ஸ்டெய்லா கூலிங்கிளாஸ் போட்டு கோட் போட்டு இடுப்புல லுங்கி கட்டி ஒருத்தர் வந்தா எப்படி இருக்கும்... அப்படி இருக்கு "விண்வெளி பயண குறிப்புகள்" படம்.
டைட்டில் மார்டனா வைச்சிட்டு கதை முழுக்க கிராமத்து வாசனையில் இயக்குனர் அசத்தி இருக்கார்.
அப்படி என்ன கதை...
ஊரில் பெரிய தாதா ஆத்விக் ஜலந்தர் ஊரையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். பெண் அமைச்சர் ஒருவரின் ஆசியோட ஊரையே அடக்கி வைச்சிருக்கார். அவரை எதிர்க்க அந்த ஊரில் யாருக்கும் தைரியம் இல்லை.
ஜலந்தருக்கு சிறு வயதில் இருந்தே விண்வெளிக்கு போக வேண்டும் என்று ஆசை. இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து வரும் ஒருவர் விண்வெளி பற்றி பேச, அவரிடம் பேச்சுக் கொடுக்கிறார் ஜலந்தர். விண்வெளிக்குச் செல்ல பல கோடிகள் வரை செலவாகும் என்றும், அந்த பணத்தை கொடுத்தால் விண்வெளிக்கு போக தான் உதவி செய்வதாக அந்த நபர் கூறுகிறார்.
இதுக்...
கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றி விழாவில் விவசாய மேம்பாட்டுக்கு 1 கோடி ரூபாய் வழங்கினார் நடிகர் சூர்யா . விவசாயத்தில் சாதனை படைத்த 5 பேருக்கு தலா இரண்டு லட்சம் வழங்கப்பட்டது.
கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் தயாரிப்பாளர் சூர்யா , நடிகர் கார்த்தி , 2D ராஜ் சேகர் பாண்டியன் , நடிகர்கள் சத்யராஜ் , பொன்வண்ணன் , சரவணன் , சூரி , மாரிமுத்து , இளவரசு , ஸ்ரீமண் , மனோஜ் குமார் , நாயகி சயீஷா , பிரியா பவானி ஷங்கர் , அர்த்தனா பினு , பானு ப்ரியா , மௌனிகா , ஜீவிதா , இந்துமதி , கலை இயக்குனர் வீர சமர் , எடிட்டர் ரூபன் , இசையமைப்பாளர் டி. இமான் உள்ளிட்ட படக்குழுவுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் சூர்யா பேசியது :- “ எல்லா புகழும் இறைவனுக்கே “ இயக்குநர் பாண்டிராஜை தவிர இப்படத்தை யாராலும் சிறப்பாக எடுத்து வெற்றி படமாக இதை கொடுத்திருக்க முடியாது. பிளாக் பஸ்டர் மே...
அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக டி.சிவா மிகப் பிரமாண்டமாக தயாரித்துக் கொண்டிருக்கும் பார்ட்டி படம் விரைவில் வெளி வர உள்ளது.
இதை தொடர்ந்து அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் "சார்லி சாப்ளின்2"
இந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப் பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே.
முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் நாயகனாக நடிக்கிறார்.
கதா நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அதா சர்மா நடிக்கிறார்.
முதல் பாகத்தில் நடித்த பிரபு இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மற்றும் சந்தனா, அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா,செந்தில், ரவிமரியா, கிரேன் மனோகர், செந்தி, சாம்ஸ்,காவ்யா, அமீத்,பா...
மோகினி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது இதில் நாயகி த்ரிஷா , இயக்குனர் மாதேஷ் , தயாரிப்பாளர் லட்சுமன் , நகைச்சுவை நடிகர் சுவாமிநாதன் , கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் மாதேஷ் பேசியது :
இந்த படத்தை மிகபிரமாண்டமான படமாக உருவாக்கியுள்ளோம். படத்தில் நாயகி த்ரிஷா சிறப்பாக நடித்துள்ளார். த்ரிஷா நினைத்திருந்தால் கமர்ஷியல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம். ரொமாண்டிக் காட்சிகளில் நடித்துவிட்டு அழகாக சென்றிருக்கலாம். ஆனால் இந்த படத்தில் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். இந்த படம் ஹாரர் படமாக இருந்தாலும் படத்தில் நிறைய எமோஷன்ஸ் காட்சிகள் குடும்பத்தை கவரும் வகையில் இருக்கும். இது ஹாரர் படமாக இருந்தாலும் வழக்கமான படமாக இருக்காது. படத்தில் எபி ஜெனெடிக்ஸ் என்ற கான்செப்ட் உள்ளது. டிஎன்ஏ தொடர்பு பற்றிய விஷயங்கள் தான் படத்தின் முக்கியமான விஷயம். இப்படத்தின் vfx க...
கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான சோலையம்மா படத்தில் கொடூர வில்லனாக நடித்தவர் கரிகாலன்...
அதற்கு பிறகு தமிழ் தெலுங்கு கன்னட மொழிகளில் 70படத்திற்கும் மேல் நடித்திருந்தார்...
அதில் ரமணா அரவான் அடிமைசங்கிலி நிலாவே வா கருப்பி ரோஜா தயா தேவன் படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் இயக்கி நடித்த படம் "வைரவன் "
சில காலம் நடிப்பு இயக்கம் எதிலும் ஈடு படாமல் ஒதுங்கி இருந்தார்...ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்து உச்சத்தை தொட்டார்.
தற்போது மீண்டும் கலைத்துறைலயில் கால் பதிக்கிறார்...
அரசியலில் நேர்மையானவர்.. ஊழலற்றவர்...தன்னலம் பார்க்காமல் பொது நல நோக்கம் கொண்டவர் என்று புகழப்பட்டவர் காமராஜர். அவர் மீது அதிக பற்று கொண்டவர் கரிகாலன். அதனால் காமராஜர் கனவுக் கூடம் என்கிற பெயரில் ஒரு பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.
மது ஒரு மனிதனையும் அவன் குடும்பத்தையும் மட்டும் அல்ல..ஒரு நாட்டையே சின்னா பின்...
ஆகஸ்ட் 3ஆம் தேதி மதுரையில் மிக பிரமாண்டமான முறையில் நடக்கும் சீமராஜா படத்தின் இசை வெளியீடு!
ஒரு படத்தை மார்க்கெட்டிங் செய்யும்போது மிக முக்கியமான ஒரு விஷயம் படத்தை எப்படி மக்கள் முன் நிலைநிறுத்துகிறோம் என்பது தான். 24ஏஎம் ஸ்டூடியோஸ் ஆர்.டி.ராஜா நவீன மார்க்கெட்டிங் மற்றும் வர்த்தகத்தில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய ஒரு தயாரிப்பாளர். அவர் தனது திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க எல்லா முயற்சிகளையும் எடுக்கிறார். அந்த வகையில் சமீபத்திய முயற்சியாக தங்களது பெருமைமிகு படைப்பான 'சீமராஜா' படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்துகிறார் ஆர் டி ராஜா. ஆகஸ்டு 3ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்த இசை விழாவை மிகப்பெரிய வெற்றியாக மாற்ற மொத்த குழுவும் கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
https://bit.ly/2uMRH03
மதுரை தமிழ்த் திரையுலகின் இதய துடிப்பாக விளங்கும் நகரம். இங்குள்ள ரசிகர்கள் சினிமாவுக்கு அளி...
ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பேய்பசி. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டு இசையை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக் கொண்டனர்.
முழுக்க டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் நடக்கும் முதல் படம் இது தான் என்று நினைக்கிறேன். இந்த படத்தின் முதுகெலும்பு யுவன் ஷங்கர் ராஜா தான். பின்னணி இசையை மிகச்சிறப்பாக கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தனர், கதையை கூட கேட்கவில்லை. காஸ்ட்யூம் இந்த படத்தில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த படத்தில் லைவ் சவுண்ட் முயற்சி செய்திருக்கிறோம். வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன் என்றார் இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவி...