அரசியல் அறிவிப்புக்கு பின் முதல்முறையாக இளையராஜாவுக்காக ஒரே மேடையில் ரஜினி – கமல்..!
இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் தமிழ் திரைத்துறையினர் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக, ‘இளையராஜா 75’ எனும் இசை நிகழ்ச்சியுடன் கூடிய விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அரசியல் அறிவிப்புகளுக்கு பிறகு ரஜினியுடன் கமல் ஒரே மேடையில் தோன்றும் முதல் நிகழ்ச்சியாக இளையராஜா 75 நிகழ்ச்சி அமைய உள்ளது.
இவர்களோடு மேலும் பல முன்னணி ஹீரோக்கள் ஒரே மேடையில் தோன்ற இருக்கிறார்கள். முதல்முறையாக தமிழ் சினிமாவில் உள்ள உச்ச நட்சத்திரம் தொடங்கி அறிமுக நாயகன்வரை ஒரே மேடையில் தோன்ற இருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாக இளையராஜா 75 விழா அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இந்த விழா நடைபெற உள்ளது. 2-ந் தேதி தென்னிந்தியத் திரையுலகின் முக்கி...









