்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  உலக கத்தோலிக்க மதத் தலைவரான போப் முதலாம் பிரான்சிஸ் நேற்று முதன் முறையாக முக கவசம் அணிந்து பொது வழிப்பாட்டில் பங்கேற்றார். சாண்டா மரியா தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையின் போது, ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் ஆன்மீகத் தலைவர் பார்தலோமெவ் உள்ளிட்டவர்களுடன் முக கவசம் அணிந்து பங்கேற்றார். போப்பின் பாதுகாவலர்கள் நான்கு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், போப் முக கவசம் அணியாதது தொடர்பாக சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனைத் தொடர்ந்து பொது மக்களை சந்திக்கும் வாகனத்தில் வரும் போது மட்டும் முக கவசம் அணிந்து வந்த போப் முதலாம் பிரான்சிஸ், தற்போது பொது வழிபாட்டிலும் முக கவசம் அணியத் தொட​ங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது....
வெற்றிகரமாக பென்னுவில் தரையிறங்கியதும் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

வெற்றிகரமாக பென்னுவில் தரையிறங்கியதும் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பூமியில் இருந்து 330 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குறுங்கோள்களான பென்னுவை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ‘ஓசிரிஸ்-ரெக்ஸ்’ எனப்படும் செயற்கை கோளை அனுப்பியது. 2016ம் ஆண்டு அனுப்பப்பட்ட இந்த செயற்கைக் கோள், 2018ம் ஆண்டு பென்னு குறுங்கோளின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்து சீராக பயணம் மேற்கொண்டது. அதன்பின்னர் படிப்படியாக அதன் சுற்றுவட்டப்பாதை குறைக்கப்பட்டு நேற்று பென்னு குறுங்கோளில் வெற்றிகரமாக தரையிறங்கியது. பென்னு குறுங்கோளில் இருந்து பாறைத் துகள்களை ஆய்வுக்காக பூமிக்கு எடுத்துவர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஓசிரிஸ் ரெக்ஸ் செயற்கைக் கோளில் உள்ள இயந்திரக் கரங்கள் குறுங்கோளை துளையிட்டு பாறைத் துகள்களை எடுக்கத் தொடங்கியது. இதேபோல் தூசித் துகள்களையும் சேகரிக்கிறது. 4 ஆண்டு பயணத்திற்கு பிறகு ஓசிரிஸ்-லெக்ஸ் வெற்றிகரமாக பென்னுவில் தரையிறங்கியதும் வ...