மாணவிகளை பலான வேலைக்கு முயன்ற கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது
அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகள் 4 பேரை தவறாக வழிநடத்த முயன்ற கல்லூரி உதவிப் பேராசிரியை திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். அத்துடன் மாணவிகளை பேராசிரியை நிர்மலா தேவி தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில் உயர் மட்ட விசாரணைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி உள்ளது. இங்கு, கணிதத் துறை உதவிப் பேராசிரியையாக ஆத்திபட்டியைச் சேர்ந்த நிர்மலாதேவி (46) பணிபுரிந்து வருகிறார். இவர், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நடைபெறும் போட்டித் தேர்வுகள், கருத்தரங்குகள் முதலியவற்றுக்கு மாணவ, மாணவிகளை வெளியிடங்களுக்கு அழைத்து செல்வது வழக்கமாம்.
இந்நிலையில், நிர்மலாதேவி, கடந்த மாதம் அவரது துறையில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் சிலரை செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு, பல்கலைக்கழக அதிகாரிகள் எதிர்பார்ப்பதை நிறைவேற்றினால...









