ஐகோர்ட் முன்னாள் நீதிபதிகள் 7 பேர் ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு அவசர கடிதம்!
தற்போதைய ஆளும் ஆட்சி வெற்றி வாய்ப்பை இழக்குமானால் அதிகார மாற்றம் சுமுகமாக இருக்காது என்றும், அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படலாம் என்றும் ஐகோர்ட் முன்னாள் நீதிபதிகள் 7 பேர் ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோருக்கு, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஜி.எம்.அக்பர் அலி, அருணா ஜெகதீசன், டி.ஹரிபரந்தாமன், பி.ஆர்.சிவக்குமார், சி.டி.செல்வம், எஸ்.விமலா, பாட்னா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ் ஆகியோர் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.
அதில் அவர்கள், "பெரும்பான்மையான மக்களின் மனதில் 'உண்மையான அச்சங்கள்' உள்ளன. மக்களின் இந்த அச்சத்தை சிவில் மற்றும் மனித உரிமை அமைப்புகளும் ஆர்வ...









