அ.தி.மு.க.வில் இருந்து அனிதா குப்புசாமி விலகல்
அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளரும், நாட்டுப்புற பாடகியுமான அனிதா குப்புசாமி அ.தி.மு.க.வில் இருந்து விலகியுள்ளார். இது குறித்து அனிதா குப்புசாமி கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் இருந்து நான் விலகி விட்டேன். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே எனது பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டேன். ஆனாலும் நான் செல்லும் இடங்களில் மக்கள் என்னிடம் வந்து, இன்னுமா அ.தி.மு.க.வில் இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
எனவே தான் அதிகாரப்பூர்வமாக என் முடிவை அறிவித்து இருக்கிறேன். தற்போதைய முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி, மக்கள் விரோத அரசாக செயல்படுகிறது. எனவே தான் அ.தி.மு.க.வில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்தேன்.
என் கணவருக்கு துணைவேந்தர் பதவியை கொடுக்காததால் தான் நான் அ.தி.மு.க.வில் இருந்து விலகியதாக கூறப்படுவதை முற்றிலும் மறுக்கிறேன். துணைவேந்தர் ஆகுவதற்கான அனைத்து தகுதிகளும் என் கணவருக்கு ...









