யாஷின் ‘டாக்ஸிக்- ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் -அப்ஸ் ‘ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் படமாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படமாகும்
யாஷின் 'டாக்ஸிக்- ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் -அப்ஸ் ' உலகளாவிய பார்வையாளர்களுக்காக எல்லைகளைத் தகர்த்து ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் படமாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படமாகும்
ஒரு புரட்சிகரமான சினிமா முயற்சியாக 'டாக்ஸிக் ' என்பது ஆங்கிலம் மற்றும் இந்திய மொழி இரண்டிலும் கருத்தாக்கம் செய்யப்பட்டு, எழுதப்பட்டு, படமாக்கப்பட்ட முதல் பெரிய அளவிலான இந்திய திரைப்படமாகும். இந்திய மொழியான கன்னடத்தில் இந்த படம் படமாக்கப்பட்டு வருகிறது. இது உண்மையிலேயே உலகளாவிய திரைப்பட அனுபவத்திற்கு வழி வகுக்கும். மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல இந்திய மற்றும் சர்வதேச மொழிகளில் டப்பிங் செய்யப்படும்.
சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற இயக்குநர் கீது மோகன் தாஸ் எழுதி இயக்கிய, 'ராக்கிங் ஸ்டார்' யாஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்' - பல்வேறு கலாச்சார ரீதியிலா...









