செவ்வாய்க்கிழமை, மே 26
Shadow

HOME SLIDER

விஜய் தேவாரகொண்டாவின் ‘VD12’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

விஜய் தேவாரகொண்டாவின் ‘VD12’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விஜய் தேவாரகொண்டாவின் 'VD12' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு விஜய் தேவரகொண்டா- கௌதம் தின்னனுரி- சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் 'VD 12' திரைப்படம்- 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி அன்று வெளியாகிறது. 'ரௌடி' என ரசிகர்களால் அன்புடன் போற்றப்படும் விஜய் தேவரகொண்டா தனது அசத்தலான நடிப்புத் திறமையால் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து, இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் புகழ் பெற்றிருக்கிறார். இவர் தற்போது 'ஜெர்ஸ்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களின் மூலம் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநரான கௌதம் தின்னனுரி இயக்கத்தில் உருவாகி வரும் 'VD 12 'எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகி வரும் இந்த திரைப்படம் - அனைத்து தரப்பு ரசிகர்களையும் பரவசப்படுத்தும் வகையில் தயாராகி வருகிறது. இந்தப் படத்திற்கு தற்போது ' VD 12' என தற...
வெளியான ஒரே வாரத்தில் ரூ. 113.23 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டிய ‘டெட்பூல் & வோல்வரின்’

வெளியான ஒரே வாரத்தில் ரூ. 113.23 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டிய ‘டெட்பூல் & வோல்வரின்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  'டெட்பூல் & வோல்வரின்' திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ. 113.23 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டியுள்ளது! மார்வெல் ஸ்டுடியோஸின் எபிக் ஆக்‌ஷன் எண்டர்டெய்னர் திரைப்படமான 'டெட்பூல் & வோல்வரின்' திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் உலகளவில் ரூ. 113 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனைப் படைத்துள்ளது. உலகம் முழுவதும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவியதால் திரையரங்குகளில் இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மார்வெல் ஸ்டுடியோஸின் 'டெட்பூல் & வோல்வரின்' திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது....
தனுஷுக்கு ”ரெட்” – எங்கள் முடிவில் மாற்றமில்லை – கவுன்சில் தலைவர் முரளி

தனுஷுக்கு ”ரெட்” – எங்கள் முடிவில் மாற்றமில்லை – கவுன்சில் தலைவர் முரளி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  தனுஷ் படத்திற்கு கட்டுப்பாடு, புதிய படங்கள் தொடங்குவதில் தற்காலிக நிறுத்தம், எட்டு வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் திரைப்படங்களை வெளியிடோணும் உட்பட சில முக்கிய முடிவுகளை தீர்மானங்களாக நிறைவேற்றி சைன் இல்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டது நடக்காத தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இதற்கு உடனடியாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி நடிகர் சங்கம் தங்களோட வன்மையான கண்டனத்தை தெரிவிச்சுது. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் நேத்திக்கு நடந்துச்சு. இதில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டாய்ங்க. இந்த கூட்டத்தில் நடிகர் சங்கம் தெரிவித்த கண்டனம், வேலை நிறுத்தம் உள்ளி...
இன்று முதல் 3 நாட்களுக்கு புதுச்சேரியில் சர்வதேச திரைப்பட விழா!

இன்று முதல் 3 நாட்களுக்கு புதுச்சேரியில் சர்வதேச திரைப்பட விழா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  புதுச்சேரியில் சர்வதேச திரைப்பட விழா தொடங்க உள்ள நிலையில், இன்று முதல் 3 நாட்களுக்கு ரசிகர்கள் திரைப்பட விழாவில், படம் பார்க்க இலவசமாக அனுமதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்குது. இந்த சர்வதேச திரைப்படவிழாவில் இந்தியா, பிரான்ஸ், இலங்கை, துருக்கி, ஈரான், அமெரிக்கா, ஸ்வீடன் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களை பொதுமக்கள், ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம். சர்வதேச புகழ்பெற்ற பிரசன்ன விதனகே திரைப்பட உருவாக்கத்துக்கான சிறப்பு வகுப்பையும் நடத்துகிறார். இது தொடர்பாக புதுச்சேரி திரை இயக்கம் செயலர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க திரை இயக்க நிர்வாகி ராமச்சந்திரன் ஆகியோர் பேசிய போது, “புதுச்சேரியில் அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் நாளை மாலை சர்வதேசத் திரைப்பட விழா 2024 துவங்குகிறது. 3 நாட்கள் நடக்கும் இந்நிகழ்வில் இந்தியா, பிரான்ஸ், இலங்கை, துருக்க...
‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் மாஸ் டிரெய்லர் ஆகஸ்ட் 4 அன்று வெளியாகிறது!

‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் மாஸ் டிரெய்லர் ஆகஸ்ட் 4 அன்று வெளியாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் மாஸ் டிரெய்லர் ஆகஸ்ட் 4 அன்று வெளியாகிறது! 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் ஒவ்வொரு புதிய அப்டேட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இருமடங்கு அதிகமாக்கி வருகிறது. பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி கதாநாயாகனாக நடித்திருக்க, நடிகர் சஞ்சய் தத் எதிர்கதாநாயகனாக நடித்துள்ளது படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. இப்போது, 'டபுள் ஐஸ்மார்ட்' படத்திற்கான தியேட்டர் டிரெய்லர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். டிரெய்லர் போஸ்டரில் ராம் பொதினேனி முரட்டுத்தனமான மாஸ் லுக்கில் உள்ளார். கழுத்தில் கட்டியுள்ள கர்சீஃப் அவரது ஸ்டைலிஷ் லுக்கை இன்னும் வசீகரமாக்கியுள்ளது. பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோரால் தயாரி...
துல்கர் சல்மானின் அதிர வைக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் டைட்டில் ட்ராக்!

துல்கர் சல்மானின் அதிர வைக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் டைட்டில் ட்ராக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  துல்கர் சல்மான், வெங்கி அட்லூரி, சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் வெளியிட்ட அதிர வைக்கும் 'லக்கி பாஸ்கர்' படத்தின் டைட்டில் ட்ராக்! பல மொழி ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த நடிகராக வலம் வரும் நடிகர் துல்கர் சல்மான், ஒரு சாதாரண மனிதரான 'லக்கி பாஸ்கரி'ன் அசாதாரண கதையுடன் இந்த முறை வருகிறார். ஜூலை 28ம் தேதி நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் டிராக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. 1980களின் பிற்பகுதிக்கும் 1990களின் முற்பகுதிக்கும் நம்மை அழைத்து செல்லும் இந்த இசை ரசிகர்களுக்கு போதை தருகிறது என்றால் மிகையில்லை. இசைக்கருவிகளின் பயன்பாடு மற்றும் அனைத்திற்கும் மேலாக, பழம்பெரும் பாடகி உஷா உதுப்பின் குரல் இந்த ட்ராக்கை ஒரு ராக்கிங் நாஸ்டால்ஜிக்காக மாற்றி இருக்கிறது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், 1980களின் இண்டி-ராக்கை தற்போதைய தலைமுறை உணர்வுகளுடன் இணைத்து...

“’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ குழுவிற்கு நன்றி – மிர்ச்சி விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  “’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்திற்குப் பிறகு அனந்த் நம் இண்டஸ்ட்ரிக்கு மிகவும் பிடித்தவராக இருப்பார் என நம்பிக்கை இருக்கிறது” - மிர்ச்சி விஜய்! நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் ஆர்.ஜே. மிர்ச்சி விஜய். சப்போர்ட்டிங் ரோலில் இருந்து இப்போது முன்னணி கதாபாத்திரங்களில் அவர் நடித்து வருவது பாராட்டுக்குரியது. ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியாக இருக்கும் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தின் வெளியீட்டை அவர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார். மிர்ச்சி விஜய் கூறும்போது, ”வளர்ந்து வரும் ஒவ்வொரு நடிகருக்கும் அவர்கள் நல்ல நடிகராக உருவாக உதவும் திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் தேவை. ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்தில் இந்த கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்த அனந்த் மற்றும் ஒட்டுமொத்த குழுவிற்கும் நன்றி. என் கதாபாத்திரத்துடன் பார்வையாளர்கள் எளிதில...

‘மழை பிடிக்காத மனிதன்’ படப்பிடிப்பு முழுவதும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது – நடிகை மேகா ஆகாஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  "என் கரியரில் சிறந்த கதாபாத்திரத்தை ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் மில்டன் சார் கொடுத்துள்ளார்”- நடிகை மேகா ஆகாஷ்! ஆகஸ்ட் 2, 2024 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். படம் குறித்தானத் தனது அனுபவங்களை உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டார், “விஜய் மில்டன் சார் எப்போதும் தனது படங்களில் கதாநாயகிகளுக்கு வலுவான கதாபாத்திரங்களைத் தருவார். ’மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்காக என்னை அணுகியபோது, கதையைக் கேட்கும் முன்பே என் மனதில் தோன்றிய முதல் விஷயம் எனக்கு ஒரு வலுவான கதாபாத்திரம் கிடைக்கிறது என்பதுதான். நான் நினைத்தது போலவே, படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. நடிகராக என் திறமையை வெளிப்படுத்த இந்த கதாபாத்திரம் அமைந்துள்ளது. என் கரியரில் சிறந்த கதாபாத்திரத்தை ‘மழை பிடிக...
தனுஷ் விவகாரம்… நாளை கூடும் தயாரிப்பாளர் சங்க அவசர செயற்குழு கூட்டம்!

தனுஷ் விவகாரம்… நாளை கூடும் தயாரிப்பாளர் சங்க அவசர செயற்குழு கூட்டம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  நாளை கூடும் தயாரிப்பாளர் சங்க அவசர செயற்குழு கூட்டம்!   திரைப்படங்களுக்கு தனுஷ் ஒத்துழைப்பு தருவதில்லை எனவும், அட்வான்ஸ் வாங்கிவிட்டு கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கிறார் எனவும்  தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்ட நிலையில், இத்ற்கு நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. நடிகர்களின் சம்பளம் குறைப்பு மற்றும் திரைப்படங்களின் தயாரிப்பு செலவை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது   அதேபோல், சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட  அறிக்கையில் இருக்கும் விஷயங்களுக்கான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கின்றனர். வரும் 16ஆம் தேதியிலிருந்து புதிய திரைப்படங்களின் படப்பிடிப்பை தொடங்குவதில்லை என்றும் தற்போது தொடங்கி நடைபெற...
ரியோ- மாளவிகா மனோஜ் மீண்டும் இணைந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

ரியோ- மாளவிகா மனோஜ் மீண்டும் இணைந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ““ஜோ” திரைப்பட ஜோடி, ரியோ- மாளவிகா மனோஜ் மீண்டும் இணைந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !! ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ் தயாரிப்பில் ரியோராஜ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !! ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ் தயாரிப்பில், ஜோ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரியோ- மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, புதுமுக இயக்குனர் “பிளாக்‌ஷிப்” கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகும் ரொமான்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்துள்ளது. திருமணமான ஆண்களின் பிரச்சினைகளை பெண்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக சொல்லும், ரொமான்ஸ் காமெடி ஜானரில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படியான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகிறது. ரியோ- மாளவிகா மனோஜ் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க பிளாக்‌ஷிப் ஆர்.ஜே.விக்னேஷ் , ஷீலா ராஜ்குமார், டைரக்டர் ஏ.வெங்கடேஷ், Stills பாண்டியன், ஜென...