தாம்பரம் முடிச்சூர், வரதராஜபுரத்தில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!
தாம்பரம் முடிச்சூர், வரதராஜபுரத்தில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த 15 நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
இந்த மழை நீர் பாதிப்பு முடிவதற்குள் அடுத்தடுத்து கடந்த 2 நாட்களாக மீண்டும் கன மழை பெய்தது. இதில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல இடங்களில் மீண்டும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மழை வெள்ளம் பாதித்த தி.நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மீண்டும் நேரில் சென்று பார்வையிட்டு அங்கு மழை நீரை வடிய வைக்க துரித நடவடிக்கை மேற்கொண்டார்.
இதே போல் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆவடி, பூந்தமல்லி, திருமுல்லைவாயல் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண பணிகளை முடுக்கி...









