
மெட்ராஸ்காரன் விமர்சனம் 2/5
ஒரு சினிமாவுக்கும் அதன் தலைப்புக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கனும்… ஆனா இப்ப எடுக்குற படங்களில் கதையே பெரும்பாலும் இல்லாததாலும், லாஜிக் மீறல்கள் அதிகம் இருப்பதாலும் பல கோடி முதலீட்டு படம் மக்களால் ஏற்கப்படாமல் போகிறது. அந்த வரிசையில் புதுவரவு மெட்ராஸ்காரன்.
புதுக்கோட்டையைச்சேர்ந்த ஷான் நிகம் பிழைப்பு தேடி சென்னை வந்து சம்பாதித்து ஒரு பெண்ணைஉம் காதலித்து கல்யாணம் செய்ய முடிவு செய்கிறார்.
அந்த கல்யாணத்தை சொந்த ஊரான புதுக்கோட்டையில் நடத்த திட்டமிடுகிறார். திருமணத்திற்கு முதல் நாள் மணப்பெண்ணான காதலியை பார்க்க காரில் போகும் ஹீரோவுக்கு கனவு மூலம் பாடல் வருகிறது. பாட்டு முடியும் போது ஒரு விபத்து நடகிறது.
என்ன என யோசிப்பதற்குள் கூட்டம் கூட காருக்கு முன்பாக நிறைமாத கர்ப்பிணியான ஐஸ்வர்யா தத்தா மயங்கி கிடக்கிறார். இவர் கார் மோதி அவர் மயங்கி விழுந்தாரா? ஐஸ்வர்யாத்த்தா குழந்தை என்ன ஆனது?
இதற்கு முன்பாக ஏடிஎம்மிற்கு செல்லும் ஹீரோவுக்கும், அங்கு ஒரு ஆளை அடிக்க தயாராக நிற்கும் கலையரசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இந்த கலையரசன் தான் ஐஸ்வர்யாதத்தா கணவர் என்பதால் மனைவி மீது காரை மோதிய ஹீரோவை கலையரசன் என்ன செய்தார்? ஹீரோ தன் காதலியை மீண்டும் கரம் பிடித்தாரா?
இப்படி ஏராளமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர். ஆனால் பாவம் எங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்பதில் இயக்குனர் பெரும் குழப்பம் அடைந்து விட்டார் போல கதையின் தொடக்கத்திற்கும் கதைக்கும் ஏன் டைட்டிலுக்கும் கிளைமாக்ஸ்சிற்கும் எந்த தொடர்பும் தர முடியாமல் சிக்கி தவித்து அவரோடு படம் பார்க்கிறவர்களையும் குழம்ப வைக்கிறார் இயக்குனர்.
பட்த்துக்கு புதுக்கோட்டைக்காரன் என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும் அல்லது ஹீரோ மலையாள வாசனையுடன் வசனம் பேசுவதால் கேரளாகாரன் என்றும் வைத்திருக்கலாம்.
சத்யாவாக வரும் ஷான் நிகம் பேசும் தமிழில் மலையாள சாயலும், பல இடங்களில் ஓவர் நடிப்பும் அப்பட்டமாக தெரிகிறது.
துரைசிங்கம் கதாபாத்திரத்தை கலையரசன் கச்சிதமாக செய்திருக்கிறார். ஐஸ்வர்யா த்த்தா கொஞ்சம் வந்தாலும் கொடுத்த ரோலை சிறப்பாக செய்திருக்கிறார்.
முதல் பாதி திரைக்கதை மிகவும் மெதுவாக நகர்ந்து பொறுமையை சோதிக்கிறது. இரண்டாம் பாதியில் கதை எங்கே போகிறது என்பதை தீர்மானிக்க முடியாமல் திரைக்கதை நம்மை குழப்பி எடுக்கிறது. வலுவில்லாத திரைக்கதை. சாம் சிஎஸ்ஸின் காது கிழிக்கும் பின்னணி இசை, ரீமிக்ஸ் பாடல்.
புதுக்கோட்டையை பூர்வீகமாக கொண்ட ஹீரோ வேலைக்காக தான் சென்னை சென்றிருக்கிறார். மேலும் நீ எந்த ஊரு என உள்ளூரில் கேட்கும்போது சென்னை என்கிறார். படத்தில் இதுபோல் லாஜிக் மிஸ்டேக்ஸ் ஏராளம்.
மொத்த்த்தில் மெட்ராஸ்காரன் போகும் வழிதெரியாமல் தடுமாறுகிறான்.
- கோடங்கி
