கீர்த்தி சுரேஷ் சிரிப்புக்கு ஸ்ரீரெட்டி கண்டனம்
சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தன்னையும் படுக்கையில் பயன்படுத்தி விட்டு நடிக்க வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டதாக கூறினார்.
பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் பட்டியலையும் வெளியிட்டார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் அந்த பட்டியலில் இருந்தனர். இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்கள் சங்கத்தினர் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக திரண்டனர். தேசிய மகளிர் ஆணையமும் இந்த பிரச்சினையில் தலையிட்டது. ஐதராபாத்தில் பாதுகாப்பு இல்லை என்று ஸ்ரீரெட்டி தற்போது சென்னையில் குடியேறி இருக்கிறார். அவரது வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாக தயாராகிறது.
இந்த படத்தை தடை செய்யும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று நடிகர் ச...









