மனதை உலுக்கும் பாடல் மூலம் மீண்டும் கிராமிய பாடகர் அறிமுகம்!
மனதை உலுக்கும் பாடல்! மீண்டும் கிராமிய பாடகர் அறிமுகம்.
“எங்கிருந்தோ கத்துதம்மா செங்குருவி.. “
“ஐஸ்வர்யா முருகன்”
திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு !
'ரேணிகுண்டா' படம் மூலம், திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம். இவரது இயக்கத்தில்,
மாஸ்டர் பீஸ் திரைப்பட நிறுவனத்தின் சார்பில் ஜி.ஆர்.வெங்கடேஷ் மற்றும் கே.வினோத் தயாரித்துள்ள திரைப்படம் 'ஐஸ்வர்யா முருகன்'.
காதலின் பெருமைகளை சொல்லும் தமிழ் சினிமா சரித்திரத்தில் அதன் வேறு பக்கத்தை காட்டும் படமாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது. ஒரு காதலால், காதலர்களின் குடும்பங்களில் என்னென்ன துன்பத்தை தருமென அதன் வலிகளை அழுத்தி பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் மூன்றாவது பாடலான “எங்கிருந்தோ கத்துதம்மா செங்குருவி..” எனும் - மனதை உலுக்கும் காட்சியாக உருவான இப்பாடல் தற்போது வெளியாகியுள்ளது. காதல...









