செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!

எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி! அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும்,  எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவமனையில்  இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். குடலிறக்கம் பிரச்சனை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில்  இதுதொடர்பான பரிசோதனை மேற்கொள்வதற்காக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனை முடிந்த பின்னர் இன்று அவர் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது....
நடிகர் ரஜினிக்கு இப்படி ஒரு பாதிப்பா? – வெளியான புதிய தகவல்!

நடிகர் ரஜினிக்கு இப்படி ஒரு பாதிப்பா? – வெளியான புதிய தகவல்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிக்கு இப்படி ஒரு பாதிப்பா? - வெளியான புதிய தகவல்! திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டபோது ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சைப்பெற்றால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ரஜினிகாந்த் இந்நிலையில், ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ரத்த நாள பாதிப்பை சரிசெய்யும் சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும், நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால், பிற உறுப்புகளின் செயல்பாடுகளையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து ...
சீமானோ, நாம் தமிழரரோ ஈழ விடுதலை என பேசி பணம் கேட்டால் செருப்பால் அடியுங்கள் முன்னாள் புலி ஆவேசம்

சீமானோ, நாம் தமிழரரோ ஈழ விடுதலை என பேசி பணம் கேட்டால் செருப்பால் அடியுங்கள் முன்னாள் புலி ஆவேசம்

HOME SLIDER, kodanki voice
  சீமானோ, நாம் தமிழரரோ ஈழ விடுதலை என பேசி பணம் கேட்டால் செருப்பால் அடியுங்கள் முன்னாள் புலி ஆவேசம்     https://youtu.be/WCg_Rs9Oz1M  
சென்னை-புறநகர் பகுதியில் 7 நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு!

சென்னை-புறநகர் பகுதியில் 7 நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை-புறநகர் பகுதியில் 7 நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு! வடகிழக்கு பருவமழை கடந்த 25-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து மத்திய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. தெற்கு வங்கக்கடல் மத்தியில் இருந்து வந்த இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 2 நாட்களில் மேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உள் மாவட்டங்களில் 29 முதல் 31-ந் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. குறைந்...
நியாய விலைக்கடைகள் மூலம் கியாஸ் சிலிண்டர் விற்பனை: மத்திய அரசு திட்டம்!

நியாய விலைக்கடைகள் மூலம் கியாஸ் சிலிண்டர் விற்பனை: மத்திய அரசு திட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நியாய விலைக்கடைகள் மூலம் கியாஸ் சிலிண்டர் விற்பனை: மத்திய அரசு திட்டம்! சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மானிய சிலிண்டர் விலை தற்போது ரூ.900 ஆயிரத்தை கடந்து உள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சிறிய கியாஸ் சிலிண்டர்களை நியாய விலைக்கடைகள் மூலம் சில்லறை விலைக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த தகவலை மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே நேற்று தெரிவித்து உள்ளார். நியாய விலைக்கடைகளின் நிதி சாத்தியக்கூறுகளை அதிகரிப்பது குறித்து நேற்று நடத்தப்பட்ட மெய்நிகர் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தகவலை அவர் வெளியிட்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், கியாஸ் சிலிண்டர்களை நியாய விலைக்கடைகள் மூலம் சில்லறை விற்பனை செய்யும் திட்டத்தை பாராட்டினர். மேலும் இந...
திராவிடம் எது என கேட்கும் கோமாளிகளே! இதுதான் திராவிடம் – முதல்வர் ஸ்டாலின் சரவெடி

திராவிடம் எது என கேட்கும் கோமாளிகளே! இதுதான் திராவிடம் – முதல்வர் ஸ்டாலின் சரவெடி

HOME SLIDER, kodanki voice, politics, செய்திகள், வீடியோ
திராவிடம் எது என கேட்கும் கோமாளிகளே! இதுதான் திராவிடம் – முதல்வர் ஸ்டாலின் சரவெடி     https://youtu.be/BWidUOGZ5-Y
திடீரென கவர்ச்சிக்கு மாறிய ரித்திகா சிங் – வைரலாகும் போட்டோஷூட்!

திடீரென கவர்ச்சிக்கு மாறிய ரித்திகா சிங் – வைரலாகும் போட்டோஷூட்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
திடீரென கவர்ச்சிக்கு மாறிய ரித்திகா சிங் - வைரலாகும் போட்டோஷூட்! சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் அதே வேடம் என்பதால் கனகச்சிதமாக பொருந்தினார். இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. கடந்தாண்டு அவர் நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம், பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். தற்போது இவர் தமிழில், அருண் விஜய்யின் பாக்சர், விஜய் ஆண்டனியுடன் கொலை, பிச்சைக்காரன் 2, அரவிந்த் சாமியின் வணங்காமுடி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் ரித்திகா சிங், சமீப காலமாக கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது சமூ...
தேர்தலில் வெற்றி பெற்றவர்களுடன் விஜய் – வைரலாகும் புகைப்படம்!

தேர்தலில் வெற்றி பெற்றவர்களுடன் விஜய் – வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
தேர்தலில் வெற்றி பெற்றவர்களுடன் விஜய் - வைரலாகும் புகைப்படம்! விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் வெற்றி பெற்றனர். இவர்களின் இந்த வெற்றி அரசியல் வட்டத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் தேர்தலில் தன் படமோ, கொடியோ பயன்படுத்தக்கூடாது என்று விஜய் கண்டிப்பாகக் கூறி, தடை போட்டிருந்தார். ஆனாலும் சோர்வடையாத விஜய் ரசிகர்கள் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து ஆதரவு கேட்டனர். தேர்தலில் நின்ற பல நிர்வாகிகள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்து  பாராட்டியிருக்கிறார் விஜய். மேலும் வெற்றி பெற்றவர்களுடன் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது....
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சவுந்தர்யா ரஜினிகாந்த்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சவுந்தர்யா ரஜினிகாந்த்!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சவுந்தர்யா ரஜினிகாந்த்! இளைய மகளான சவுந்தர்யாவின் ஹூட் (Hoote) ஆப்பை கடந்த திங்கட்கிழமை நடிகர் ரஜினிகாந்த் அறிமுகப்படுத்தினார். எழுத படிக்க தெரியாதவர்கள் இந்த செயலி வாயிலாக மற்றவர்களுக்கு தாங்கள் சொல்ல வரும் கருத்துக்களை, தங்கள் சொந்த குரல் வாயிலாக தெரிவிக்கலாம் எனவும், வருங்காலத்தில் மற்ற சமூக வலைத்தளங்கள் போல, இந்த hoote செயலி பிரபலம் அடைய வாழ்த்துவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தனது குரல் பதிவில் தெரிவித்து இருந்தார். ஹூட் ஆப் அறிமுக விழாவில் பேசிய சவுந்தர்யா, கிளப் ஹவுஸ், ட்விட்டர் ஸ்பேசஸ் போல் இல்லாமல், யார் வேண்டுமானாலும் குரல் பதிவு செய்யும் வகையில் ஹூட் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாகவும் இது இருக்கும் என தெரிவித்தார். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்று...