கடந்த 5 ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட பத்மாசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன்!
கடந்த 5 ஆண்டுகளாக 11,12-ம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட பத்மாசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன்!
சென்னை கே.கே.நகரில் உள்ள பிரபல பள்ளியான பத்மாசேஷாத்திரி பள்ளி மாணவிகளுக்கு வணிவியல் ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், ஆன்லைன் வகுப்பு எடுக்கும்போது, அரை நிர்வாணமாக காட்சி அளித்து, பாலியல் ரீதியிலான சேட்டை செய்ததாகவும், பள்ளி மாணவிகள் பலர் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் அந்த ராஜகோபாலன் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இவர் மீது முன்னாள் மாணவர்கள் பலர் புகார் அளித்துள்ளனர். அதாவது ஆசிரியர் ராஜகோபாலன், பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும் , மாணவர்களுக்கு ஆபாச படங்களின் இணையதள பக்கங்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் அவர்கள் தங்கள் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். இந்த விவகாரம் பெரும...









