செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

சிவாஜி கணேசன் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு – தமிழக அரசுக்கு நடிகர் பிரபு பாராட்டு

சிவாஜி கணேசன் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு – தமிழக அரசுக்கு நடிகர் பிரபு பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு நடிகர் பிரபு பாராட்டு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து நடிகர் பிரபு கூறியதாவது:- ‘சிவாஜி கணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. இது எங்கள் குடும்பத்தின் கோரிக்கை என்பதைவிட, தமிழக மக்களின் நீண்டநாள் விருப்பமாக இருந்தது. ஒவ்வொரு தமிழர்களின் வீடுகளிலும் அவர்களுடைய குடும்பத்தில் ஒருவராக எங்கள் தந்தை வாழ்கிறார். அரசியலுக்கு அப்பாற்பட்டவர். தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் மிக சிறப்பாக பிரதிபலித்தார். சமூக நற்பணிகளுக்காக நிறைய உதவிகள் செய்து இருக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் சட்டசபையில் சிவாஜி கணேசனை பாராட்டி பேசி உள்ளனர். அவர் மீது ரசிகர்கள் இன்றைக்கும் அன்பாக இருக்கிறார்கள். அவருக்கு சிறப்பு சேர்த்துள்ள முதல்-அமைச்சர் ...
வில்லனாக களமிறங்கும் மனோஜ் பாரதிராஜா

வில்லனாக களமிறங்கும் மனோஜ் பாரதிராஜா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவில் வித்தியாசமான தலைப்புகளுடன் புதுப்படங்கள் வந்த வண்ணமாக உள்ளன. அந்த வரிசையில் முற்றிலும் மாறுபட்ட தலைப்புடன் உருவாகி வரும் திரில்லர் படம் தான் `ரெடி டு சூட்'. எஸ்.எஸ்.வி எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.ஆறுமுகம் தயாரிக்கும் இந்த படத்தின் படத்தின் பூஜை, சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. மனோஜ்குமார் இதயராஜ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் ஆனந்த் நாக் நாயகனாக நடிக்கிறார். இவர் நேரம், பிரேமம், வெற்றிவேல் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஆனந்த் நாக் ஜோடியாக ஜீவிதாவும், வில்லனாக பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே.பாரதிராஜாவும் நடிக்கின்றனர். சதீஷ் கதிர்வேல் ஔிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். முழுக்க முழுக்க திரில்லர் கதையாக உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவ...
மகன் கவுதமுக்கு அப்பாவாகவே Mr.சந்திரமௌலி படத்தில் நடித்துள்ள கார்த்திக்..!

மகன் கவுதமுக்கு அப்பாவாகவே Mr.சந்திரமௌலி படத்தில் நடித்துள்ள கார்த்திக்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று புகழப்பட்ட கார்த்திக் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து மகன் கவுதமுக்கு அப்பாவாகவே மிஸ்டர் சந்திரமவுலி படத்தில் நடித்துள்ளார். அவரிடம் பேசியதில் இருந்து... நான் கவுதமை வைத்து படம் இயக்குவதற்காக கதை எழுதிக் கொண்டிருந்தேன். அந்த கதை அவருக்கு தெரியாது. ஒருநாள் என்னிடம் வந்து ஒரு கதை கேட்கறீங்களா? என்று கேட்டார். சம்மதித்தேன். திருவை அறிமுகம் செய்துவிட்டு சென்றுவிட்டார். கதை மிகவும் பிடித்ததால் சம்மதித்தேன். நானும் அப்பாவும் சேர்ந்து நடித்ததில்லை. நான் நடிக்க தொடங்கும்போதே அப்பா மறைந்துவிட்டார். அந்த ஏக்கம் எனக்குள் இருந்தது. தனிமையாகவே என்னுடைய சினிமா வாழ்க்கை வேகமாக ஓடியது. அதை சரி செய்ய என்னுடன் நடிக்கும் மூத்த நடிகர்களுடன் மனம் விட்டு பேசுவேன். இப்போது கவுதமிடம் பேசி அவர்கள் உலகத்தை புரிந்துகொள்கிறேன். நிஜ வாழ்க்கையில் நாங்கள் எப்படியோ அப்படித்தான் படத்...
மின்னலால் பறிபோன கல்யாணம் – பீகாரில் வினோதம்

மின்னலால் பறிபோன கல்யாணம் – பீகாரில் வினோதம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
வடமாநிலங்களில் சில திருமணங்கள் வினோத காரணங்களுக்காக மேடையிலேயே நின்றுபோகும் நிகழ்வு அவ்வப்போது நடக்கிறது. உதாரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாப்பிள்ளை வீட்டாருக்கு ரசகுல்லா இல்லை என்பதற்காக நிறுத்தப்பட்ட கல்யாணம், ஐஸ் கிரீம் வைக்காததால் ஏற்பட்ட தகராறில் மண்டை உடைப்பு என திருமணம் நிறுத்தப்படுவதற்கான காரணங்கள் நீள்கின்றன. இந்த வரிசையில், பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் நடந்த திருமணத்தின்போது மணமேடையில் இருந்த மாப்பிள்ளை மின்னலை பார்த்து பயந்து, வினோதமாக நடந்து கொண்டார். இதனைக் கண்ட மணப்பெண்ணோ மேடையிலேயே மாப்பிள்ளை வேண்டாம் எனக்கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனால் இரு வீட்டாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, மாப்பிள்ளை வீட்டார் சிலர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. சில வினாடிகள் தோன்றி மறைந்த மின்னல் மணமகனுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியா நினைவாக மாறிவிட்டது....
என் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக வரவேற்பேன் – கமல்ஹாசன்

என் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக வரவேற்பேன் – கமல்ஹாசன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் இன்று கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா? என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன் என பதிவிட்டுள்ளார்  ...
ஜுலை15ல் உலக MGR பேரவை நடத்தும் பிரமாண்டமான எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா..!

ஜுலை15ல் உலக MGR பேரவை நடத்தும் பிரமாண்டமான எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  உலக எம்.ஜி.ஆர் பேரவை பிரதிநிதிகள் இணைந்து நடத்தும் மாநாடு மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வரும் ஜூலை 15ஆம் தேதி சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. அதனை பற்றிய தகவல்களை வெளியிடும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் உலக எம்ஜிஆர் பேரவை முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை பற்றி பேசினர். எம்ஜிஆர் பக்தர்கள் உலகம் முழுவதும் பரவி, அங்கேயே அமைப்பை தொடங்கி விழா நடத்தி வருகிறார்கள். நானும் ஃபிரான்ஸில் ஒரு அமைப்பை தொடங்கி 15 வருடங்களாக நடத்தி வருகிறேன்.  கடந்த ஆண்டு ஃபிரான்ஸில் மாநாடு நடத்தினோம். அதில் சைதை துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவரிடம் புரட்சி தலைவரின் பக்தர்களை ஓரணியில் இணைப்பது பற்றி நிறைய பேர் வேண்டுகோள் வைத்தனர். அதற்கு செவி சாய்த்து துவங்கப்பட்டது தான்...
குழந்தைகளுக்கான படமாம் காட்டேரி சொல்கிறார் இயக்குனர்..!

குழந்தைகளுக்கான படமாம் காட்டேரி சொல்கிறார் இயக்குனர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
குழந்தைகளையும் கவரும் ‘காட்டேரி ’   ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘காட்டேரி’. இந்த படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர், பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, எஸ் என். பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டீகே.   படத்தைப் பற்றி இயக்குநர் டீகேயிடம் கேட்டபோது,‘ காட்டேரி என்றால் அனைவரும் இரத்தம் குடிக்கும் பேய் என்று நினைக்கிறார்கள். ஆனால் காட்டேரி என்றால் பழைய மனிதர்கள், மூதாதையர்கள் என்று அர்த்தமும் இருக்கிறது.   தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை ஒரு முறை சந்தித்து இப்படத்தின் ஒன் லைனைச் சொன்னேன். அவருக்கு பிடித்துவிட்டது. அத்துடன் இந்த ...
டிராபிக் ராமசாமி படம் எனக்கு அடையாளம் கொடுத்தது – உபாசனா

டிராபிக் ராமசாமி படம் எனக்கு அடையாளம் கொடுத்தது – உபாசனா

HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
தமிழ் சினிமா என்கிற முத்தெடுக்கும் கடலில் முத்தெடுக்க எல்லா மா நிலங்களில் இருந்தும் எவ்வளவோ புதுமுகங்கள் நாள் தோறும் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.. அப்படி புகழ் எனும் முத்தெடுக்க வங்காளத்திலிருந்து வந்திருப்பவர் தான் உபாசனா RC.. தமிழில் அறிமுகம் 88 என்கிற படத்தின் மூலம் என்கிற இவர் திரை அறிமுகம் என்னவோ முதலில் கன்னட படம் மூலமாகத் தான். சுமார் 80 விளம்பரப் படங்களின் மூலம்  மக்களிடம் நல்ல அறிமுகமானவர் இவர்.. டிராபிக் ராமசாமி படம் எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது.. ஒரு நல்ல கதையம்சமுள்ள படத்தில் நடித்தது பெருமையாக இருக்கு... எனக்கு சின்ன வயசிலிருந்தே சினிமா மீது ஆர்வம் உண்டு.... அதனால் பரதனாட்டியம் கிளாசிக்கல் டான்ஸ் கத்துக்கிட்டேன்.   அப்பா அம்மா பிறந்தது வங்காளம் ..நான் பிறந்தது குஜராத். படித்தது கர்நாடகா, இப்போ வாழ்வது தமிழ் நாட்டில்... ஆக இந்தியா முழுக்க ஒரு ரவுண்ட...

அரை நூற்றாண்டுகளாக தமிழகம் கறைபட்டுள்ளது – கமல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  மக்கள் நீதி மய்யத்தின் “இது நம்மவர் படை” பாடல்கள்  வெளியிடப்பட்டது. பாடலாசிரியரும், நடிகருமான கவிஞர் சினேகனின் வரிகளில், இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையில் உருவாகி இருக்கும் 6 பாடல்கள் கொண்ட தொகுப்பை  “மக்கள் நீதி மய்யம்” கட்சியின் தலைவர் பத்மபூஷன் கமல்ஹாசன் வெளியிட்டார். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வரிசையில் “மக்கள் நீதி மய்யம்”இணைந்த பிறகு நடைபெற்ற முதல் கட்சி நிகழ்ச்சியாக அமைந்த இந்த விழாவில், கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பாடல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றிய கமல்ஹாசன், "நம்மவர் என்பது உங்களையும், என்னையும் குறிக்கும். வரும் காலங்களில் மாலைகளையும், பொன்னாடைகளையும் நாம் தவிர்க்க வேண்டும். மாற்றத்தை நோக்கி நகர்கிறோம் என்பதற்கான சமிக்ஞையாக அது இருக்கும். வருகிற வழியில் சில பேனர்களைப் பார்த்தேன். நமது சாலைகளில் ப...