நம்ம தமிழகத்தில்தான் காவலர்கள் தற்கொலை அதிகம்!
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 67 வயது எனும் நிலையில் தமிழகக் காவலர்களின் பலர் அற்பாயுளில் இறந்து விடுவது அதிகரித்து வருகிறது. 24 மணிநேரமும் ‘காவலர்'களாக மட்டுமே வாழும் பணிச் சூழல்தான் காவலர்களின் முதல் எதிரி. குடும்பத்துடன் நேரம் செலவிடுதல், நண்பர்களுடன் இணைந்திருத்தல், பொழுதுபோக்கு, சமூகக் கலப்பு என சராசரி குடிமக்கள் அனுபவிக்கும் உரிமைகள் காவலர்களுக்கு மறுக்கப் படுகிறது மனஅழுத்தம் அதிகம்: பெரும்பாலான காவலர்கள் படபடப்பு, புலம்பல், சந்தேகம், குழப்பம், தெளிவின்மை என எதிர்மறை உணர்ச்சிகளில் அவர்கள் உழல்கின்றனர். முக்கியமாக குடும்பத்துடன் நேரம் செலவிடவும் அன்பு செலுத்தவும் பணிச்சூழல் இடமளிக்க வில்லை. இதனால், ஏற்படும் மன அழுத்தம் தற்கொ லைக்கும் இளவயது மரணங்களுக்கும் காரணமாகிறது என்று கடந்த சில வருடங்களாகவே தகவல்கள் வெளி வந்த நிலையில் தற்போதும் காவலர்கள் தற்கொலை செய்துகொள்வதில் தமிழகம் முதலிடத்...









