HOME SLIDER
பேய் இருக்கிறதா ‘அகோரி’ பட விழாவில் பாக்யராஜ் ருசிகர தகவல்..!
ராஜ்குமார் இயக்கத்தில் ஷயாஜி ஷிண்டே நடித்துள்ள ‘அகோரி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் கே.பாக்யராஜ் பேசியதாவது:-
‘தமிழக மக்களை நினைத்தால் தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எந்த கட்சிக்காரன் காசு கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு, சத்தியம் செய்து கொடுக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். இவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று எண்ணி எண்ணியே எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆர்பி.பாலா மொழி மாற்றுப் படங்களுக்கான வசனகர்த்தா என்று சொன்னார்கள். ‘புலி முருகன்’ மற்றும் ‘லூசிபர்’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதி இருப்பதாகச் சொன்னார்கள்.
நான் ஒரே ஒரு டப்பிங் படத்திற்கு மட்டும்தான் வசனம் எழுதினேன். அங்கு சென்றவுடன் தான் அதில் உள்ள சவால்களும், சங்கடங்களும் புரிந்தன. அதன் பிறகுதான் டப்ப...
சிவகார்த்திகேயன்- பாண்டியராஜ் படத்தில் இணைந்த பிரபலங்கள்..!
சிவகார்த்திகேயன்-பாண்டியராஜ் படத்தில் இணைந்த பிரபலங்கள்..!
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து 5 படங்கள் ரெடியாகி வருகிறது. இதில் மெகா பட்ஜெட்டில் உருவாகும் முக்கியமான படமாக சன் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படம்தான்.
சின்னத்திரையில் இருந்த சிவகார்த்திகேயனை மெரீனா படம் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் பாண்டியராஜ்.
மெரினா திரைப்படத்தைத் தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் இந்த கூட்டணி இணைந்தது. தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. இந்த கூட்டணியின் படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இப்போது சிவகார்த்திகேயன் மிக பிசியான நடிகராக மாறியிருக்கிறார். அதோடு, வியாபார ரீதியிலும் அவருக்கென தனி மார்க்கெட் உருவாகியுள்ளது.
பாண்டியராஜ்- சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில்...
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன்
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன்
வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் இந்த படத்திற்கு சங்கத்தமிழன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது
இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்கள். காமெடி வேடத்தில் சூரி நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
`சூப்பர் டீலக்ஸ்' படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘சிந்துபாத்’ திரைப்படம் உருவாகியுள்ளது....
துரியோதனன் ஆணவத்தால் அழிந்தவன் -மோடிக்கு பிரியங்கா எச்சரிக்கை
துரியோதனன் ஆணவத்தால் அழிந்தவன் -
மோடிக்கு பிரியங்கா எச்சரிக்கை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை, நம்பர் ஒன் ஊழல்வாதி என்று பிரதமர் மோடி சமீபத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். இது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அரியானா மாநிலம் அம்பாலாவில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொது செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மத்தியில் உள்ள பாஜகவினர் பேசுவதற்கு விஷயம் எதுவும் இல்லையென்றால் எனது குடும்பத்தை அவமதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
ஆணவத்தை இந்தியா ஒருபோதும் மன்னித்தது இல்லை. இதற்கு வரலாற்றில் பல்வேறு சான்றுகள் இருக்கின்றன. சிறந்த இதிகாசமான மகாபாரதத்திலும் இதற்கு ஆதாரங்கள் உள்ளன. கவுரவர்களின் அரசனான துரியோதனனிடம் ஆணவம் இருந்ததாலேயே அவர் அழிந்தார் என பிரதமர் மோடிக்கு...
யு/ஏ சான்றிதழ் பெற்ற விஷாலின் அயோக்யா..!
யு/ஏ சான்றிதழ் பெற்ற விஷாலின் அயோக்யா..!
ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமாகும் ‘அயோக்யா’ படத்தில் விஷால் - ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் பார்த்திபன், ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன டெம்பர் படத்தின் ரீமேக்தான் இந்த அயோக்யா படம். இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்புடன் நடந்து முடிந்து ரிலீசுக்கு ரெடியானது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது கடந்த மாதம் 19ம் தேதி ரிலீஸ் ஆகும் என திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான அறிவிப்பும் வெளியான நிலையில் திடீரென ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இப்போது வரும் 10ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரிலீசுக்கு இரண்டு தினங்கள் மட்டு...
“அழகை வெளிப்படுத்துவதற்கு வயது ஒரு தடையேயில்லை” ; பேரழகி சச்சு கொடுக்கும் டிப்ஸ்..!
'கிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ்' சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் 'பேரழகி ஐ.எஸ்.ஓ'. 'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா' ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சீனியர் நடிகை சச்சு இந்தப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்..
படத்தின் கதைப்படி, முந்தைய காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவர் தான் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரண்மனை வைத்தியர்களை கொண்டு ஒரு மருந்து கண்டுப்பிடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த மருத்துவ குறிப்பு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் கிடைக்கிறது.
ஷில்பாவின் பாட்டியாக வரும் சச்சு, அந்த நிறுவனத்தை அணுகி தன்னை இளமையாக மாற்றிக்கொள்ளகிறார். பாட்டி சச்சு, இப்போது அழகான பேத்தியாக மாறிவிடுகிறார். அதன்பின் படத்தில் நடக்க...
நெடுநல்வாடை படத்திற்கு கிடைத்த முதல் விருது!
பூராமு, இளங்கோ, அஞ்சலி நாயர் ஆகியோரது நடிப்பில், அறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் கடந்த மார்ச் 15 ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதோடு அனைவராலும் பாராட்டப்பட்ட படம் " நெடுநல்வாடை "
26 நாடுகளிலிருந்து 106 திரைப்படங்கள் கலந்துகொண்ட Innovatie Film Acadamy ( IFA) சார்பில் பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் " நெடுநல்வாடை " கலந்துகொண்டு அனைவரது பாராட்டையும், விருதையும் பெற்றுள்ளது .
விருது கிடைத்த மகிழ்ச்சியில் இயக்குனர் செல்வக்கண்ணன் விழாவில் பேசியதாவது..
ரொம்ப பெருமையா இருக்கு இவ்வளவு பெரிய, பல நாடுகளில் இருந்து, பல மொழிகளில் இருந்து வந்திருக்கும் முக்கியமான இயக்குனர்கள், சினிமாத்துறையில் இருந்து வந்திருப்போர்கள் முன்னாடி எங்கள மாதிரி புதியவர்கள் நிக்கிறோம்கிறது எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு. எங்களை அங்கீகரித்த Innovatie Film Acadamy ( IFA) க்கு ரொ...



