Joe Russo and A R Rahman launch the Hindi Marvel anthem for Indian fans!
Link:
https://youtu.be/w5LGdqQAChs
Avengers: Endgame releases on 26th April in English, Hindi, Tamil and Telugu. @donechannel1
எஸ் ஃபோகஸ் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார், பார்த்திபன், பாலக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகிபாபு நடிக்க, பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'குப்பத்து ராஜா'. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
உண்மையாக உழைப்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். காலா, லூசிஃபர் படங்களில் இதற்கு முன்பு பாடல் எழுதியிருக்கிறேன். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் பாபா பாஸ்கர் சார் இருவருமே என்னை மிகவும் ஊக்கப்படுத்தினர் என்றார் பாடலாசிரியர் லோகன்.
நானும் பார்த்திபனும் ஆரம்ப காலத்தில் இருந்தே நண்பர்கள். நான் துவண்டு போயிருந்த காலங்களில் என்னை ஊக்கப்படுத்தியவர் அவர். அவ...
சிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் சார்பில் D.சிவராம் குமார் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் சண்டிமுனி. நட்ராஜ் கதா நாயகனாக நடிக்கிறார்.
நாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மற்றும் வாசுவிக்ரம், சாம்ஸ்,ஆர்த்தி, தவசி, குண்டு ரவி, முத்துக்களை, கெளரி புனிதன்,கோவை ஈஸ்வரி, விசித்திரன்,காதல் சுகுமார், சூப்பர் சுப்பராயன், ஷபிபாபு,விஜய்பூபதி, நரேஷ் ஈஸ்வர் சந்துரு, லொள்ளு சபா பழனி,மேட்டூர் சேகர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - செந்தில் ராஜகோபால்
இசை - A.K.ரிஷால் சாய்
பாடல்கள் - வ.கருப்பன்
கலை - c.முத்துவேல்
நடனம் - ராதிகா லாரன்ஸ் சிவா
ஸ்டண்ட் - சூப்பர் சுப்பராயன்
எடிட்டிங் - புவன்
தயாரிப்பு நிர்வாகம் - முருகன் குமார...
சன் பிக்சரஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் முனி 4 காஞ்சனா 3.
ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.
கதா நாயகிகளாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி நடிக்கிறார்கள். மற்றும் சூரி, கோவை சரளா ஸ்ரீமன்,தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சம்பத்ராம், அனுபமாகுமார்,ஆர்.என்.ஆர்.மனோகர், இவர்களுடன் வில்லன்களாக தருண் அரோரா, கபீர்சிங், அஜய்கோஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - வெற்றி பழனிச்சாமி, சர்வேஷ் முராரி.
இசை - டூபாடு
பின்னணி இசை - எஸ்.தமன்
எடிட்டிங் - ரூபன்
கலை - ஆர்.ஜனார்த்தன்
ஸ்டண்ட் - சூப்பர் சுப்பராயன்.
நடனம் - ராகவா லாரன்ஸ்
பாடல்கள் - விவேகா, மதன்கார்க்கி, சரவெடி சரவணன்.
தயாரிப்பு மேற்பார்வை - விமல்.ஜி
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ராகவா லாரன்ஸ்.
சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரொ...
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக ‘மாநாடு’ படத்தில் நடிக்க இருக்கின்றார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கின்றார்.
சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் படப்பிடிப்பு தொடங்காததால் படம் கைவிடப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வந்த நிலையில் இந்த வதந்திகளுக்கு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முற்று புள்ளி வைத்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல் விரைவில் இப்படத்தின் முழு விவரங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சொல்லிருந்த நிலையில் மாநாடு படத்தின் ஹீரோயின் யார் என்ற அந்த தகவலும் வெளியாகியுள்ளது. மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி ப்ரியதர்ஷ...
வியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் தேவதாஸ்
தம்பி ராமையா-ஷாகுல் ஹமீது இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குனர் இரா மகேஷ் இயக்கும், உமாபதி, யோகிபாபு அசத்தும் தேவதாஸ்.
‘அதாக்கப்பட்டது மகா ஜனங்களே’, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ஆகிய படங்களை தொடர்ந்து உமாபதி ராமையா-யோகி பாபுவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் தேவதாஸ்.
இன்றைய தமிழ் சினிமாவின் நம்பிக்கை நடிகர் யோகி பாபு கலகலப்பூட்டும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இத்திரைப்படம் முழுவதும் வலம் வருகிறார்.
மனித வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் இரண்டற கலந்தது என்பது அறிந்ததே. ஆனால், ஒரு மனிதனுக்கு மிகப் பெரிய சந்தோஷமும், மிகப் பெரிய துக்கமும், ஒரே நேரத்தில் நடக்குமென்றால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதைக்களம். இந்த உணர்வுப்பூர்வமான கதையை நகைச்சுவை கலந்து, ஜனரஞ்சகமாக விறுவிறுப்பாக நகர...
‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ வெற்றியைத் தொடர்ந்து, சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், ‘தெகிடி’ புகழ் அசோக் செல்வன், சம்யுக்தா ஹோர்நாட் நடிப்பில், வெளிவரவிருக்கும் க்ரைம் திரைப்படம் ‘ரெட்ரம்’
காக்க காக்க, பச்சைக்கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் திரைப்படங்கள், அட்டகத்தி, சூடு கவ்வும், பிட்சா ஆகியவற்றுக்கு நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றிய சுந்தர் அண்ணாமலையின் இரண்டாவது திரைப்படம் ‘ரெட்ரம்’.
வியப்பூட்டும் திகில் மற்றும் மிரட்டல் காட்சி அமைப்புகளும், சுவராஸ்யமான காதல் காட்சிகளும், ரசிகர்களை இருக்கை நுனியில் அமரச் செய்யும் விதத்தில் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.
சென்னை, அதன் சுற்றுபுறங்கள் மற்றும் உதகமண்டலத்தின் அடர்ந்த காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள விதம் ரசிகர்களின் கவனத்தை பெரிதாக ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'ஃபர்ஸ்ட் லுக...
*விஜய்சேதுபதி தான் பிடிக்கும் - அபூர்வி சைனி ( மிஸ் இந்தியா எலைட்2019 )
சென்னையை சேர்ந்த அபூர்வி சைனி என்பவர் மார்ச் 17ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற "ரூபாறு பேஸ் ஆப் பியூட்டி இன்டர்நேஷனல் இந்தியா " என்கின்ற அழகி போட்டியில் கலந்து கொண்டு "ரூபாறு மிஸ் இந்தியா எலைட் 2019" என்ற பட்டத்தை வென்றார் . இந்தியா முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், அபூர்வி வென்றார். அபூர்வி தற்போது எஸ் .ஆர் .எம் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்து வருகிறார் . இவருக்கு தற்போது 21 வயது ஆகிறது . தனது 19ஆவது வயதில் மாடலிங் துறையில் கால் பதித்த இவர் "ரிலையன்ஸ் ஜுவேல்ஸ் மிஸ் இந்தியா சென்னை மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா, பிரெஷ் பேஸ் சோசியல் ஸ்டார் போன்றவற்றில் பங்கேற்று பட்டத்தை வென்றுள்ளார் . தெற்கு மண்டலம் நடத்திய "ரூபாரூ மிஸ் சவுத் இந்தியா " என்ற அழகு போட்டியில் கலந்து கொண்டு ...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களால் 'டான்ஸ் மாஸ்டர் ' என்றே அழைக்கப்படுகிறார் பாபா பாஸ்கர். நவநாகரீக நடன அமைப்புகளை கொடுக்க அவர் பெரும் முயற்சிகள் எடுத்தாலும், உள்ளூர் விஷயங்களை கலந்து கொடுக்கவும் தவறியதில்லை. அதனால் தான் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த நடன இயக்குனராகவும் இருக்கிறார். பல கொண்டாடப்படும் வெற்றி பாடல்களுக்கு நடனம் அமைத்த பாபா பாஸ்கர், குப்பத்து ராஜா படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார்.
சமீபத்தில் வெளியான குப்பத்து ராஜா டிரெய்லர் 'லோக்கல்' பின்னணியை கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது, இது குறித்து பாபா பாஸ்கர் கூறும்போது, "உண்மையில் நான் 'லோக்கல்' என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ளவில்லை, மாறாக அதை 'நேட்டிவிட்டி' என்று தான் அழைப்பேன். நம்மை சுற்றியுள்ள மக்கள் கிராமங்கள் மற்றும் அண்டை மாநிலங்களின் நேட்டிவிட்டியை பார்த்து வியக்கிறார்கள். சேரிகள் என்பவை உண்மை...
தலைக்கனம் பிடித்த இயக்குனரின் வக்கிரபுத்திக்கு வழி சொல்லும் சூப்பர் டீலக்ஸ்...
காமத்தையும் ஆபாச வார்த்தைகளையும் கலந்து விட்டால் சினிமாவில் ஜெயித்தது விடலாம் என்று எந்த மடையன் சொல்லிக் கொடுத்தானோ தமிழ் சினிமாவின் சாபக்கேடு விஜய்சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ்.
விஜய்சேதுபதி திருநங்கை ஷில்பாவாக அரை மணி நேரத்திற்கு வருகிறார். பாவம் திருநங்கைகள் என சொல்லும் அளவுக்கு அத்தனை பாவமான காட்சிகள்.
அருவருப்பான காட்சிகள். ஆபாசமான சித்தரிப்பு.இயக்குனர் தியாகராஜ குமாரராஜாவின் மட்டமான சிந்தனை காட்சிக்கு காட்சி.
சமந்தா நடித்த கதாபாத்திரம் மிக மிக கேவலமான காட்சியமைப்பு. ஆபாசத்தின் உச்சம்.
சரி கதை என்ன அப்படின்னு பாத்தா...
சமந்தா - பஹத் பாசில் ஜோடி விருப்பம் இல்லாத புருஷன் பொண்டாட்டி. புருஷன் இல்லாத போது முன்னாள் கல்லூரி காதலனை வீட்டுக்கு வரச் சொல்லி தகாத உறவு வைத்துக் கொள்ளும...