வாட்ஸ் அப்பில் ரெட் ஹார்ட் எமோஜி அனுப்பினால் ஜெயில் கன்பார்ம்!
சவுதியில் வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய குறியீடை குறிக்கும் எமோஜீயை அனுப்பியதாக புகார் எழுந்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என சைபர் கிரைம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
சவுதி சட்டத்தின்படி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 1 லட்சம் சவுதி ரியால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் மோசடி புகார்களுக்கு எதிரான அமைப்பின் உறுப்பினர் அல் மோடாஸ் குட்பி, சவுதி நாளிதழுக்கு விடுத்துள்ள அறிக்கையில்,
வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய எமோஜீயை ஒருவரது விருப்பம் இல்லாமல் அனுப்புவது துன்புறுத்தல் குற்றத்திற்கு சமம் ஆகும் என்றும்,
ஆன்லைனில் சேட்டிங் செய்யும் போது சில படங்கள் மற்றும் எமோஜீக்களை பயன்படுத்துவதால், எதிர்தரப்பினர் காயமடைந்ததாக புகார் தொடர்ந்தால், அது துன்புறுத்தல் குற்றமாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்...









