புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

‘துருவ் விக்ரம் – மாரி செல்வராஜ்’ இணையும் படத்தின் அப்டேட்!

‘துருவ் விக்ரம் – மாரி செல்வராஜ்’ இணையும் படத்தின் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ்’ இணையும் படத்தின் அப்டேட்! விக்ரமின் மகன் துருவ், ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான இப்படத்தில், துருவ் விக்ரமின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து தற்போது, தனது தந்தையுடன் இணைந்து ‘சியான் 60’ படத்தில் நடித்து வருகிறார் துருவ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து நடிகர் துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
பீஸ்ட் ஷூட்டிங்கின் போது பிக்பாஸ் கவினை பாராட்டிய விஜய்!

பீஸ்ட் ஷூட்டிங்கின் போது பிக்பாஸ் கவினை பாராட்டிய விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பீஸ்ட் ஷூட்டிங்கின் போது பிக்பாஸ் கவினை பாராட்டிய விஜய்!~ ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவின், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்ட கவின் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற அவர், தற்போது இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். நெல்சன் இயக்கத்தில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றி வரும் கவின், பீஸ்ட் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை பகிர்ந்துள்ளார். அதன்படி, பீஸ்ட் படப்பிடிப்பு துவங்கியதில் இருந்து நடிகர் விஜய், செட்டில் இருப்பவர்கள் அனைவரிடமும் இயல்பாக பழகியதாக கூறியுள்ள கவின், மேலும் தனது நடிப்பில் வெளியா...
பாடகியாக அறிமுகமான பிக்பாஸ் லாஸ்லியா!

பாடகியாக அறிமுகமான பிக்பாஸ் லாஸ்லியா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
பாடகியாக அறிமுகமான பிக்பாஸ் லாஸ்லியா! இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். அந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்பும் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவர் கைவசம் ‘பிரெண்ட்ஷிப்’, ‘கூகுள் குட்டப்பன்’ போன்ற படங்கள் உள்ளன. இதில் பிரெண்ட்ஷிப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கி இருக்கும் இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடித்துள்ளார் லாஸ்லியா. இந்நிலையில், இப்படத்தின் மூலம் நடிகை லாஸ்லியா, பாடகியாகவும் அறிமுகமாகி உள்ளார். பிரெண்ட்ஷிப் படத்தில் இடம்பெறும் ‘அடிச்சு பறக்கவிடுமா’ என்கிற குத்துப் பாடலை தேவாவுடன் இணைந்து பாடியுள்ளார் லாஸ்லியா. இந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே...
ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாராகும் பாகுபலி வெப் தொடர் – ஹீரோயின் யார் தெரியுமா!

ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாராகும் பாகுபலி வெப் தொடர் – ஹீரோயின் யார் தெரியுமா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாராகும் பாகுபலி வெப் தொடர் - ஹீரோயின் யார் தெரியுமா! ராஜமவுலி இயக்கத்தில் 2 பாகங்களாக வெளியான படம் ‘பாகுபலி’. இதில் பிரபாஸ், நாசர், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து இருந்தனர். சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது. தற்போது பாகுபலி கதை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெப் தொடராக தயாராகிறது. பாகுபலியில் ரம்யா கிருஷ்ணன் நடித்த ராஜமாதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தின் இளம் வயது வாழ்க்கையை மையமாக வைத்து இந்த தொடரை எடுக்கின்றனர். பாகுபலி பட காட்சிகளுக்கு முந்தைய சம்பவங்கள் இந்த தொடரில் இடம்பெற உள்ளன. சுமார் 9 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் தொடர், ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் இளம் வயது சிவகாமிதேவி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ...
நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் சமுத்திரகனி படம்…. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் சமுத்திரகனி படம்…. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் சமுத்திரகனி படம்.... ரிலீஸ் தேதி அறிவிப்பு! தனுஷின் ‘திருடா திருடி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுப்ரமணியம்சிவா. அதன்பின் பொறி, யோகி, சீடன் போன்ற படங்களை இயக்கிய அவர், வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் சமுத்திரகனியை வைத்து இவர் இயக்கியிருக்கும் படம் ‘வெள்ளை யானை’. நடிகை ஆத்மியா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து, திரையரங்க வெளியீட்டிற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தது படக்குழு. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இப்படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளனர். அதன்படி வர...
புதிய தளர்வுகள் அமல்- தமிழகம் முழுவதும் பஸ்கள் இயக்கம்!

புதிய தளர்வுகள் அமல்- தமிழகம் முழுவதும் பஸ்கள் இயக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
புதிய தளர்வுகள் அமல்- தமிழகம் முழுவதும் பஸ்கள் இயக்கம்! தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மே மாதம் 24-ந்தேதி முதல் 2 வாரத்திற்கு தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு நோய் தொற்று சற்று தணிந்ததால் ஜூன் 7-ந்தேதி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் இருந்து ஒவ்வொரு வாரமும் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி 5 தடவை தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நோய் தாக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தளர்வுகள் அறிவிப்பதற்கு முன்னதாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துவது வழக்கம். அதன்படி கடந்த 2-ந்தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்கள் மேலும் புதிய தளர்வுகளை அறிவிக்கலாம் என்று யோசனை தெரிவித்தனர். அதன்படி புதிய தளர்வுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிய...
சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிரபல நடிகை – வைரலாகும் புகைப்படம்!

சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிரபல நடிகை – வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, sports, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுவாக சென்னை கடற்கரை சாலை, ஈசிஆர் சாலையில் சைக்கிளிங் மேற்கொள்வதை விடாமல் செய்து வருகிறார். தற்போது முதல்வர் ஆன பிறகும், பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் சைக்கிளிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் ஞாயிற்றுகிழமையான இன்று கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் சென்றார் மு.க.ஸ்டாலின். வழிநெடுக போலீசார் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர். கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான இந்த சைக்கிள் பயணத்தில் அவரது நண்பர்கள் சிலரும் பங்கேற்றனர். இந்நிலையில் சைக்கிளிங் சென்ற முதல்வருடன், நடிகை யாஷிகா ஆனந்த் செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் லைக்குகளும் குவிந்து வருகிற...
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தை ஹீரோவாக அறிமுகம் செய்யும் பிரபல நடிகை!

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தை ஹீரோவாக அறிமுகம் செய்யும் பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தை ஹீரோவாக அறிமுகம் செய்யும் பிரபல நடிகை! விஜய் ஆண்டனி, ஜீ.வி.பிரகாஷ் ஆகியோர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர்கள். தற்போது இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இடம்பிடித்து உள்ளனர். இவர்களை தொடர்ந்து தற்போது மற்றொரு முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத்தும், விரைவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத்தை ஹீரோவாக்கும் முயற்சியில் நடிகை சார்மி இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை சார்மி, தற்போது தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, இயக்குனர் பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார். தற்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும் லிகர் படத்தை தயாரித்து வரும் சார்மி, அடுத்ததாக தேவி ஸ்ரீ பிரசாத் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை...
சந்திரமுகி பட வாய்ப்பை இழந்ததால் அழுதேன் – நடிகை சதா!

சந்திரமுகி பட வாய்ப்பை இழந்ததால் அழுதேன் – நடிகை சதா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
சந்திரமுகி பட வாய்ப்பை இழந்ததால் அழுதேன் - நடிகை சதா! ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சதா, அந்த ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். ‌ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ படத்தில் நாயகியாக வந்து பரபரப்பாக பேசப்பட்டார். தொடர்ந்து தமிழ்பட உலகின் முன்னணி நாயகியாக வலம் வந்தார். பின்னர் பட வாய்ப்பு இல்லாததால் ஒரு பாடலுக்கு ஆடும் அளவு இறங்கி வந்தார். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். ரஜினியின் சந்திரமுகி பட வாய்ப்பை நழுவவிட்டது குறித்து நடிகை சதா, சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சந்திரமுகி படத்தில் நடிப்பதற்காக இரண்டு முறை வாய்ப்புகள் தேடி வந்தும் சில சூழல்கள் காரணமாக, அதில் நடிக்க முடியாமல் போனது. அதை நினைத்து நான் சில சமயம் அழுதும் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் சதா. மாளவிகா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவரை அழைத்ததா...