கமல்ஹாசனுக்கு பிறகு துபாய் புர்ஜ் கலீபாவில் இடம் பெற்ற “மகாராஜா” விஜய் சேதுபதி
*கமல்ஹாசனுக்கு பிறகு புர்ஜ் கலீபாவில் இடம் பெற்ற விஜய் சேதுபதி*
*மிக உயர கட்டிடமான புர்ஜ் கலீபாவில் முன்னோட்டம் வெளியான இரண்டாவது தமிழ் படம் 'மகாராஜா': மெர்லின் தலைமையிலான W.I.T ஈவன்ட்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக நடத்திய விழாவில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்பு*
பெண்களால் பெண்களுக்காக அமீரகத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பான மெர்லின் தலைமையிலான W.I.T (Where in Tamilnadu) ஈவன்ட்ஸ் நிறுவனம் மார்ச் 2022 முதல் பல்வேறு நிகழ்சிகளை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. பெண்களுக்கு தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாக கொண்ட இந்நிறுவனம், அமீரகத்தில் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும், திரைத்துறை புரோமஷனல் நிகழ்வுகளையும் சிறப்பாக நடத்தி முத்திரை பதித்து வருகிறது.
தலைமை செயல் அதிகாரி மெர்லின் தலைமையி...









