கருணாநிதி கெட்டப்பில் பார்லிமெண்ட்டுக்குள் நுழைந்து பரபரப்பு காட்டிய தெலுங்கு தேச எம்பி.
தெலுங்கு தேச எம்பி நரமல்லி சிவபிரசாத் ஒவ்வொரு நாளும் மத்திய அரசை எதிர்க்கும் விதமாக நாரதர், நாட்டுப்புற கலைஞர், ஆடுமாடு மேய்ப்பவர், பரசுராமன், ஹிட்லர் என புது புது தோற்றங்களில் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
கருணாநிதி கெட்டப்பில் பார்லிமெண்ட்டுக்குள் நுழைந்து பரபரப்பு காட்டிய தெலுங்கு தேச எம்பி.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் மாநிலம் சார்ந்த பிரச்னைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக அணிகளைத் திரட்டி சந்திரபாபு நாயுடு மேற்கொண்டுள்ள முயற்சிக்கு திமுக தலைவர் ஸ்டாலினும் ஆதரவு தெரிவித்து இதற்கான கூட்டங்களில் பங்கெடுத்து வருகிறார். இதன் காரணமாக சிவபிரசாத் கருணாநிதி கெட்டப்பில் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளார்.
கருப்பு கண்ணாடி, ...









