செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

இன்றைய முக்கியச் செய்திகள் 10/01/22

இன்றைய முக்கியச் செய்திகள் 10/01/22

HOME SLIDER, kodanki headlines news, NEWS, உலக செய்திகள், செய்திகள்
கொரோனா பரவலைத் தடுக்க பொங்கலுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தேர்தல் நடக்கவுள்ள உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய  5 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம் நீக்கம். முன்களப் பணியாளர்கள் மற்றும் முதியோருக்கு இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சென்னையில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ராமேசுவரம் கோவிலில் பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கையால் போலீஸ் குவிப்பு. ஊரடங்கு நீட்டிப்பா? - கூடுதல் கட்டுப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை. சென்னையில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. சென்னையில் சனிக்கிழமை 5 ஆயிரத்து 98 பே...
பிரேசில் ஏரியில் படகுகள் மீது பாறை விழுந்து 7 பேர் உயிரிழப்பு

பிரேசில் ஏரியில் படகுகள் மீது பாறை விழுந்து 7 பேர் உயிரிழப்பு

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
  பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கேபிடோலியோ பகுதியில் அமைந்துள்ள ஃபர்னாஸ் நிர்வீழ்ச்சி பகுதிக்கு  ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். மோட்டார் படகுகள் மூலம் அருவி பகுதிக்கு அவர்கள் சென்ற நிலையில், அங்குள்ள உயரமான மலைப்பகுதியில் இருந்து பாறை  ஒன்று உடைந்து மூன்று படகுகள் மீது விழுந்தது.  இதில் 7 பேர் உயிரிழந்துனர்.  32 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 20 பேரை காணவில்லை என்று மினாஸ் ஜெரைஸ் தீயணைப்புத்துறை அதிகாரி கர்னல் எட்கார்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அங்குள்ள பாறை சுவர்கள், குகைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்த நிலையில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்த வீடியோக்காட்சிகள் சமுக வளைதளங்களில் பகிரப்பட்டன. அந்த வீடியோவில் பலர் கற்கள் விழுகின்றன என்று எச்சரிக்கை விடுப்பதும்  மற்ற படகுகளில் இருந்தவர்களை விலகிச் செல்ல...
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முதல்வர் திட்டம் இதுதானாம் – அமைச்சர் மாசு பளீச் பதில்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முதல்வர் திட்டம் இதுதானாம் – அமைச்சர் மாசு பளீச் பதில்

HOME SLIDER, NEWS, politics, வீடியோ
  தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முதல்வர் திட்டம் இதுதானாம் - அமைச்சர் மாசு பளீச் பதில்   https://youtu.be/TLXMwJmu9JE
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு போடப்படுமா? அமைச்சர் மா.சு. சூசகம்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு போடப்படுமா? அமைச்சர் மா.சு. சூசகம்

HOME SLIDER, politics, செய்திகள்
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு போடப்படுமா? அமைச்சர் மா.சு. சூசகம்   https://youtu.be/vBCa8mQfV5k   #MaSubramanian #covid19 #TNLockdown #Omicron #corona
ஆந்திராவிலும் பாஜகவை வெளுத்த Dr.திருமாவின் அனல் பேச்சு

ஆந்திராவிலும் பாஜகவை வெளுத்த Dr.திருமாவின் அனல் பேச்சு

HOME SLIDER, politics, செய்திகள்
ஆந்திராவிலும் பாஜகவை வெளுத்த Dr.திருமாவின் அனல் பேச்சு  Thirumavalavan MP Latest Fire Speech   https://youtu.be/F8XWAtwCU3E   #DrThirumaMP #Thirumalatestspeech #ThirumavalavanMP #VCK #ThirumaSpeechinandra    
தமிழக உளவுத்துறையில் முதல் பெண் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்ட ஆசியம்மாளுக்கு திமுக எம்.பி.கனிமொழி வாழ்த்து!  

தமிழக உளவுத்துறையில் முதல் பெண் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்ட ஆசியம்மாளுக்கு திமுக எம்.பி.கனிமொழி வாழ்த்து!  

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழக உளவுத்துறையில் முதல் பெண் ஐ.ஜி.யாக நியமனம் பெற்றிருக்கும் ஆசியம்மாளுக்கு திமுக எம்.பி.கனிமொழி வாழ்த்து! தமிழக உளவுத்துறையில் முதல் பெண் ஐ.ஜி.யாக நியமனம் பெற்றிருக்கும் தூத்துக்குடி மாவட்டம், கொங்கராயக் குறிச்சியில் பிறந்த ஆசியம்மாளுக்கு திமுக எம்.பி.கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள டேவிட்சன் தேவாசிர்வாதம் தமிழக உளவுத்துறையில் நீண்ட காலம் பணிபுரிந்து அனுபவம் வாய்ந்தவர். அதனால் அவருக்கு உளவுத்துறை ஏடிஜிபி பதவியை புதிய திமுக அரசு வழங்கியுள்ளது. அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரியாக டிஐஜி அந்தஸ்த்தில் பெண் அதிகாரியான ஆசியம்மாள் அமர்த்தப்பட்டுள்ளார். இது தமிழக காவல்துறையிலேயே முதன்முறையாகும். குரூப்-1 அதிகாரியான ஆசியம்மாள் நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர். 56 வயது நிறைந்த இவர் எம்எஸ்சி, எம்டெக் மற்றும் எம்பிஏ பட்டம் பெற்றவர். தூத்துக்கு...
சிறையில் அடைக்கப்பட்ட சவுதி இளவரசி 3 ஆண்டுகளுக்கு பின் விடுதலை!

சிறையில் அடைக்கப்பட்ட சவுதி இளவரசி 3 ஆண்டுகளுக்கு பின் விடுதலை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
சிறையில் அடைக்கப்பட்ட சவுதி இளவரசி 3 ஆண்டுகளுக்கு பின் விடுதலை! சவுதி அரச குடும்ப உறுப்பினரான இளவரசி பாஸ்மா பின்ட் சவுத் (57), மற்றும் அவரது மகள் சுஹோத் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 2019 மார்ச் மாதத்தில் மருத்துவ சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து செல்ல திட்டமிட்டு விமான நிலையம் செல்லும் நிலையில் இளவரசி பாஸ்மா சவுத் கைது செய்யப்பட்டார். உடல் நலனைக் கருத்தில் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும் என சவுதி மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில், கடந்த 3 ஆண்டாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சவுதி அரேபிய இளவரசி பாஸ்மா மற்றும் அவரது மகள் ஆகியோர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். மேலும், தடுப்புக் காவலில் இருந்தபோதும் அவர்மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என அங்குள்ள மனித உரிமைகள் கு...
நாய்குட்டிக்கு ரூ.7 லட்சம் செலவு செய்து பிறந்தநாள் கொண்டாட்டம் – உரிமையாளர் மீது வழக்கு!

நாய்குட்டிக்கு ரூ.7 லட்சம் செலவு செய்து பிறந்தநாள் கொண்டாட்டம் – உரிமையாளர் மீது வழக்கு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாய்குட்டிக்கு ரூ.7 லட்சம் செலவு செய்து பிறந்தநாள் கொண்டாட்டம் - உரிமையாளர் மீது வழக்கு! குஜராத் மாநிலம் கிருஷ்ணா நகர் மாவட்டத்தில் உள்ள திரண்பார்க் பகுதியை சேர்ந்தவர் சிரக் படேல், ஊர்விஸ் படேல். அண்ணன், தம்பிகளான இவர்கள் இருவரும் செல்லமாக நாய் குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார்கள். நேற்று முன்தினம் அந்த செல்ல நாய்குட்டிக்கு பிறந்தநாளாம். இதையொட்டி கிருஷ்ணா நகரில் மிகவும் பிரமாண்டமான பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. உறவினர்கள் அனைவருக்கும் அவர்கள் அழைப்பிதழ் அனுப்பி இருந்தனர். நுற்றுக்கணக்கானவர்கள் அந்த செல்ல நாய்க்குட்டி பிறந்த நாளுக்கு திரண்டு வந்தனர். நாய் குட்டியை கையில் வைத்துக்கொண்டு சகோதரர்கள் இருவரும் கேக் வெட்டினார்கள். முதல் துண்டு கேக் அந்த நாய்குட்டிக்கு ஊட்டப்பட்டது. அபி என்று செல்லமாக அழைக்கப்படும் அந்த நாய்க்குட்டிக்கு பட்டுத்துணியில் உட...
நடிகர் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா தொற்று!

நடிகர் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா தொற்று!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடிகர் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா தொற்று! தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள பதிவில், புத்தாண்டு பாசிடிவ் ரிசல்ட்டுடன் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், பயங்கரமான உடல்வலி, மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு மற்றும் காய்ச்சலும் இருக்கிறது. விரைவில் மீண்டு வருவேன் என்று அவருடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிள்ளார்....
விக்ரம் வேதா ரீமேக் படத்தின் அடுத்த அறிவிப்பு!

விக்ரம் வேதா ரீமேக் படத்தின் அடுத்த அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விக்ரம் வேதா ரீமேக் படத்தின் அடுத்த அறிவிப்பு! புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா இயக்கிய புஷ்கர் - காயத்ரி இப்படத்தை இந்தியிலும் இயக்கி வருகின்றனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இப்படம் குறித்து அறிவிப்புகள் வெளியாகி வந்தன. அதனை தொடர்ந்து இப்படத்தின் அறிவிப்பொன்றை இயக்குனர் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இப்படத்தின் வேதாவுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியிடப்படும் என புஷ...