பைக் ஆம்புலன்ஸ் ‘ரக்ஷிதா’ டெல்லியில் அறிமுகம்!
பைக் ஆம்புலன்ஸ் ‘ரக்ஷிதா’ டெல்லியில் அறிமுகம்
வனப்பகுதிகள் மிக்க குறுகிய பாதைகளில் சென்று காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்ளுக்கு கொண்டுசெல்ல பைக் ஆம்புலன்ஸ் ‘ரக்ஷிதா’ இன்று டெல்லியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) இணைந்து உருவாக்கிய இந்த பைக் ஆம்புலன்ஸ் பாதுகாப்பு அவசரகால தேவைகளில் பயன்படும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சிஆர்பிஎப் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பதட்டமான பகுதிகளில் குறிப்பாக மாவோயிஸ்டு நடமாட்டம் மிக்க பகுதிகளில் துப்பாக்கிச் சண்டைகளின்போது மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் குறுகிய பாதைகளில் வேகமாக செல்ல வேண்டிய அவசியத்தை பலமுறை சிஆர்பிஎப் உணர்ந்துள்ளது.
மருத்துவ வசதிகள் சரியான நேரத்தில் அடைய முடியாத நிகழ்வுகளும், மருத்துவ உத...









