
வணங்கான் கோடங்கி விமர்சனம் 3.5/5
அழகான ஹீரோவை அழுக்காக காட்டுவது, வாய் பேச முடியாமல், காது கேட்காத ஹீரோவை துரத்தி துரத்தி காதலிக்கும் ஹீரோயின், குரூர கொடூர கொலை, பாலியல் சீண்டல்கள், தங்கை செண்டிமெண்ட், ஆண்களின் வக்கிரபுத்தி, மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை, இந்து கிறித்துவ மத கலவை என இயக்குனர் பாலாவின் வழக்கமான படம்தான் வணங்கான்.
கதைப்படி வாய் பேச முடியாத காது கேட்காத அருண்விஜய் தன் தங்கை மீது அதிக பாசத்தோடு இருக்கிறார். அதே நேரம் கடும் முன்கோபகாரனாக இருக்கிறார். அவரை ஹீரோயின் விரட்டி விரட்டி காதலிக்கிறார்.
ஒரு கட்டத்தில் மாற்று திறனாளிகள் தங்கியிருக்கும் ஒரு விடுதியில் வாட்ச்மேனாக சேருகிறார் அருண்விஜய்.
அங்கே பார்வையற்ற மாணவிகள் குளிப்பதை ஒரு சிலர் ஒளிந்திருந்து பார்த்து ரசிக்கிறார்கள். அதை ஒரு மாணவி எப்படியோ கவனித்து அவர்களை பாத்ரூமில் வைத்து அடைத்துவிட்டு வெளியே வர அங்கே வரும் வாட்ச்மேன் அருண்விஜய்க்கு விவரம் தெரிந்து அவர்களை விரட்டுகிறார்.
அருன்விஜயிடம் சிக்கிய 2 பேரை மிக கொடூரமாக அடித்து கொல்கிறார் அருன்விஜய். ஒருவன் மட்டும் தப்பிக்கிறார். பின்னர் தானே போலீசில் போய் சரண் அடைகிறார்.
எதற்காக கொலை செய்தார் என்பது தெரியாமல் போலீஸ் தவிக்கிறது. இதனால் ஜாமீனில் வரும் அருண்விஜய் மீண்டும் ஒருவனை கொடூரமாக கொன்று உடலை மரத்தில் துணியில்லாமல் தொங்கவிட்டு மீண்டும் போலீசில் சரண் அடைகிறார்.
3 கொலை செய்த்து ஏன்? அதற்கான காரணத்தை அருண்விஜய் சொன்னாரா? தங்கை என்ன ஆனார்? ஹீரோயின் காதல் கை கூடியதா? என்பத்ற்கு விடை சொல்கிறது பாலாவின் வணங்கான்.
அருண்விஜய் கடும் உழைப்பை போட்டிருக்கிறார். அத்ற்கு பலனும் கிடைக்கும்.

ஹீரோயின் ரோஷ்ணி பிரகாஷ் மிக அழகாக தன் கேரக்டரை நிலை நிறுத்திக் கொண்டார். அவரை விட ஹீரோ தங்கை ரோலில் நடித்த குட்டிப் பெண் ரிதா அசத்தியிருக்கிறார். பாசம், சோகம், சைகை மொழி என ரிதா மனசில் நிற்கிறார்.
இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளை கதைக்களமாக எடுத்து அப்படி செய்கிறவர்களுக்கு தண்டணைகளும் மிக கொடூரமாக இருக்க வேண்டும் என சொல்வதோடு அப்படி கொடுமை செய்கிற மாபாதகர்களை தட்டிக் கேட்பவர்களுக்கு சட்டம் எப்போதும் துணை நிற்கும் என்பதையும் அழுத்தமாக இயக்குனர் பாலா பதிவு செய்திருப்பதை வர்வேற்கலாம்.
கெஸ்ட் ரோலில் நடிக்கும் மிஷ்கின், சமுத்திரகனி கதாபாத்திரங்களும் மிக அருமை.
வழகம் போல போலீசின் அடாவடித்தனம், அத்துமீறல்களை நக்கல் செய்யும் நீதிபதியாக மிஷ்கின் பேசும் வசன்ங்கள் நச்.
ஜீ வி பிரகாஷின் இசை பலம் சேர்க்கிறது. முதல் பாதி ஒரு டைப்பாகவும், இரண்டாம் பாதி மிக எமோஷனலாகவும் கொடுத்து வணங்கானை அழுத்தமாக பதிய வைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பாலா.

தண்டனை குற்றவாளிகளுக்கு சீருடை தரமாட்டார்கள் என்பதும், கொலை குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அருண் விஜய்யை பார்க்க தங்கையும், காதலியும், விடுதி வார்டன் சாயாவும் ஜெயிலுக்கு உள்ளேயே செல்வது போன்ற லாஜிக் மீறிய பல காட்சிகளில் இயக்குனர் பாலாவின் அனுபவம் கேள்விக்குறியாகிறது?
அதோடு பார்வையற்ற மாணவிகள் உடைகளை களைந்து குளிக்கும் குளியல் அறை காட்சிகளுக்கு அவ்ளோ டீட்டெய்ல் தேவையா இயக்குனர் பாலா அவர்களே?இதுவே கடுமையான வக்கிர புத்தி இல்லையா?
எது எப்படியோ கிளைமாக்சில் கண்ணீர் வருவது கட்டாயம்!
மொத்தத்தில் வக்கிரபுத்தி உள்ளவர்களுக்கு வணங்கான் உயிரெடுக்கும் எமன்… பாசமானவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு காவல் தெய்வம்!
கோடங்கி 3.5/5
